திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த தானிப்பாடி அருகே உள்ள மலையனூர் செக்கடி கிராமத்தை சேர்ந்தவர் சேட்டு. இவருடைய மகன் முருகன் வயது (27) கூலிதொழில் செய்துவருகிறார். இந்நிலையில் முருகன், 10-ம் வகுப்பு மாணவி ஒருவரை அடிக்கடி தனது இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு அழைத்து சென்று வந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே நெருக்கம் அதிகமாகி அது காதலாக மாறி உள்ளது. அப்போது முருகன் மாணவியிடம் ஆசைவார்த்தை கூறி அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் மாணவி கர்ப்பம் அடைந்தார். இதனால் பதட்டம் அடைந்த முருகன் மாணவிக்கு மாத்திரை கொடுத்து கருக்கலைப்பு செய்துள்ளார்.


 




 


அதைத்தொடர்ந்து வழக்கம் போல் முருகனும், மாணவியை மீண்டும் பள்ளிக்கு அழைத்து சென்று வந்துள்ளார். அப்போது மீண்டும் மாணவியுடன் முருகன் உல்லாசமாக இருந்துள்ளார். இதனால் மாணவி இரண்டாவது முறையாக கர்ப்பம் அடைந்துள்ளார். 4 மாத கர்ப்பம் ஆன நிலையில் மாணவியின் கருவை கலைக்க முருகன் முடிவு செய்துள்ளார். மாணவி தன்னுடைய பெற்றோரிடம் பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு நேற்று வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றுள்ளார். மாணவியை மலையனூர் செக்கடி கிராமத்தை சேர்ந்த சின்னசாமி என்பவருடைய மகன் பிரபு என்பவரது உதவியுடன் ரெட்டியார் பாளையம் கிராமத்திற்கு முருகன் அழைத்து சென்றுள்ளார்.


 




 


அங்கு ஜெயராஜ் மனைவி காந்தி வயது (65) என்பவரது உதவியுடன் மாணவிக்கு கருகலைப்பு மாத்திரை கொடுத்து கருவை கலைக்க முயற்சித்துள்ளனர். பின்னர் அந்த வீட்டில் இருந்து மாணவி நடந்து சிறிது தூரம் சென்றுள்ளார். அப்போது அங்குள்ள ஒரு பேக்கரியின் அருகே மயங்கி கீழே விழுந்துள்ளார். உடனே அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மாணவியை சிகிச்சைக்காக தானிப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், மாணவி இறந்துவிட்டதாகவும், மாணவி 4 மாத கர்ப்பிணியாக இருப்பதையும் உறுதி செய்தனர். இதுகுறித்து மாணவியின் தந்தை தானிப்பாடி காவல்நிலையத்தில் புகார் செய்தார். அதில் தனது மகளை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்தும் கர்ப்பமாக்கி கருக்கலைப்பு செய்து கொலை செய்த 3 நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி புகார் அளித்துள்ளார்.


 




 


இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மாணவியின் உடலை பிரேத பரிசோதனைகாக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில் மாணவி கர்ப்பிணியாக இருந்தது உறுதி செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து மாணவியை கர்ப்பிணியாக்கி, கருக்கலைப்பு செய்ய முயன்ற முருகன், அவருக்கு துணையாக இருந்த அவருடைய ‌நண்பர் பிரபு ஆகிய இருவரையும் தானிப்பாடி சிறப்பு துணை ஆய்வாளர் முரளிதரன் கைது செய்தார். மேலும் தலைமறைவான மூதாட்டி காந்தியை தேடி வருகின்றனர். பத்தாம் வகுப்பு மாணவியை கர்ப்பிணியாக்கி, கருக்கலைப்பு செய்த போது இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண