பணவீக்கத்தை குறைக்கும் வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், இந்திய ரிசர்வ் வங்கியானது வட்டி விகிதத்தை அதிகரித்தது. 

ரிசர்வ் வங்கி நடவடிக்கை:

இதையடுத்து, இதர வங்கிகள் ரிசர்வ் வங்கியில் வாங்கும் கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகரிக்கப்பட்டது. இதன் காரணத்தால், வணிக வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் வாங்கும் கடன்களை குறைத்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. 

ஆனால், வங்கிகளுக்கு பணம் தேவை என்பதால், மக்களிடம் இருந்து பணத்தை வாங்க முயற்சிக்கும். அதன் தொடர்ச்சியாக, பல்வேறு வங்கிகள்,  நிலையான வைப்பு நிதி சேமிப்பு கணக்குகளுக்கான வட்டி விகிதத்தை அதிகரித்து, அதன் மூலம் பணத்தை ஈர்க்க முயற்சிக்கும். 

ஐடிஎஃப்சி வங்கி

இந்நிலையில், இதர வங்கிகளை தொடர்ந்து, ஐடிஎஃப்சி வங்கியானது நிலையான சேமிப்புகளுக்கு வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளது. இதில் குறிப்பாக மூத்த குடிமக்களுக்கு 8 சதவீதத்துக்கும் அதிகமான வட்டி விகிதத்தை அறிவித்துள்ளன. இந்த வட்டி விகித உயர்வானது, ரூ. 2 கோடிக்கு குறைவான சேமிப்பு திட்டத்துக்கு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட்டி விகிதம் உயர்வு:

3 முதல் 5 ஆண்டுகளுக்கான நிலையான சேமிப்பு வைப்பு கணக்குகளுக்கு 6.60 சதவீதத்திலிருந்து, 7 சதவீதமாக , ஐடிஎஃப்சி வங்கி உயர்த்தியுள்ளது. 

மேலும் மூத்த குடிமக்களுக்கு, 666 நாட்களில் முடிவடையும் வைப்புகளுக்கான வட்டி விகிதத்தை 7.10 சதவீதத்திலிருந்து 8.05 சதவீதமாக உயர்த்த திட்டமிட்டுள்ளது. 

இந்த உயர்வானது, வரும் 21 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என ஐடிஎஃப்சி வங்கி தனது வலைதளத்தில் தெரிவித்துள்ளது.

இந்த வட்டி விகித உயர்வானது, மூத்த குடிமக்களுக்கு பெரும் ஆதாயத்தை ஏற்படுத்தும் என பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Also Read: Share Market: பண்டிகை கால உற்சாகத்தால் சரிவிலிருந்து ஏற்றத்தை நோக்கி செல்லும் பங்குச்சந்தை.. உற்சாகத்தில் முதலீட்டாளர்கள்

Also Read: Byjus : கொத்தடிமை வேலை.. மக்களிடம் கொள்ளை.. பைஜுஸ் நிறுவனத்தின் மீது குவியும் அதிர்ச்சிப் புகார்