ஒவ்வொரு கோடைக் காலத்திலும் வாட்டி வதைக்கும் வெய்யிலுக்கு மத்தியில் நம் மக்களுக்கு பெரும் ஆறுதலாகவும் வரப்பிரசாதமாகவும் அமையும் உணவுப் பொருள் ஐஸ்கிரீம்.


ஆனால், பெட்ரோல், கேஸ் என அத்தியாவசியப் பொருள்கள் தொடர்ந்து விலையேற்றத்தை சந்தித்து வரும் இந்த நெருக்கடியான காலக்கட்டத்தில், ஐஸ்கிரீம் பிரியர்களை நோகடிக்கும்விதமாக,  ஐஸ்கிரீம்களும் விலையேற்றத்தை சந்தித்துள்ளன.


அதிகரித்த தேவை...


வழக்கம் மாறாமல் இந்த ஆண்டும் அக்கினி வெயில் உக்கிரமடைந்துள்ள நிலையில், ஐஸ்கிரீமுக்கான கிராக்கி சென்ற ஆண்டுகளைவிட இந்த ஆண்டு எகிடுதகிடாக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் ஐஸ்கிரீம் விற்பனை 45 விழுக்காடு அதிகரித்துள்ள நிலையில், ஐஸ்கிரீம்களுக்கான தேவை மற்றும் விநியோக சங்கிலியில் ஏற்றத்தாழ்வு ஏற்பட்டுள்ளது.


இந்நிலையில், தற்போது 9,000 கோடி மதிப்பிலான தொழில்துறையாக நாட்டில் விளங்கும் ஐஸ்கிரீம் தயாரிப்பு நிறுவனங்கள், 11,000 கோடி என்ற இலக்கை விரைவில் எட்டும் என, 80 தனியார் ஐஸ்கிரீம் நிறுவனங்களின் பிரதிநிதியான  இந்திய ஐஸ்கிரீம் தயாரிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.


இதையும் படிங்க: Bhagyalakshmi : முடியல..! துரத்தி துரத்தி திட்டுறாங்க! இன்ஸ்டாவில் புலம்பித் தள்ளிய 'பாக்கியலட்சுமி' கோபி.!


ஐஸ்கிரீம் விலையேற்றம்


மேலும், தேவை அதிகரிப்பு காரணமாக ஐஸ்கிரீம் தயாரிப்பதற்கான உள்ளீட்டுப் பொருள்களின் விலையும் 10 விழுக்காடு அதிகரித்துள்ளதாகவும், இதனால் பெரும்பாலான ஐஸ்கிரீம் தயாரிப்பு நிறுவனங்கள் 5 - 10 விழுக்காடு ஐஸ்கிரீம் விலையை ஏற்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இலாபத்தில் நிறுவனங்கள்


தவிர, வழக்கமான ஓராண்டு விற்பனையில், 50 விழுக்காடு விற்பனை அளவை மார்ச் - ஜூன் காலக்கட்டத்திலேயே தாங்கள் எட்டியுள்ளதாகவும் தனியார் ஐஸ்கிரீம் தயாரிப்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.


சென்ற இரண்டு ஆண்டுகளாக நிலவிய கொரோனா சூழலால் ஐஸ்கிரீம் சந்தை கடும் வீழ்ச்சியை சந்தித்த நிலையில், தற்போது விற்பனை மீண்டும் சூடுபிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 


இதையும் படிங்க: Sattu : கோடைக்கு இதமாக ஒரு பானம் - ”சட்டு” : வீட்டிலேயே செய்து பாருங்களேன்..



மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண