மாத சம்பளம் வாங்கும் அனைத்து

  ஊழியர்களுக்கு ஒரு சமூக பாதுகாப்பு திட்டமாக பிஎஃப் என அழைக்கப்படும் வருங்கால வைப்பு நிதி திட்டம் உள்ளது. வருங்கால வைப்பு நிதியில் சேர வேண்டும் என்றால், (UAN) எண் என்பது அவசியமான ஒன்றாக உள்ளது. எனவே தான் பிஎப் அலுவலகம் 12 இலக்க எண்ணான யுஏஎன்(UAN) எண்ணினை ஊழியர்களையே  துவங்கலாம் என தெரிவித்துள்ளனர். இதன் மூலம் பாஸ் புத்தகத்தைப் பார்வையிடவும், EPFO கணக்கில் உள்ள மொத்த தொகையினை சரிப்பார்க்கவும் முடிகிறது.  



ஊழியர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்க கூடிய இந்த யுஏஎன்(UAN) எண்ணினை எப்படி பெறுவது என்பதில் பலருக்கு சந்தேகம் இருக்கும். தற்போது ஊரடங்கு என்பதால் அலுவலகத்திற்கு சென்று கூட நம்மால் எந்தவித தகவல்களையும் பெற முடியாது.  எனவே இந்த 12 இலக்க UAN எண்ணினை ஆன்லைனின் மூலமாக வீட்டிலிருந்தே பெறுவதற்கு நாம் மேற்கொள்ளவுள்ள வழிமுறைகள் பற்றி இப்பொழுது தெரிந்து கொள்வோம்.


12 இலக்க UAN  எண்ணினை ஆன்லைன் மூலம் உருவாக்குவது எப்படி?


UAN  எண்ணினை பெறுவதற்கு முன்னர் ஆதார் எண்ணினை முதலில் எடுத்துக்கொள்ள வேண்டும். அதே போன்று ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணினை அருகில் வைத்திருக்க வேண்டும்.  நாம் அனைத்து செயல்முறைகளை வெற்றிக்கரமாக முடிப்பதற்கு ஒரு முறை கடவுச்சொல் ( One Time Password- OTP) மொபைல் எண்ணிற்கு எஸ்.எம்.எஸ் மூலமாக  அனுப்பப்படும்.


 



  1. முதலில் நாம் EPFO  போர்டலில் உள்ள உறுப்பினர் இ-சேவாவைப் ( Member e -sewa) பார்வையிடவும்.

  2. முக்கியமான இணைப்புகள் பிரிவின் கீழ் செயலில் உள்ள Active UAN ஐக்கிளிக் செய்யவும்.

  3. இதனையடுத்து ஆதார் விருப்பத்தை கிளிக் செய்து, பின்னர் உங்களது ஆதார் எண்ணினை உள்ளிடவும்.

  4. தொடர்ந்து உங்களது பெயர், பிறந்த தேதி, மொபைல் எண் மற்றும் கேப்ட்சா குறியீட்டை (CAPTCHA CODE) உள்ளிட்டவும்

  5. Get Authorization Pin பட்டனை அழுத்தவும்

  6. தற்பொழுது நீங்கள் ஓரு புதிய திரையினை பெறுவீர்கள். அதில் உங்களுக்குக் காண்பிக்கப்படும் விபரங்கள் சரியாக இருக்கின்றனவா? என்பதை உறுதி செய்து கொள்ளவும்.

  7. இதனையடுத்து Agree என்ற தேர்வுப்பெட்டியை கிளிக் செய்ய வேண்டும்.

  8. இப்பொழுது உங்கள் மொபைலில் நீங்கள் பெறும் OTP யை உள்ளிடவும்.

  9. இறுதியாக Validate OTP மற்றும் Active Uan யை கிளிக் செய்யவும்.


இந்த செயல்முறைகளை எல்லாம் முடிந்தவுடன், பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் உங்கள் UAN எண் மற்றும் கடவுச்சொல்லினைப்பெறுவீர்கள். இதனைப்பயன்படுத்தி EPFO போர்டலில் உள்நுழைந்து உங்கள் கணக்கு செயல்படுகிறதா? என்பதை நீங்களே சரிப்பார்த்துக்கொள்ளலாம்.