Bhagyalakshmi : முடியல..! துரத்தி துரத்தி திட்டுறாங்க! இன்ஸ்டாவில் புலம்பித் தள்ளிய 'பாக்கியலட்சுமி' கோபி.!

பாக்கியலட்சுமி சீரியலில் கோபியாக நடித்ததற்காக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பலரும் தொடர்ந்து திட்டி வருவதாக நடிகர் சதீஷ் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபல சீரியல் பாக்கியலட்சுமி. இந்த தொடர் ஒளிபரப்பாகி வருவது முதல் ஏராளமான ரசிகர்களை கொண்டு டி.ஆர்.பி. ரேட்டிங்கில் அசத்தி வருகிறது. இந்த தொடரின் நாயகியான பாக்கியலட்சுமியின் கணவரான கோபி மனைவிக்கு தெரியாமல் ராதிகாவுடன் கொண்டுள்ள கள்ளக்காதலால் ரசிகர்கள் அனைவரும் அவர் மீது மிகுந்த வெறுப்பில் உள்ளனர்.

Continues below advertisement


மேலும், பாக்கியாவிடமும், குடும்பத்திடமும் கோபி சிக்கிக்கொள்வார் என்று எதிர்பார்க்கும் ஒவ்வொரு சூழலிலும் அவர் ஏதாவது ஒன்றை செய்து தப்பிப்பது ரசிகர்கள் மத்தியில் கோபி மீது மிகுந்த கோபத்தையும், எரிச்சலையும் ஏற்படுத்தியுள்ளது. சின்னத்திரையில் மட்டுமின்றி நிஜத்திலும் கோபியை பார்க்கும் பலரும் அவரை வார்த்தைகளில் வறுத்தெடுத்து வருகின்றனர்.

இதுதொடர்பாக, பாக்கியலட்சுமி தொடரின் நாயகன் கோபியாக நடிக்கும் சதீஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கதத்தில் பகிர்ந்துள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது, இந்த இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு முன்னால் வேறு ஒரு இன்ஸ்டாகிராம் கணக்கு வைத்திருந்தேன். அதில், பயங்கரமாக திட்டி அனுப்பியிருந்தனர். இந்த நிலையில், இந்த இன்ஸ்டாகிராம் அக்கவுண்டிலும் திட்டி அனுப்புகின்றனர். ஒரு நடிகராக, சதீஷாக எனக்கு ஒன்று புரியவில்லை. நன்றாக நடித்தாலும் திட்டுகிறீர்கள். நன்றாக நடிக்காவிட்டாலும் திட்டுகிறீர்கள். கோபியாக நடித்தாலும் தப்பு. சத்தியமாக புரியவில்லை. ஏதோ கொடுத்த வேலையை ஒழுங்காக செய்கிறேன் என்ற நம்பிக்கையில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். இதை எல்லாம் ஏன் உங்களிடம் சொல்கிறேன் என்றுகூட தெரியவில்லை.”

இவ்வாறு அவர் வேதனையுடன் பதிவிட்டுள்ளார்.

நடிகர் சதீஷ் நீண்டகாலமாக நடிப்புலகில் பயணித்து வருகிறார். ஏராளமான விளம்பர படங்களில் நடித்துள்ள சதீஷ் பல்வேறு தொடர்களில் நடித்தாலும், அவருக்கு பாக்கியலட்சுமி தொடர் மிகப்பெரிய பெயரைப் பெற்றுக்கொடுத்தது. இருப்பினும், கதையின் சுவாரஸ்யத்திற்காக நெகட்டிவ் ரோலாக கடந்த சில மாதங்களாக நடித்து வரும் கோபி கதாபாத்திரம் பாக்கியலட்சுமி தொடருக்கு கூடுதல் வரவேற்பை பெற்றுத்தந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

 
Continues below advertisement