AK 63 - ஐந்தாவது முறையாக சிவா இயக்கத்தில் அஜித்... 2023 இறுதியில் கச்சேரி ஆரம்பம்

  


நடிகர் அஜித் - இயக்குனர் சிவா கூட்டணியில் AK 63 உருவாகியுள்ளது எண்ணற்ற ஒரு அசத்தலான தகவல் தற்போது வெளியகியுள்ளது. இது தல ரசிகர்களை உற்சாகத்தில் துள்ள வைத்துள்ளது. 


பிஸியாக இருக்கும் அஜித் :


பொதுவாகவே நம்ம மாஸ் ஹீரோ அஜித்குமார் ஒரு படத்தில் நடித்து கொண்டு இருக்கும் போது வேறு எந்த ஒரு படத்திலும் கமிட் ஆகமாட்டார். முழுவதுமாக முடித்துவிட்டு ஒரு சிறிய பிரேக் எடுத்துக்கொண்ட பின்பு தான் அடுத்த தந்து திட்டம் குறித்தும் அதன் தயாரிப்பாளர், இயக்குனர் உள்ளிட்ட தகவல்களை வெளியிடுவார். ஆனால் தற்போது அடுத்தடுத்த படத்தில் பிஸியாக கமிட் ஆகியுள்ளார் அஜித்குமார். 


 



 


அடுத்தது என்ன ?


தற்போது போனி கபூர் தயாரிப்பில் ஹெச். வினோத் இயக்கத்தில் தற்காலிகமாக AK 61 என பெயரிடப்பட்டுள்ள திரைப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்புகளில் ஈடுபட்டு இருக்கும் அஜித்குமார் தனது அடுத்த படமான AK 62 வில் லைகா தயாரிப்பில், இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஒப்பந்தம் ஆகியுள்ளார். அந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 






AK 63 லேட்டஸ்ட் அப்டேட்:


இப்படங்களை தொடர்ந்து நடிகர் அஜித்குமார் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் AK 63 என  தற்காலிகமாக "வரம்" என பெயரிடப்பட்டுள்ள திரைப்படத்தில் நடிக்க ஒப்புதல் அளித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு 2023 இறுதியில் தொடங்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இயக்குனர் சிவா அண்ணாத்த திரைப்படத்தை அடுத்து நடிகர் சூர்யாவை இயக்க உள்ளார். அந்த படத்தின் படப்பிப்பு பணிகள் முடிவடைந்த பிறகு அஜித்குமாரை வைத்து AK 63 படத்தை இயக்குவார் என் எதிர்பார்க்கப்படுகிறது.  அதே சமயம் நடிகர் அஜித் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகவிருக்கும் படத்தினை முடித்த பிறகு இயக்குனர் சிவா படத்தில் மும்மரமாக இறங்குவார் என கூறப்படுகிறது. நடிகர்  அஜித் - இயக்குனர் சிவா கூட்டணியில் உருவாகும் ஐந்தாவது திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் திரைப்படங்களை தொடர்ந்து உருவாக இருக்கும் AK 63 திரைப்படமும் நிச்சயம் ஒரு சூப்பர் ஹிட் திரைப்படமாக அமையும் என்பது அஜித் ரசிகர்களின் நம்பிக்கை. அஜித் நடிக்கும் படங்கள் குறித்த அப்டேட் அடிக்கடி வெளியாவதால் மிகுந்த குஷியில் இருக்கிறார்கள் அவரது ரசிகர்கள்.