வாட்சப் செயலியில் நிதி பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா? தெரியாது என்றால், இதோ அதனைப் பற்றிய விவரங்கள்.. 


கூகுள் பே, பேடிஎம், ஃபோன்பே முதலான நிதி பரிவர்த்தனை செயலிகளைப் போலவே வாட்சாப் செயலியையும் பயன்படுத்திக் கொள்ளலாம். வாட்சப் மூலமாக மெசேஜ்களை அனுப்புவது, படங்கள், வீடியோக்கள், வாய்ஸ் நோட் ஆகியவற்றை அனுப்புவதைப் போலவே, நிதி பரிவர்த்தனைகளையும் மேற்கொள்ளலாம். வாட்சாப் மூலமாக நீங்கள் பணப் பரிமாற்றத்தில் ஈடுபடுவதற்கு UPI அம்சத்தைப் பயன்படுத்த வேண்டும்.


வாட்சாப் மூலமாக பணப் பரிமாற்றம் மேற்கொள்வதற்காக, உங்கள் வங்கிக் கணக்கோடு இணைக்கப்பட்டிருக்கும் உங்கள் செல்ஃபோன் எண்ணைப் பயன்படுத்தலாம். மேலும், ஒவ்வொரு பணப் பரிமாற்றத்தையும் மேற்கொள்வதற்கு உங்கள் ஃபோனில் நீங்கள் 4 அல்லது 6 டிஜிட் UPI PIN நம்பரை அதில் செலுத்த வேண்டும். இந்த எண்ணைப் பிறரிடம் பகிரக் கூடாது. உங்கள் வங்கிக் கணக்கில் நீங்கள் ஏற்கனவே UPI PIN பயன்படுத்துபவராக இருந்தால், வாட்சாப் செயலியில் பணப் பரிமாற்றம் மேற்கொள்ள புதிதாக அதனை உருவாக்கத் தேவையில்லை. 



உங்கள் பணப் பரிமாற்றங்களை மேற்கொள்வதற்கு முன்பு, உங்கள் வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா என்பதை சரிபார்த்துக் கொள்ள வேண்டும். அதனை சரிபார்க்கவும், வாட்சாப் செயலியில் உங்களுக்கு வசதி வழங்கப்படுகிறது. உங்கள் வாட்சாப் செயலி மூலமாக உங்கள் வங்கிக் கணக்கில் உள்ள சேமிப்பு நிலவரத்தைப் பார்ப்பது எப்படி? இதோ வழிமுறைகள்.... 






வாட்சாப் மூலமாக வங்கிக் கணக்கில் உள்ள சேமிப்பு நிலவரங்களை சரிபார்ப்பது எப்படி?


1. வாட்சாப் செயலிக்கு செல்லவும். 


2. நீங்கள் ஆண்ட்ராய்ட் ஃபோன் பயன்படுத்தினால், `More options' என்ற பகுதிக்கும், நீங்கள் ஐஃபோன் பயன்படுத்தினால் `Settings' பகுதிக்கும் செல்லவும்.


3. அதில் `Payments' என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும். 



4. அதில் நீங்கள் சேமிப்பு நிலவரத்தை சரிபார்க்க விரும்பும் வங்கிக் கணக்கைத் தேர்ந்தெடுக்கவும். 


5. இதில் `View Account balance' என்ற பகுதிக்குள் செல்லவும்.


6. தற்போது உங்கள் வங்கிக் கணக்கின் UPI PIN எண்ணை செலுத்த வேண்டும். 


இப்போது உங்கள் வங்கிக் கணக்கில் சேமிக்கப்பட்டுள்ள தொகை உங்களுக்குக் காட்டப்படும்.