அஞ்சலக ஆயுள் காப்பீடு பாலிசிக்கான பிரீமியம் தொகை செலுத்தாமல் காலாவதி ஆகியிருந்தால், அதனை புதுப்பிப்பதற்காக சிறப்பு முகாம்களுக்கு இந்திய தபால்துறை ஏற்பாடு செய்துள்ளது.


போஸ்ட் ஆபீஸ் இன்சூரன்ஸ் பாலிசி காலாவதி ஆயிடுச்சா?


சமீபத்திய 10 ஆண்டுகளில் ஏற்பட்ட சுகாதார முன்னேற்றங்கள், மேம்பட்ட வாழ்க்கை நிலை மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை பற்றிய விழிப்புணர்வு ஆகியவை உலகம் முழுவதும் ஆயுட்காலம் அதிகரிப்புக்கு குறிப்பிடத்தக்க வகையில் பங்காற்றியுள்ளன.


ஆயுட்காலம் அதிகரிக்கும் போது, நீரிழிவு, இதய நோய் அல்லது புற்றுநோய் போன்ற பொதுவான தொற்றாத நோய்களில் (NCDs) ஒன்றை எதிர்கொள்ளும் நிலைமை அதிகரிக்கும். எனவே, உங்கள் நிதி எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது மிகவும் அவசியமாகிறது.


நிச்சயமற்ற சூழ்நிலைகளில் ஆயுள் காப்பீடு திட்டங்கள் உங்களுக்கு பேருதவியாக அமைகிறது. ஆனால், நிதி நெருக்கடி காரணமாகவும் சில தவிர்க்க முடியாத காரணங்களாலும், ஆயுள் காப்பீடு திட்டங்களுக்கான பிரீமியம் தொகையை செலுத்த முடியாத சூழல் ஏற்பட்டிருக்கலாம்.


முக்கிய அறிவிப்பு வெளியிட்ட அஞ்சல்துறை:


அப்படி செலுத்த முடியாமல் போனவர்களுக்கு இந்திய துபால்துறை முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அஞ்சலக ஆயுள் காப்பீடு பாலிசி வைத்துள்ள வாடிக்கையாளர்கள், தங்களது காப்பீட்டு பத்திரம் பிரீமியம் தொகை கட்டாமல் காலாவதி ஆகியிருந்தால், அதனை புதுப்பித்துகொள்ள ஏதுவாக, சிறப்பு முகாம்களுக்கு அஞ்சல்துறை ஏற்பாடு செய்துள்ளது.


செப்டம்பர் 18-ம் தேதி முதல் அக்டோபர் 10-ம் தேதி வரை  அம்பத்தூர் தலைமை தபால் நிலையம், (044-26245545), ஆவடி பாசறை தலைமை தபால் நிலையம் (044-26385093), தாம்பரம் தலைமை தபால் நிலையம் (044-22266204) ஆகிய இடங்களில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் சிறப்பு முகாம்களில் பங்கேற்று பாலிசிகளை புதுப்பித்துக் கொள்வதன் மூலம் உங்களது குடும்பத்தின் பாதுகாப்பை உறுதி செய்திடுமாறு தாம்பரம் கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் கேட்டுகொண்டுள்ளார்.


குறைந்த ஆவணங்களுடன் பாலிசிகளை புதுபிக்கும் வசதியுடன் அஞ்சல்துறை நிபுணர்களின் தனிப்பட்ட வழிகாட்டுதல்களும் வழங்கப்படும். பாலிசிகளை புதுப்பிக்கும் அனைவருக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்படும் என்றும் அவர் தெரி்வித்துள்ளார்.


இதையும் படிக்க: "நாக்கை வெட்டுனா 11 லட்சம் தரேன்" மிரட்டல் விடுத்த எம்எல்ஏ.. ராகுல் காந்தி உயிருக்கு ஆபத்தா?