இன்றைக்கு பெரும்பாலும் மக்கள் கடைகளுக்கு சென்று தேவையானப் பொருள்களை வாங்குவதை விட ஆன்லைனில் தான் அதிகளவில் பர்சஸ் செய்கிறார்கள். ப்ளிப்கார்ட், அமேசான், மீசோ, மின்ரா, அஜியோ போன்றவை மக்களிடம் மிகவும் பிரபலமாகியுள்ளது. இந்த ஆன்லைன் வணிகதளங்களில் அவ்வப்போது அதிரடி தள்ளுபடி நடைபெறும். அடிக்கடி பல ஆஃபர்களை கொடுக்கும் ஆன்லைன் தளங்களுக்கு மக்கள் அடிக்கடி படையெடுப்பதும் உண்டு.  


ஆனால் ஆன்லைனில் விற்கப்படும் அனைத்து பொருட்களுமே ஒரிஜினலா என்பது இன்னமும் கேள்விக்குறிதான். விலை குறைவு என்ற போர்வையில் பல தளங்கள் போலியான பொருட்களை விற்பனை செய்வதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பான பல புகார்களும் இணையத்தில் அடிக்கடி பதிவிடப்படுகின்றன. இது ஒருபுறமிருக்க, ஆன்லைனில் செல்போன் ஆர்டர் செய்தாலும் சோப்புக்கட்டிகள் வருவதும், பல பொருட்களுக்கு பதில் வேறுபொருட்கள் வருவதும் என ஆன்லைன் சம்பவங்கள் நடப்பதும் உண்டு. இந்நிலையில் போலியான பிரஷார் குக்கர்களை விற்பனை செய்ததற்காக, பேடிஎம் மால், ஸ்னாப்ஸ்டீல் ஆகிய ஆன்லைன் நிறுவனங்களுக்கு தலா ரூ.1 லட்சம் அபராதம் விதித்து எச்சரிக்கை கொடுத்துள்ளது மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம். (Central Consumer Protection Authority (CCPA))




WhatsApp Pay : வாட்சப் மூலமாக வங்கிக் கணக்கில் பேலன்ஸை சரிபார்ப்பது எப்படி தெரியுமா? இவ்வளவு ஈஸி..






போலியான பிரஷர் குக்கர் தொடர்பாக புகாரை அடுத்து விசாரணை செய்த மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம், முறையான தரமில்லாத பிரஷர் குக்கரை விற்பனை செய்துள்ள இரு நிறுவனங்களும் வாடிக்கையாளர்களிடம் இருந்து பொருட்களை திரும்ப பெற வேண்டும். அதற்கான தொகையை திரும்பக் கொடுக்க வேண்டுமென தெரிவித்துள்ளது. 


பேடிஎம் மால் நிறுவனம் Pristine மற்றும் Quba நிறுவனத்தின் போலி பிரஷர் குக்கர்களை விற்பனை செய்துள்ளது. அதேபோல் ஸ்நாப்ஸ்டீல் நிறுவனம்  Saransh Enterprises மற்றும் AZ Sellers ஆகிய நிறுவனங்களின் குக்கர்களை போலியாக விற்பனை செய்துள்ளது எனக் குறிப்பிட்டுள்ளது.


மேலும் ஸ்நாப்ஸ்டீல் மற்றும் பேடிஎம் மால் விற்பனை செய்த பிரஷர் குக்கர்களில் ஐஎஸ்ஐ மார்க் இல்லை. அவை போலியானவை எனவும் குறிப்பிட்டுள்ளது.




One Plus10 Pro: One Plus 10 ப்ரோ மாடல் விற்பனை மார்ச் 31-ல் தொடங்குகிறது.. சிறப்பம்சங்கள் தெரியுமா?




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண