EPFO உறுப்பினர்கள் சொந்த திருமணம், மகள், மகன், சகோதரி (அ) சகோதரரின் திருமணத்துக்காக அவர்களுடைய கணக்கிலிருந்து 50% வரை பணம் எடுக்கலாம். இருப்பினும், திருமணத்துக்காக பணத்தை எடுக்க விரும்பும் ஊழியர் ஒருவர் EPF-க்கு 7 வருடங்கள் பங்களிப்பை முடித்திருக்க வேண்டும் என்பது விதிமுறை. இது பற்றிய தகவல்களை காணலாம்.


பி.எஃப். தொகை


மாத சம்பளம் வாங்கும் அனைத்து தொழிலாளர்களுக்கு அவர்கள் வேலை பார்க்கும் நிறுவனங்கள் இ.பி.எப். (EPF) எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியை (Employee Provident fund) வழங்கி வருகிறது. பொதுவாக இது மாதம் தோறும் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்டு, அவரது பி.எப். கணக்கில் டெபாசிட் செய்யப்படுகிறது. தொழிலாளர்கள் இந்த பணத்தினை தற்பொழுது தேவைப்படும் பொழுது ’pf advance’ ஆகவும்,  பணி ஓய்வுக்குப் பின்னர் முழுமையாக எடுக்கவும் பி.எப் அலுவலகம் அனுமதிக்கிறது.


UAN  என்ற செயலி மூலமாகவும் தேவையான பணத்தை எடுக்க முடியும்.


உங்களது மொபல் எண் மூலம் இதற்கு விண்ணப்பிக்கலாம். உங்களுக்கு தேவையான பணம் தொடர்பான விவரத்தினை பூர்த்தி செய்ய வேண்டும்.


பின்னர், பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு ஓ.டி.பி. வரும். அதை பதிவிட்டு பணமெடுக்கும் வகைகயை தேர்வு செய்து படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும். 3-5 நாட்களுக்குள் பணம் பதிவு செய்யப்பட்ட வங்கி கணக்கிற்கு அனுப்பப்படும்.


https://play.google.com/store/apps/details?id=in.gov.umang.negd.g2c&hl=en_IN&gl=US&pli=1- என்ற இணைப்பை பயன்படுத்தி செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


பி.எஃப் பணத்தினை ஆன்லைனில் இப்படி தான் எடுக்க வேண்டும்? இதோ உங்களுக்கான தகவல்கள்!


தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியை பெற விண்ணப்பிப்பதற்கு யு.ஏ.என் (UAN) அல்லது யுனிவர்சல் அக்கவுண்ட் நம்பர் (Universal Account Number) எனப்படும் பொதுக் கணக்கு எண்ணும் அதனை ஆக்டிவேட் செய்ய பயன்படுத்திய பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணும் செயல்பாட்டில் இருக்க வேண்டும். அத்துடன் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கணக்குடன் ஆதார் எண், பான் எண் போன்றவையும் இணைக்கப்பட்டிருக்கிறதா? என்பதனை உறுதி செய்துகொள்ளவேண்டும்.


பி.எப் கணக்கினை ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

 


  • முதலில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் epfindia.gov.in என்ற இணையதளத்துக்குச் சென்று யு.ஏ.என்(UAN) மற்றும் பாஸ்வேட் (password) மூலம் நம்முடைய பிஎப் கணக்கிற்குள் உள்நுழைய வேண்டும்.

  • பின், 'Online Services' என்பதில் உள்ள 'Claim' என்பதைக் கிளிக் செய்யவும்.

  •  இப்போது தோன்றும் பக்கத்தில் வங்கிக் கணக்கு எண்ணினை டைப் செய்து 'Proceed For Online Claim' என்பதை கிளிக் செய்யவும்.

  • புதிதாகத் திறக்கும் தனி பக்கத்தில் பணத்தை எடுப்பதற்கான காரணம், எவ்வளவு பணம் தேவை என்பன உள்ளிட்ட விவரங்களைக் குறிப்பிட்ட வேண்டும். இதில் முழு பணத்தையும் எடுக்க வேண்டுமா? பாதி தொகையை எடுக்க வேண்டுமா? பென்ஷனை மட்டும் எடுக்க வேண்டுமா எனக் தேர்வு செய்ய வேண்டும். (only Pf withdrawl- Form19), (only pesion withdrawl-Form 10c),( Pf advance Form 31 ) என்பதனை தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும்.

  • இதனையடுத்து வரும் பக்கத்தில் கேட்கப்பட்டுள்ள முகவரி, பாஸ்புக் முதல்பக்கம் அல்லது செக் புக் போன்றவற்றை இணைத்துக்கொள்ள வேண்டும்.

  • அடுத்து, 'Get Aadhaar OTP' என்பதை கிளிக் செய்தால் ஆதாரில் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு ரகசிய குறியீட்டு எண் (One Time Password) எஸ்.எம்.எஸ். மூலம் கிடைக்கும். அதனை உரிய இடத்தில் டைப் செய்து ஆன்லைன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்யவும்.

  • விண்ணப்பித்த பின் அதன் நிலையை 'Online Services' என்பதில் உள்ள 'Claim status' என்பதைக் கிளிக் செய்து நாம் சரியாக தான் apply செய்துள்ளோமே? என்பதை  அறிந்துகொள்ளலாம்.

  • இறுதியாக நாம் விண்ணப்பித்த  விண்ணப்பம் தொழிலாளர் பணிபுரிந்த நிறுவனத்துக்கு அனுப்பிவைக்கப்படும். அந்நிறுவனத்திடம் ஒப்புதல் கிடைத்த பின்பு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கணக்கில் உள்ள பணம் வங்கிக் கணக்கில் 10 நாட்களுக்குள் டெபாசிட் செய்து வைக்கப்படும்.