கோடை வெயிலில் எதைக் குடித்தால் தாகம் தீரும் என்று அலைந்து கொண்டிருக்கிறோம். வெயிலுக்கு இதமாக, உடலுக்கு புத்துணர்ச்சி தரக்கூடிய ஒரு பானம் இருக்கிறது. வீட்டிலேயே இந்த ஆரோக்கிய பானத்தை செய்வதெப்படி என்று பார்க்கலாம். இதனை சட்டு என்று கூறுகின்றனர். வறுத்த கொண்டைக் கடலை மாவில் இருந்து தயார் செய்யக் கூடிய இந்த பானம் நிச்சயமாக உடல் வாட்டத்தைப் போக்கும்.


இதை ஏழைகளின் புரதம் என்றே அழைக்கின்றனர். இது குறித்து ஆயுர்வேத நிபுணரான டாக்டர் நிதிகா கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்தக் கோடையில் இந்த பானத்தை எல்லோரும் பருக வேண்டும் என்றும் அவர் பரிந்துரைக்கிறார்.


சட்டுவின் பலன்கள் என்ன?
* இது ஒரு ஹெல்த் டானிக். உடல்நலத்தை மேம்படுத்தும்.
* இது கோடையில் கண்களுக்கு குளிர்ச்சி தரும். வெப்பத்தால் கண் எரிச்சல், அரிப்பு, வறட்சி ஏற்படும். அதனை சட்டு பானம் தீர்த்து வைக்கும்.
* தொண்டைக்கு இதமானது. தொண்டை சார்ந்த நோய்களை குணப்படுத்தும்
* சோர்வைப் போக்கி உடனடி பலத்தைத் தரும்
* கோடைகால வாந்தி உபாதையை நீக்கும்.
* உடற்பயிற்சியால் ஏற்படும் அயர்ச்சி, உடல் உழைப்பே இல்லாததால் ஏற்படும் சோர்வு.. என இரண்டையும் இது குணமாக்கும்.
* அதீத பசியைப் போக்கும்.
* புண்கள் இருந்தால் அவை வேகமாக குணமாக உதவும்
* இந்த பானம் நார்ச் சத்து நிறைந்தது.


செய்முறை:
அரை கப் சன்னாவை எடுத்து மிதமான தீயில் அடுப்பை வைத்து வானலியை வறுத்துக் கொள்ளவும். 5 முதல் 7 நிமிடங்கள் வறுத்தால் நல்ல வாசனை வரும். அந்த வேளையில் அடுப்பை அணைத்துவிடவும். பின்னர் அது சூடு தணிய விட்டுவிடவும். பின்னர் பவுடராக திரித்து கொள்ளவும். அதில் ஒரு டீஸ்பூன் எடுத்து டம்ப்ளைல் போட்டு அத்துடன் வெல்லம் அல்லது சர்க்கரை சேர்த்து, சிறிது உப்பும் சேர்க்கவும். கூடவே கொஞ்சம் எலுமிச்சை சாறும் தண்ணீரும் சேர்த்து நன்றாகக் கலக்கவும். அவ்வளவு தான் சட்டு பானம் சட்டுனு தயார் ஆயிடும்.