RBI வங்கி விடுமுறைப் பட்டியலின்படி, பிப்ரவரி 2023 இல் அனைத்து பொது மற்றும் தனியார் துறை வங்கிகளும் ஒன்பது நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த விடுமுறைகளில் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளும், ஞாயிற்றுக்கிழமைகளும் அடங்கும்.
பிப்ரவரி மதத்தில் வங்கி விடுமுறை நாட்கள்
இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) பிப்ரவரி மாதத்திற்கான வங்கி விடுமுறைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. வருடத்திலேயே சிறிய மாதமான பிப்ரவரியில் வங்கிக்கு 9 நாள் விடுமுறை இருப்பது பலருக்கு ஆச்சர்யம் தான். எனினும் அந்த 9 நாளில் வழக்கமான ஞாயிறு, இரண்டாம் மற்றும் நான்காம் சனி ஆகியவை மட்டுமே 6 நாட்கள் வந்துவிடுகின்றன. இவையன்றி மற்ற மூன்று நாட்கள் என்பது இந்தியா முழுமைக்கும் அல்ல, ஒவ்வொரு மாநிலத்திற்கும் மாறுபடும். ஒட்டுமொத்தமாக தேசிய விடுமுறை நாட்களில் மட்டுமே இந்தியா முழுவதும் வங்கி மூடப்படும்.
ஆர்பிஐ-இன் மூன்று வித விடுமுறைகள்
இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) விடுமுறை நாட்களை மூன்று பாகமாக பிரித்து வைத்துள்ளது- பேச்சுவார்த்தைக்குட்பட்ட கருவிகள் சட்டத்தின் கீழ் விடுமுறை, நிகழ்நேர மொத்த தீர்வு விடுமுறை, மற்றும் வங்கிகளின் கணக்குகளை மூடுதல். ஆகியவை வரும். இம்மாதம் வரும் விடுமுறைகள் பின்வருமாறு.
சனி மற்றும் ஞாயிறு விடுமுறைகள்
பிப்ரவரி 5: ஞாயிறு
பிப்ரவரி 11: இரண்டாவது சனிக்கிழமை
பிப்ரவரி 12: ஞாயிறு
பிப்ரவரி 19: ஞாயிறு
பிப்ரவரி 25: நான்காவது சனிக்கிழமை
பிப்ரவரி 26: ஞாயிறு
மற்ற காரணங்களுக்காக விடுமுறை
பிப்ரவரி 15: Lui-Ngai-Ni காரணமாக இம்பாலில் வங்கி மூடப்பட்டிருக்கும்.
பிப்ரவரி 18: மகாசிவராத்திரி காரணமாக அகமதாபாத், பேலாபூர், பெங்களூரு, போபால், புவனேஷ்வர், டேராடூன், ஹைதராபாத் (ஆந்திரா மற்றும் தெலுங்கானா), ஜம்மு, கான்பூர், கொச்சி, லக்னோ, மும்பை, நாக்பூர், ராய்ப்பூர், ராஞ்சி, சிம்லா, ஸ்ரீநகர், திருவனந்தபுரம் ஆகிய நகரங்களில் வங்கிகள் மூடப்படும்.
பிப்ரவரி 20: மாநில தினத்தையொட்டி ஐஸ்வாலில் வங்கிகள் மூடப்படும்.
பிப்ரவரி 21: லோசர் விழா காரணமாக காங்டாக்கில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும். லோசர் என்பது திபெத்திய புத்தாண்டு ஆகும், இது பிப்ரவரி மாதத்தில் வருகிறது, மேலும் குடும்பக் கூடல்கள், நண்பர்கள் மற்றும் உறவினர்களை அழைப்பதன் மூலம் கொண்டாடப்படுகிறது. (லோசருக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, குடோர் சாம் ரும்டெக் மடாலயத்தில் நடத்தப்படுகிறது, இது நன்மைக்கும் தீமைக்கும் இடையிலான போரையும், தீமையை சடங்கு முறையில் அழிப்பதையும் சித்தரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது)