ஒரு மனிதனின் வாழ்க்கையில் சேமிப்பு என்பது அத்தியாவசியமான ஒன்றாக இருக்கிறது. அந்தவகையில், இந்தியாவில் வங்கிகளுக்கு இணையாக தபால் நிலையங்களில் சிறந்தவகையில் சேமிப்பு திட்டங்கள் இருக்கின்றன. இதனால் மக்கள் தபால் நிலையங்களில் இருக்கும் சேமிப்பு திட்டங்களில் அதிகளவு முதலீடு செய்து வருகின்றனர்.
அந்த வகையில் ஆண் குழந்தைகளுக்காக தபால் நிலையங்களில் இருக்கும் சேமிப்புத் திட்டம்தான் ‘பொன்மகன் சேமிப்பு திட்டம்’ (ponmagan scheme)ஆகும். பெண் குழந்தைகளுக்கான ‘செல்வமகள் சேமிப்பு திட்டம்’ போலவே வருடம் ஒன்றுக்கு 12 முறை என குறைந்தபட்சம் 500 ரூபாய் முதல் அதிகபட்சம் 1.5 லட்சம் ரூபாய்வரை இத்திட்டத்தில் முதலீடு செய்யலாம். இந்தியா முழுவதும் உள்ள எந்த தபால் நிலையங்களிலும் இதனை தொடங்கிக்கொள்ளலாம்.
இத்திட்டத்தில் முதலீடு செய்வதற்கு குழந்தைகளின் வயது 10க்கு மேல் இருந்தால், அவர்களின் பெயரிலேயே திட்டத்தை தொடங்கிக்கொள்ளலாம். அதேசமயம் குழந்தைக்கு 10 வயதுக்கு கீழ் இருந்தால் ஜாயிண்ட் அக்கவுண்ட் மூலம் தொடங்கலாம்.
இத்திட்டத்தில் முதலீடு செய்வதற்கு, குழந்தையின் பிறப்பு சான்றிதழ், பெற்றோரின் சரியான முகவரி சான்றாக ஆதார் கார்டு, பான் கார்டு மற்றும் குழந்தையின் புகைப்படம் உள்ளிட்ட ஆவணங்கள் தேவை.
பொன்மகன் சேமிப்பு திட்டத்தின் தற்போதைய வட்டி விகிதம் 7.6% ஆகும். இதில் முதலீடு மற்றும் கிடைக்கும் வருமானத்திற்கு வரி விலக்கு உண்டு. இந்தக் கணக்கு தொடங்கியதில் இருந்து ஏழாவது ஆண்டில் இருந்து கணிசமான தொகையை பெற்றுக் கொள்ளும் வசதியும் இருக்கிறது.
இந்தத் திட்டத்தில் முதிர்வு காலம் 15 ஆண்டுகள் என்றாலும், அடுத்த 5 ஆண்டுகளை தொகுப்புகளாக அதிகரித்துக் கொள்ளலாம். அதாவது இத்திட்டத்தில் மாதம் 1,000 ரூபாய் வீதம்,வருடத்திற்கு 12,000 ரூபாய் முதலீடு செய்தால் ,வட்டி விகிதம் 7.6%.
அதனடிப்படையில் 15 ஆண்டுகள் இத்திட்டத்தில் 1,80,000 ரூபாய் முதலீடு செய்தால் 3,47,441 ரூபாய் முதலீடு வட்டியாக கிடைக்கும். மொத்தத்தில் முதிர்வு தொகை 5,27,446 ரூபாய் கிடைக்கும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: Republic Day 2022 : டெல்லியில் தேசியக் கொடியேற்றினார் ராம் நாத் கோவிந்த்.. பிரதமர், அமைச்சர்கள் பங்கேற்பு
கச்சத்தீவை மீட்டுத்தரக்கோரி ராஜராஜ சோழன் சிலையிடம் சிவசேனா கட்சியினர் மனு