நிதியாண்டு நிறைவு பெறவுள்ள நிலையில், மக்கள் தங்கள் ITR ஐ தாக்கல் செய்யத் தொடங்கியுள்ளனர். 2022-23 நிதியாண்டுக்கான ITRஐ சரியான நேரத்தில் தாக்கல் செய்வதற்கான கடைசித் தேதி ஜூலை 31 என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பேஸ்லிப்புகள், விலக்குகள் மற்றும் பிற நிதித் தரவுகள் எல்லாவற்றையும் தயாராக வைத்திருக்கும் நீங்கள் ஒன்றைமட்டும் மறந்திருப்பீர்கள். அதுதான் வங்கிக் கணக்கை முன்கூட்டியே சரிபார்ப்பது. ஐடிஆர் தாக்கல் செய்வதற்கு முன் உங்கள் வங்கிக் கணக்கை முன்கூட்டியே சரிபார்க்க மறந்துவிட்டால், நீங்கள் எந்த வரியையும் திரும்பப் பெற முடியாது. உங்கள் வங்கிக் கணக்கை எவ்வாறு முன்கூட்டியே சரிபார்ப்பது என்பது பற்றிய அனைத்தையும் அறிய மேலும் படிக்கவும்.


வங்கிக் கணக்கை முன்கூட்டியே சரிபார்க்க வேண்டியது ஏன்?


ஐடிஆர் தாக்கல் செய்யும் செயல்முறையைத் தொடங்குவதற்கு முன், உங்கள் வங்கிக் கணக்கை முன்கூட்டியே சரிபார்க்க வேண்டியது அவசியம். அப்படி சரிபார்ப்பதன் மூலம், வருமான வரித் துறை நமது வங்கிக் கணக்கில் வரியை திரும்ப செலுத்துவதை சாத்தியமாக்கும்.



E-Verification பயன்படுத்துதல்


“இ-சரிபார்ப்பு (E-Verification) நோக்கங்களுக்காக (மின்னணு சரிபார்ப்புக் குறியீடு) செயல்படுத்த தனிப்பட்ட வரி செலுத்துவோர், முன்கூட்டியே சரிபார்க்கப்பட்ட வங்கிக் கணக்கையும் பயன்படுத்தலாம். வருமான வரி ரிட்டன்ஸ் மற்றும் பிற படிவங்கள், இ-செயல்முறைகள், பணத்தைத் திரும்பப்பெறுதல், கடவுச்சொல்லை மீட்டமைத்தல் மற்றும் இ-ஃபைலிங் கணக்கில் பாதுகாப்பான உள்நுழைவு ஆகியவற்றிற்கு E-Verification -ஐப் பயன்படுத்தலாம்" என்று I-T துறையின் இணையதளத்தில் ஒரு அறிவிப்பு கூறுகிறது. முன் சரிபார்ப்பு நோக்கங்களுக்காக, உங்கள் வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்ட சரியான பான் எண்ணை வைத்திருக்க வேண்டும். வருமான வரித் துறையின் இ-ஃபைலிங் வசதியுடன் பான் எண் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.


தொடர்புடைய செய்திகள்: S. M. Nasar: அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்.. கடுப்பான முதலமைச்சர் ஸ்டாலின்..நாசர் அமைச்சர் பதவி பறிப்புக்கு இதுதான் காரணமா?


வங்கிக் கணக்கை முன்கூட்டியே சரிபார்ப்பது எப்படி?



  • incometax.gov.in க்குச் செல்லவும்.

  • உங்கள் ஆதார் அல்லது பான் எண்ணைப் பயன்படுத்தி உள்நுழையவும்.

  • 'My Profile' என்பதைத் தேர்ந்தெடுத்து, ‘My Bank Account’ என்பதைக் கிளிக் செய்யவும்.

  • ‘Add Bank Account’ endra ஆப்ஷனை தேர்வு செய்யவும்.

  • கணக்கு எண், வகை, கணக்கு வைத்திருப்பவரின் பெயர், IFSC குறியீடு, வங்கி பெயர் போன்ற தேவையான விவரங்களை உள்ளிடவும்.

  • 'validate' பட்டனை கிளிக் செய்து உங்கள் விவரங்களைச் சமர்ப்பிக்கவும்.



சரிபார்ப்பு நிலை


இந்த செயல்முறையை முடித்ததும், சரிபார்ப்பு நிலை உங்கள் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் ஐடி மற்றும் மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும். செயல்முறை தோல்வி அடைந்தால், முன் சரிபார்ப்பிற்காக கணக்கை மீண்டும் சமர்ப்பிக்கலாம். முன் சரிபார்ப்புக்கான கோரிக்கையை நீங்கள் சமர்ப்பித்தவுடன், அது தானாகவே உங்கள் வங்கிக்கு அனுப்பப்படும். 10 முதல் 12 வேலை நாட்களுக்குள் கணக்கில் நிலை புதுப்பிக்கப்படும்.


சரிபார்ப்பது எப்படி?



  • incometax.gov.in க்குச் சென்று உங்கள் பான் அல்லது ஆதார் விவரங்களைப் பயன்படுத்தி உள்நுழையவும்.

  • ‘My Bank Account’ என்பதைக் கிளிக் செய்யவும்.

  • இந்த பக்கத்தில் உங்கள் கணக்கின் முன் சரிபார்ப்பு நிலையை நீங்கள் பார்க்க முடியும்.