வேலைக்கு செல்பவர்கள் அனைவரும் இருக்கும் முக்கியமான பிரச்னை பணத்தை சேமிப்பது தான். இதற்காக உதவி செய்ய பல மொபைல் ஆப்களும் பல உருவாகியுள்ளன. அந்தவகையில் தற்போது பணம் சேமிப்பிற்கு உள்ள டாப் 5 மொபைல் செயலிகள் என்னென்ன?


52 வீக் பண சேமிக்கு சேலஞ்ச்:






பணம் சேமிப்பு தொடர்பு சிறப்பாக இருக்கும் செயலிகள் 52 வீக் பண சேமிக்கு சேலஞ்ச் செயலியும் ஒன்று. பணம் சேமிக்க சரியாக திட்டமிடல் இல்லாதவர்கள் முக்கியமாக இந்த செயலியை பயன்படுத்தலாம். இந்த செயலியின் மூலம் ஒரு ஆண்டிற்கு நீங்கள் வைத்த லட்சிய சேமிப்பை அடைய வைப்பது தான். 


 


த்ரிவ்:




இந்த செயலியில் பல வசதிகள் உள்ளன. இச்செயலி முதலில் உங்களின் பண சேமிப்பு லட்சியம் தொடர்பாக கேள்விகளை கேட்கும். அதற்கு நீங்கள் கொடுக்கும் பதில்களை வைத்து அந்த இலக்கை அடைய உதவி செய்யும். அத்துடன் உங்களுக்கு பண சேமிப்பு தொடர்பான நல்ல ஊக்கத்தையும் அளிக்கும் வகையில் இது உள்ளது. மேலும் உங்களுடைய இலக்கை நோக்கிய பயணத்தையும் அவ்வபோது காட்டுகிறது. 


UAN எண்ணினை வீட்டிலிருந்தே ஆன்லைனில் பெறுவது எப்படி? இதோ உங்களுக்கான விபரங்கள்!


பிக்கி கோல்ஸ்:




இந்தச் செயலி த்ரிவ் செயலியை போல் உங்களுடம் இருந்து சேமிப்பு இலக்கை பெரும். அதன்பின்னர் அதை அடைய உங்களுக்கு தேவையான வழிகளை பரிந்துரைக்கும். இச்செயலியின் வடிவமைப்பு சற்று நன்றாக இருக்கும். பணம் சேமிக்க இதுவும் ஒரு முக்கியமான செயலி. இதில் மாதம், வாரம், தினசரி என அனைத்து வகையான இலக்குகளையும் நிர்ணயிக்கலாம்.


சேவ்.எல்ஒய்:




சேவ்.எல்ஒய் என்ற செயலி மூலம் நீங்கள் உங்களுடைய இலக்கை ஒரு இமேஜ் வடிவத்தில் பதிவிடலாம். இந்த இமேஜை இச்செயலி அவ்வப்போது காண்பித்து கொண்டே இருக்கும். அது பணம் சேமிக்க உங்களுக்கு ஒரு பெரிய தூண்டுகோளாக அமையும். அத்துடன் த்ரிவ் மற்றும் பிக்கி கோல்ஸ் செயலிகளை போல் இதிலும் நீங்கள் லட்சியத்தை நிர்ணயித்து சேமிக்கலாம். 


சேவிங்ஸ் டிராக்கர்:




இந்தச் செயலி மூலம் பண சேமிப்பு மற்றும் பண செலவு தொடர்பாக தெரிந்து கொள்ள முடியும். இது உங்கள் வருமானத்தை வைத்து அதற்கு ஏற்ப வரவு மற்றும் செலவுகளை பட்ஜெட் போல காட்ட உதவும். அத்துடன் உங்களுடைய வருமானத்தை வைத்து எவ்வளவு சேமிக்க முடியும் என்பதையும் காட்டுகிறது. அத்துடன் இந்த செயலி மூலம் உங்களுடைய சேமிப்பு இலக்கை தீர்மானித்து வைத்து கொள்ள முடியும். மேலும் இதுவும் மற்ற செயலிகளை போல் அவ்வப்போது அந்த இலக்கை நியாபக படுத்தும் வசதி கொண்டுள்ளது. 


இறுதியாக கவனிக்க வேண்டிய ஒன்று எந்த செயலியை நீங்கள் பதிவு இறக்கம் செய்தாலும் அதன் விதிமுறைகள் மற்றும் கொள்கை சார்ந்த விஷயங்களை முறையாக படித்துவிடுங்கள். மேலும் இந்தச் செயலிகள் உங்களுடைய மொபைல் போனில் உள்ள எந்தெந்த வசதிகளை பயன்படுத்துகிறது என்பதையும் சரியாக கவனித்து கொள்ளுங்கள். 


பணத்தை எப்படி ஹேண்டில் பண்ணனும் : காலேஜ் முடிச்சு வேலை தேடுறவங்க இத ஃபாலோ பண்ணுங்க!