நியூசிலாந்தின் வெலிங்டன் மைதானத்தில் நியூசிலாந்து – இங்கிலாந்து அணிகள் இடையே நடைபெற்ற டெஸ்ட் போட்டி கிரிக்கெட் ரசிகர்கள் அனைவருக்கும் விருந்து படைத்துள்ளது. ஏனென்றால், மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த டெஸ்ட் போட்டி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.


இந்த நிலையில், டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் மிகவும் குறைந்த ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணிகளின் பட்டியலை கீழே காணலாம்.


1 ரன்:



  • 1993ம் ஆண்டு அடிலெய்டில் ஆஸ்திரேலியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

  • வெலிங்டனில் இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகள் மோதிய டெஸ்ட் போட்டியில் 1 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்து இன்று வெற்றி பெற்றது.


2 ரன்கள்:



  • 2005ம் ஆண்டு பர்மிங்காமில் நடைபெற்ற ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகள் இடையேயான டெஸ்ட் போட்டியில் 2 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.


3 ரன்கள்:



  • 1902ம் ஆண்டு இங்கிலாந்து – ஆஸ்திரேலிய அணிகள் மோதிய டெஸ்ட் போட்டியில் 3 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.

  • 1982ம் ஆண்டு இங்கிலாந்து – ஆஸ்திரேலிய அணிகள் மோதிய போட்டியில் 3 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.


4 ரன்கள்:



  • 2018ம் ஆண்டு அபுதாபியில் பாகிஸ்தான் – நியூசிலாந்து அணிகள் மோதிய போட்டியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது.


5 ரன்கள்:



  • 1994ம் ஆண்டு சிட்னியில் ஆஸ்திரேலியா – தென்னாப்பிரிக்க அணிகள் இடையே நடைபெற்ற போட்டியில் 5 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா அணி வெற்றி பெற்றது.


6 ரன்கள்:



  • 1885ம் ஆண்டு சிட்னியில் ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகள் இடையே நடைபெற்ற போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்தேிரலியா வெற்றி பெற்றது.


7 ரன்கள்:



  • 1882ம் ஆண்டு ஓவல் மைதானத்தில் இங்கிலாந்து – ஆஸ்திரேலிய அணிகள் மோதிய போட்டியில் 7 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.

  • 2000ம் ஆண்டு கண்டியில் இலங்கை – தென்னாப்பிரிக்க அணிகள் மோதிய போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

  • 2011ம் ஆண்டு ஹோபர்ட் மைதானத்தில் ஆஸ்திரேலியா – நியூசிலாந்து அணிகள் மோதிய போட்டியில் 7 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது.


10 ரன்கள்:



  • 1894ம் ஆண்டு சிட்னியில் நடைபெற்ற ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகள் மோதிய போட்டியில் இங்கிலாந்து அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


 


இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் குறைந்தபட்சமாக 13 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிராக கடந்த 2004ம் ஆண்டு வெற்றி பெற்றதே குறைந்தபட்ச ரன்கள் வித்தியாசத்தில் பெற்ற வெற்றி ஆகும்.


மேலும் படிக்க: New Zealand Historic Test Win : திட்டம்போட்டு தீர்த்த நியூசிலாந்து.. இங்கிலாந்துக்கு எதிராக த்ரில் வெற்றி.. டெஸ்ட் வரலாற்றில் புதிய சாதனை!


மேலும் படிக்க: Most International Centuries: சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதங்கள் விளாசியுள்ள ஆக்டிவ் ப்ளேயர்ஸ் லிஸ்ட் இதோ; முதலிடத்தில் யார் தெரியுமா?