சினிமாவில் பெண்களுக்கு ஏதாவது பிரச்சினைகள் நேர்ந்தால் ஹீரோக்கள் வந்து சண்டை போடும் காட்சிகளை நாம் பார்த்துக்கொண்டே இருக்கிறோம். சமீபத்தில் அப்படியொரு சம்பவம் நிஜத்தில் நடந்துள்ளது. 


நடைபாதையில் இளம்பெண்ணிடம் இளைஞர் ஒருவர் அத்துமீறிய போது அதைக்கண்ட தெலுங்கு இளம் ஹீரோ நாகசௌர்யா தட்டிக்கேட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. காரில் சென்று கொண்டிருந்த நாகசௌர்யா, நடைபாதையில் ஒருவர் இளம்பெண்ணிடம் சண்டையிடுவதை பார்த்துள்ளார். உடனே காரை விட்டு இறங்கி அவள் மீது ஏன் கை வைத்தாய் என்று கேட்டார்.


அப்போது அந்த இளைஞர் அவர் என் காதலி எனக்கூறியுள்ளார். இதையடுத்து அந்த பெண்ணிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என நாகசௌர்யா அந்த இளைஞரை கண்டித்தார். ஆனால் அவர் மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார். இதனால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதைப்பார்த்த வாகன ஓட்டிகள் அங்கு நடந்த சம்பவத்தை வீடியோவாக தங்களது மொபைலில் பதிவு செய்துள்ளனர். 






தற்போது இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் பலர் நாகசௌர்யாவுக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் நாக சௌர்யாவுக்கு பெண்கள் மீதுள்ள மரியாதைக்கு ஹேட்ஸ் ஆஃப் என்று கூறி வருகின்றனர். ஆனால் சமீப காலமாக படத்தின் ப்ரோமோஷனுக்காக பலவிதமான காரியங்கள் நடந்து வரும் நிலையில் இது உண்மையா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.