நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு வளர்ச்சி (Gross domestic product- FY23) 2022-2023 நிதியாண்டின் அக்டோபர் - டிசம்பர் காலாண்டில் 4.4 சதவீதமாக சரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது காலாண்டில் ஜி.டி.பி. 6.3% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. பணவீக்கம்,விலைவாசி உயர்வு உள்ளிட்டவைகள் ஜி.டி.பி. விழ்ச்சிக்கு காரணம் என்று குறிப்பிட்டப்பட்டுள்ளது.
புள்ளிவிவர அமைச்சகம் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் வெளியிட்டுள்ள நாட்டின் பொருளாதார வளர்ச்சி அறிக்கையில், 2022 -2023 ஆம் நிதியாண்டில் ஜி.டி.பி. 7% ஆக இருக்கும் என்று கணித்துள்ளது.
நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி குறைந்துள்ளதாகவும் தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது. இது ரிசர்வ் வங்கியின் கணிப்போடு ஒத்துப்போவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021-2022 நிதியாண்டில் அக்டோபர் -டிசம்பர் காலாண்டில் ரூ.38.51 லட்சம் கோடியாக இருந்த ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பு, 2022-2023 நிதியாண்டில் ரூ.40.19. லட்சம் கோடியாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் நாமினல் ஜி.டி.பி. 15.9 சதவீதம் உயரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்றாவது காலாண்டில் பொருளாதார வளர்ச்சி 4.6% ஆக இருக்கும் என்ற கணிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மூன்றாவது காலாண்டில் வளர்ச்சி சரிந்துள்ளது. பணிவீக்கம், கடந்தாண்டு மே மாதத்தில் இருந்து அடிக்கடி மேற்கொள்ளப்பட்ட வட்டி விகித உயர்வு உள்ளிட்டவைகள் பொருளாதார வளர்ச்சியின் சரிவிற்கு காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணவீக்கம், தொடர்ந்து குறைந்து வரும் தேவை ஆகியவை பொருளாதார வளர்ச்சியை பாதிக்கிறது. மேலும் கொரோனா தொற்று பிறகு உற்பத்தி துறை மெதுவாக மீள தொடங்கியுள்ளதால், நான்காவது காலாண்டில் மேலும் ஜி.டி.பி. குறைவாக வாய்ப்புள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசு வெளியிட்டுள்ள பொருளாதார வளர்ச்சி அறிக்கையின்படி, நாட்டின் ஜி.டி.பி. எதிர்பார்க்கப்பட்டதை விட குறைவாக உள்ளதை காட்டுகிறது. மேலும், உலக அளவில் நிலவும் அசாதாரண சூழல், இந்த தரவுகள் உள்ளிட்டவைகள் இனி வரும் காலங்களில் பொருளாதார வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெரிகிறது.
மூன்றாவது காலாண்டில் மந்தமான ஜி.டி.பி. வளர்ச்சி, மத்திய அரசின் நடப்பு நிதியாண்டின் (மார்ச் உடன் முடிவடையும் )ஜி.டி.பி. கணிப்பிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. 2023 ஆம் நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும் என்று மத்திய அரசு கணித்துள்ளது. இதே நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 6.8% ஆக இருக்கும் என்று ரிசர்வ் வங்கி கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது. நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி துறையை உள்ளடக்கிய எட்டு லட்சம் கோடி தொழில்துறை ஜனவரியின் 7.8% வளர்ச்சியடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. இது டிசம்பர் மாதத்தில் 7% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
ரிசர்வ் வங்கி தொடர்ந்து வட்டி விகிதத்தை அதிகரித்து வருவதால் நடப்பு நிதியாண்டின் நான்காவது காலாண்டில் ஜி.டி.பி. வளர்ச்சி மேலும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் வாசிக்க..
Morarji Desai Birthday: 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை பிறந்தநாள் கொண்டாடிய பிரதமர்... ஏன்? எதற்கு?