ஒரு 1/2 கிலோ தங்கத்தை வீட்டில் வைத்துவிட்டு வெளியூர் செல்வது என்றால் உங்கள் மனம் என்ன பாடுபடும். சரி இது மிகப்பெரிய பணக்காரர்களுக்கு என்று வைத்துக்கொள்வோம். ஒரு பத்து பவுன் தங்கத்தை வீட்டில் வைத்து விட்டு செல்லும் பொழுது  உங்கள் மனது வீட்டையே குறிப்பாக, நகை வைத்திருக்கும் அந்த பீரோவையை சுற்றி சுற்றி வரும்.


எப்போது திருடர்கள் வீட்டிற்குள் நுழைவார்கள் எப்போது நகை களவு போகும் என்ற கவலை வரும் சற்றே வசதியானவர்கள் வங்கிகளில் லாக்கரை வாடகை எடுத்து அதில் வைத்திருப்பார்கள் இப்படி செய்யும் போது பாதுகாப்பு கிடைக்கும் என்பது உண்மைதான் அதே நேரம் தேவைப்படும் நேரத்தில் அந்த தங்க நகைகளை உபயோகப்படுத்த முடியாமல் இருப்பது ஒரு புறம் என்றால் வருடம் வருடம் அந்த லாக்கருக்கு வாடகை செலுத்துவது இன்னொரு புறம் இன்று இருக்கும்.


இப்படி தங்கத்தை பொருளாக வீட்டில் அல்லது வங்கியின் லாக்கரில்  வைப்பதற்கு பதிலாக,தங்கத்தின் மதிப்பிற்கு பத்திரங்களை வாங்கி வைக்கும் பொழுது,இத்தகைய பயம் நமக்கு துளி கூட இருக்காது. இதைப்போலவே  வீட்டில் அல்லது பேங்க் லாக்கரில் சும்மா இருக்கும் நகைக்கு கண்டிப்பாக நமக்கு வட்டி கிடைக்காது. ஆனால் இந்த தங்க நகை பத்திரத்திற்கு வட்டி உண்டு. இந்த வகையிலும் நமக்கு பாதுகாப்புடன் நன்மையே கிடைக்கும்.  இந்த தங்க நகை பத்திரத்திற்கு வருடத்திற்கு குறைந்தபட்சம் இரண்டு 2.5 சதவிகித வட்டி வழங்கப்படுகிறது.


Sovereign Gold Bonds (SGB) என்று அழைக்கப்படும் இந்த தங்க நகை பத்திரமானது மத்திய அரசின் ரிசர்வ் வாங்கினால் வெளியிடப்படுகிறது. தனியார் நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் மூலமாக விநியோகிக்கப்படுகிறது. இந்த தங்கம் 4 கிராமிலிருந்து அதிகப்படியாக 4 கிலோ வரையிலும் நீங்கள் வாங்கலாம். இன்றைய  நிலவரப்படி 5197 ரூபாய்  இருக்கும் ஒரு கிராம்  தங்கத்தின் விலை ஆனது  நீங்கள் SGB கோல்ட் பாண்டா வாங்கும் போது 50 ரூபாய்க்கு தள்ளுபடியுடன்  கிடைக்கிறது. தனிப்பட்ட முறையில் இவ்வாறு வாங்கும் தங்கத்திற்கு பாதுகாப்பு கிடைக்கிறது என்றால், நாட்டின் பொருளாதாரத்திற்கு இத்தகைய தங்க பத்திரத்தில் முதலீடு செய்வது  மிகப்பெரிய பலமாக விளங்குகிறது.


இப்படியான எஸ் ஜி பி தங்க பத்திர முதலீடானது,நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கிகளின் கிளைகளுக்கு சென்று,உங்கள் கணக்கிலிருந்து பணத்தை செலுத்தி வாங்க முடியும்.இதே போலவே நீங்கள் உங்கள் வங்கி கணக்கில் ஆன்லைன் பரிவர்த்தனையை வைத்திருந்தீர்களேயானால், உங்கள் வங்கி கணக்கிலிருந்து பணத்தை செலுத்தி வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலமாக வாங்க முடியும்.
ஆன்லைனில் எவ்வாறு வாங்குவது என்பதை கீழ்க்கண்ட வழிமுறைகளின் மூலம் நீங்கள் தெரிந்து உங்கள் தங்க முதலீட்டு பத்திரத்தை வாங்கலாம்.


இதன் படி 1: உங்கள் நெட் பேங்கிங் கணக்கில் உள்நுழையவும். ஆன்லைனில் முதலீடு செய்யும் தனிநபர்கள் தங்கள் வங்கி வழங்கும் நெட் பேங்கிங்கில் செல்லுபடியாகும் உள்நுழைவு ஐடி அணுகலைக் கொண்டிருக்க வேண்டும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். ஒரு தனிநபரிடம் உள்நுழைவு ஐடி இல்லை என்றால், மேலும் தொடர அதை உடனடியாக செயல்படுத்த வேண்டியது அவசியம்.


2: இப்படி உங்கள் வங்கி கணக்கில் ஐடியை  பெற்று உள்நுழைந்த பிறகு, பிரதான மெனுவிலிருந்து 'இ-சேவை' என்பதைத் தேர்ந்தெடுத்து, 'சவர்யன் தங்கப் பத்திரம்' என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  


3: முதலில் வருபவர்கள் 'பதிவு' என்பதைத் தேர்ந்தெடுத்து, இந்திய ரிசர்வ் வங்கி வகுத்துள்ள 'விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை' சரிபார்த்து, பின்னர் 'தொடரவும்' என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
 
4: SGB திட்


டத்திற்கான தேவையான விவரங்கள் முதலீட்டாளரின் டிமேட் கணக்கை வழங்கும் NSDL அல்லது CDSL இலிருந்து டெபாசிட்டரி பங்கேற்பாளரின் விவரங்களுடன் உள்ளிடப்பட வேண்டும்.


5: பதிவு படிவத்தை பூர்த்தி செய்த பிறகு 'சமர்ப்பி' என்பதைக் கிளிக் செய்யவும்.


6: பதிவு முடிந்ததும், முதலீட்டாளர் தலைப்பில் இருந்து வாங்கும் விருப்பத்தை தேர்ந்தெடுத்த  வேண்டும். ஏற்கனவே பதிவு செய்தவர்கள் பதிவு செய்யும் செயல்முறையைத் தவிர்த்துவிட்டு, தலைப்பில் இருந்து நேரடியாக 'வாங்குதல்' என்பதைத் தேர்ந்தெடுக்கலாம்.


7: புதிய பக்கத்தில், சந்தா அளவு மற்றும் நாமினி விவரங்கள் குறிப்பிடப்பட வேண்டும்.


படி 8: இறுதியாக, முதலீட்டாளர் தனது மொபைலுக்கு அனுப்பப்பட்ட ஒரு முறை கடவுச்சொல்லை (OTP) உள்ளிட வேண்டும்.


இப்படி வாங்கப்படும் தங்க பத்திரமானது தங்கத்தின் அதே மதிப்பை கொண்டிருப்பதோடு, ஒவ்வொரு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களை பொறுத்த அளவில், வருடாந்திர வட்டி அல்லது ஆறாண்டுகள் அல்லது எட்ட ஆண்டுகளில் வட்டியோடு சேர்த்து முதிர்வுத் தொகை என  கிடைக்கிறது. இதே போலவே இந்த திட்டமானது எட்டு வருட கால முதலீடு தன்மையுடன் கிடைக்கிறது.