பிரபல பின்னணி பாடகி சங்கீதா சுஜித் உடல்நல குறைவால் மரணமடைந்தார். 


பாடகி சங்கீதா சுஜித் கேரளத்தைச் சேர்ந்தவர். இவரின் வசீகர குரலால் திரையுலகில் பிரபலமானவர். சிறுநீரக நோய் காரணமாக திருவனந்தபுரத்தில் உள்ள சகோதரி வீட்டில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில், நேற்று காலை மரணம் அடைந்தார். இவர் தமிழில்  ஏ.ஆர். ரகுமான் இசையில் வெளியான ‘மிஸ்டர் ரோமியோ’ என்ற திரைப்படத்தில்  பாடிய பாடலான’ தண்ணீரைக் காதலிக்கும் மீன்களா இல்லை; தங்கத்தைக் காதலிக்கும் பெண்களா இல்லை...' என்ற பாடல் மிகவும் பிரபலம். தமிழில் 'நாளைய தீர்ப்பு' என்ற சினிமா மூலம் பின்னணி பாடகியாக அறிமுகம் ஆனார்.


கோட்டயத்தைச் சேர்ந்த சஜித்-ராஜம்மா ஆகியோரது மகளான சங்கீதா சஜித் சென்னையில் வசித்துவந்தார். இவருக்கு அபர்ணா என்ற ஒரே மகள் இருக்கிறார். கிருகலெட்சுமி புராடைக்ட் நிறுவனத்தின் 'என்றே சொந்தம் ஜானகிகுட்டி' என்ற மலையாள சினிமாவில் 'அந்திரி பூவட்டம் பொன்னுருளி...' என்ற பாடல்தான் அவர் முதலில் பாடிய பாடல். அய்யப்பனும் கோசியும் சினிமாவில் இவர் பாடிய சோக பாடல் எல்லாரும் மிகவும் ரசித்த பாடலாக மாறியது. 


குருதி என்ற மலையாள சினிமாவில் இடம்பெற்ற தீம் பாடல் இவர் இறுதியாகப்  பாடியது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட பாடல்கள் பாடியிருக்கிறார்.  திருவனந்தபுரத்தில் உள்ள சாந்திகவடம் என்ற இடத்தில் சங்கீதாவின் இறுதிச் சடங்கள் நடைபெற்றது. 


 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண