எல்.ஐ.சியின் ஜீவன் ஆனந்த் காப்பீட்டுத் திட்டம் அதிக பணம் ஈட்டும் காப்பீட்டுத் திட்டமாகப் பாதுகாப்பு என்ற அம்சத்தையும், சேமிப்பு என்ற அம்சத்தையும் ஒரே நேரத்தில் பயனாளர்களுக்குத் தருகிறது. மேலும் இந்தத் திட்டத்தில் சேமிக்கப்படும் பணமும், திரும்பப் பெறும் தொகையும் சந்தை நிலைமைகளுக்குத் தக்கவாறு மாறாமல் இருப்பதால் பணம் திரும்ப வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் எல்.ஐ.சி நிறுவனம் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்பவர் இறந்தாலும் நிதிப் பாதுகாப்பை உறுதி செய்கிறது; காப்பீட்டுத் திட்டத்தின் காலம் முடிவடையும் வரை உயிருடன் இருப்பவர்களுக்கும் பெரிய அளவிலான தொகையையும் இந்தத் திட்டம் அளிக்கிறது.
எல்.ஐ.சி நிறுவனத்தின் மிகவும் பிரபலமான திட்டங்களுள் ஒன்று `ஜீவன் ஆனந்த்’. இதில் முதலீடு செய்பவர்களுக்கு இந்தத் திட்டத்தின் காலம் முடிவடையும் வரை அவரது ஆயுட்கால நிதி காப்பீடாக இது செயல்படும். மேலும் பயனாளரின் ஆயுள்காலம் முடிவடைந்த பிறகும், இந்தத் திட்டம் தொடரும். மேலும், திட்டத்தின் காலம் முடிவடையும் முன்பே, இந்தத் திட்டத்தின் கீழ் முதலீடு செய்யும் பயனாளர்களுக்கு போனஸ் வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்திற்கான கால அளவை 15 ஆண்டுகள் முதல் 35 ஆண்டுகள் வரை தேர்வு செய்து கொள்ளலாம்.
இந்தத் திட்டத்தின் கீழ் குறைந்தபட்சமாக 1 லட்சம் ரூபாய் தொகை பயனாளர்களுக்குக் கிடைக்கும் என உறுதிசெய்யப்படுத்தப்பட்டுள்ளது. அதிகபட்ச தொகையின் வரம்பு எதுவும் இல்லாமல் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் முதலீடு செய்ய குறைந்தபட்ச வயது 18 ஆண்டுகள் எனவும், அதிகபட்ச வயது 50 ஆண்டுகள் எனவும் கூறப்பட்டுள்ளது. நீண்ட கால திட்டமான இது பயனாளர்களின் ஓய்வுக் காலத்தின் போது பெரிதும் வழங்கப்படும். அதிகபட்சமாக 75 வயது கடந்தவர்களுக்கு இந்தத் திட்டத்தின் கீழ் சேமிக்கப்பட்ட தொகை வழங்கப்படுகிறது.
75 வயதுக்கு முன்பே பயனாளர் இறந்துவிட்டால், இறப்பு க்ளெய்ம் வழங்கப்படுகிறது. வெவ்வேறு போனஸ்களுடன் உயிரிழந்தால் வழங்கப்படும் தொகை என ஏற்கனவே கூறியபடி, இந்தத் தொகை அளிக்கப்படும். முதலீடு செய்த தொகையை விட 125 சதவிகிதம் அதிகமாகவோ, ஆண்டுதோறும் செலுத்திய தொகையை 7 மடங்காகவோ அளிக்கப்படும் என எல்.ஐ.சி நிறுவனம் கூறியுள்ளது.
எல்.ஐ.சி நிறுவனத்தின் இந்த ஆயுட்காலத் திட்டத்தின் கீழ், இறப்பு க்ளெய்ம் தொகையைத் தவணை முறையில் 5 ஆண்டுகள், 10 ஆண்டுகள், 15 ஆண்டுகள் என்ற வெவ்வேறு காலகட்டங்களுள் ஒன்றைத் தேர்வு செய்து பெற்றுக் கொள்ளும் வசதியும் உண்டு.
அதே போல, 75 வயதைக் கடந்தவர்களுக்கும் மொத்த ப்ரீமியம் தொகையையும் இந்தத் திட்டம் வழங்குகிறது. இதனோடு மேலும் ஆண்டுக் கணக்கில் சேகரிக்கப்பட்ட போனஸ் தொகைகளும் சேர்க்கப்பட்டு வழங்கப்படும். இதனையும் தவணை முறையில் 5 ஆண்டுகள், 10 ஆண்டுகள், 15 ஆண்டுகள் என்ற வெவ்வேறு காலகட்டங்களுள் ஒன்றைத் தேர்வு செய்து பெற்றுக் கொள்ளலாம்.