‛தாளிப்பதா தவிப்பதா...’ 50 சதவீதம் உயர்ந்தது சமையல் எண்ணெய்!

கொரோனா லாக்டவுன் காலத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. காய்கறிகள், பால் உள்ளிட்டவை விலையுர்ந்ததுக்கு நடுவே தற்போது இந்தப் பட்டியலில் சமையல் எண்ணெயும் சேர்ந்திருக்கிறது.

Continues below advertisement

பாக்கெட் சமையல் எண்ணெயின் விலை கடந்த ஒருவருட ஊரடங்கு காலத்தில் ஒரு கிலோவுக்கு 50 சதவிகிதத்துக்கு மேல் அதிகரித்திருப்பதாக  மத்திய அரசின் நுகர்வோர் விவகாரத்துறை புள்ளிவிவரம் ஒன்றை வெளியிட்டுள்ளது. புள்ளிவிவரத்தின்படி அதிகபட்சமாக சூரியகாந்தி எண்ணெய் 56.31 சதவிகிதம் உயர்ந்துள்ளது. மே2020  முதல் மே2021 காலகட்டம் வரையிலான இந்தப் புள்ளிவிவரத்தில்

Continues below advertisement

 


கடந்த ஆண்டு 147.87 ரூபாயாக இருந்த கடலை எண்ணெயின் விலை 20சதவிகிதம் உயர்ந்து 177.9 ரூபாயாக அதிகரித்துள்ளது.118.79 ரூபாயாக இருந்த ஒரு கிலோ நல்லெண்ணெய் 44.33 சதவிகிதம் உயர்ந்து 171.4ரூபாயாக அதிகரித்துள்ளது. வனஸ்பதி/டால்டா ஒருகிலோ 45.19 சதவிகிதம் உயர்ந்து 131.21 ரூபாயாக அதிகரித்துள்ளது.  சோயா எண்ணெய் 52.66 சதவிகிதம் உயர்ந்து 153.85 ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டில் கிலோ 110 ரூபாய்க்கு விற்கப்பட்ட சூரியகாந்தி எண்ணெய் 56 சதவிகிதம் விலை அதிகரித்து 153.85 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள நுகர்வோர் அதிகம் உபயோகிக்கும் பாமாயில் கடந்த ஆண்டில் 86.38 ரூபாய்க்கு விற்ற நிலையில் 54 சதவிகிதம் விலை அதிகரித்து 133.99 ரூபாயாக விற்கப்படுகிறது.  

ஊரடங்கு காலத்தில் ஏற்படும் கிராக்கியை பயன்படுத்தி ஏற்கனவே இறைச்சி, காய்கறிகள் உள்ளிட்டவற்றின் விலையை வியாபாரிகள் உயர்த்தியுள்ளதால் பொதுமக்கள் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் தான் தற்போது அத்தியாவசிய பொருளான எண்ணெய் விலை உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே தொழில், வேலை வாய்ப்பை இழந்து மக்கள் பரிதவித்து வரும் நிலையில், இது போன்ற விலை ஏற்றம் பொதுமக்களை எந்த அளவிற்கு பாதிக்கும் என்பதை உணர்ந்து மத்திய, மாநில அரசுகள் விலை குறைப்பிற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தங்களுக்கான இழப்பை சரிகட்ட நிறுவனங்கள் எடுக்கும் இது போன்ற முடிவுகள் மக்கள் தலையில் தான் விழும் என்பதை அவர்கள் உணர வேண்டும். 

Also Read:தினமும் அதிக நேரம் தூங்குபவரா? அப்போ.. இந்த 5 உங்களுக்குத் தான்!

Continues below advertisement