சில பொருள்கள் மற்றும் சேவைக்கான ஜிஎஸ்டி வரி, ஜூலை 18ஆம் தேதியுடன் உயர்த்தப்படுகிறது. அதுமட்டுமின்றி, சில புதிய பொருள்களும் ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வரப்பட உள்ளதாக நிதித்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. 


அதன்படி, அஞ்சல் சேவைக்கு இனி ஜிஎஸ்டி வரி வதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு அளிக்கப்பட்ட வந்த விலக்கு தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. 


அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்காக ஒப்பந்த அடிப்படையில் மேற்கொள்ளப்படும் பணிகளுக்கு 18 சதவிகிதம் ஜிஎஸ்டி விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாற்றியமைக்கப்பட்ட ஜிஎஸ்டி வரி விகிதத்தின் படி, சூரிய சக்தி வாட்டர் ஹீட்டர்கள், பதப்படுத்தப்பட்ட தோல்களின் விலை உயர்கிறது.


மோட்டார் பம்புகள், எல்.இ.டி விளக்குகள், பேனா மை, கத்தி, பிளேடுகள் ஆகியவற்றின் விலை உயர உள்ளது. ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றதையடுத்து, இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாநில நிதித்துறை அமைச்சர்கள், மத்திய, மாநில வருவாய்த்துறை அலுவலர்கள் அங்கும் வகிக்கும் குழுவின் பரிந்துரைகளை ஜிஎஸ்டி கவுன்சில் ஏற்று கொண்டு உள்ளது. 


இரண்டு நாள்களாக நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், "விலை மாற்றத்தை அமல்படுத்துவதற்கான தேதி ஜூலை 18ஆம் தேதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அது வரை விலக்கு அளிக்கப்படும்" என்றார்.


பன்னீர், லஸ்ஸி, மோர், பேக் செய்யப்பட்ட தயிர், கோதுமை மாவு, மற்ற தானியங்கள், தேன், பப்பாளி, உணவு தானியங்கள், இறைச்சி மற்றும் மீன் (உறைய வைக்கப்பட்டதை தவிர்த்து), பொயங்கி அரிசி, வெல்லம் ஆகியவற்றின் விலை ஜூலை 18ஆம் தேதியுடம் உயர்கிறது. தற்போது, பிராண்டட் மற்றும் பேக் செய்யப்பட்ட உணவுப் பொருட்களுக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது.


பேக் செய்யப்படாத, லேபில் இடப்படாத பொருள்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டு வருகிறது. 


விடுதி அறைகள் (ஒரு இரவுக்கு ₹ 1,000 க்கும் குறைவான கட்டணம்) மற்றும் மருத்துவமனை அறைகள் (ஒரு நாளைக்கு ₹ 5,000 க்கு மேல் கட்டணம்) 12 சதவீத ஜிஎஸ்டி விகிதத்தின் வரம்பிற்குள் கொண்டு வருவதற்கான மாநில நிதி அமைச்சர்களின் பரிந்துரையையும் ஜிஎஸ்டி கவுன்சில் ஏற்றுக்கொண்டது.  இதுவும் ஜூலை 18 முதல் அமலுக்கு வருகிறது.


இதையும் படிக்க: டிடிவி தினகரனோடு உறவு; குடும்பத்தை மட்டும் பார்க்கிறார் ஓபிஎஸ்: பரபரப்பை கிளப்பும் உதயகுமார்


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண