ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் சில முக்கியமான விஷயங்களில் மாற்றம் ஏற்படும். குறிப்பாக சமையல் எரிவாயு, வங்கி கடன் விகிதங்கள் உள்ளிட்ட பல விஷயங்களில் மாற்றம் ஏற்படும். அந்தவகையில் இன்று முதல் சில முக்கிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில் இன்று முதல் என்னென்னவற்றில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன?


எஸ்பிஐ வங்கி கடன்:


இந்தியாவின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்று எஸ்பிஐ. இந்த நிறுவனம் அடிக்கடி தன்னுடைய கடன் வட்டி விகிதத்தில் சில மாற்றங்களை செய்து வருகிறது. அந்தவகையில் இன்று முதல் எஸ்பிஐ கடன் வட்டி விகிதத்தில் 40 புள்ளிகள் அதிகரித்துள்ளது. ரிசர்வ் வங்கி தன்னுடைய ரெப்போ வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளது. அதன்காரணமாக எஸ்பிஐ வங்கி தன்னுடைய வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. தற்போது எஸ்பிஐ வங்கியின் கடன் வட்டி விகிதம் 6.65 மற்றும் சிஆர்பி ஆகியவற்றுடன் சேர்ந்து அதிகரிக்க உள்ளது. 


ஆக்சிஸ் வங்கி சேவை கட்டணம்:


ஆக்சிஸ் வங்கி இந்த மாதம் முதல் தன்னுடைய வங்கி சேவைகளுக்கான கட்டணங்களை உயர்த்தியுள்ளது. அந்தப் புதிய கட்டணம் இன்று முதல் அமலுக்கு வர உள்ளது. ஆக்சிஸ் வங்கியில் வங்கி கணக்கு வைத்திருக்கும் அனைவரும் இந்தப் புதிய சேவை கட்டண உயர்வு அமலுக்கு வர உள்ளது. 




மேலும் படிக்க:சிலிண்டர் விலை குறைந்ததால் நிம்மதி பெருமூச்சு விட்ட மக்கள்.. எவ்வளவு தெரியுமா?




கார் மற்றும் இருசக்கர வாகன விலை உயர்வு:


கார் மற்றும் இருசக்கர வாகனங்களுக்கான காப்பீட்டு பிரீமயத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2019-20ஆம் ஆண்டிற்கு பிறகு தற்போது மீண்டும் இந்த கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் விலை அதிகரிக்க உள்ளது. 


தங்கத்தின் ஹால்மார்க் விதி:


இந்தியாவில் இன்று முதல் தங்க விற்பனையாளர் ஹால்மார்க் தரம் பெற்ற தங்கத்தை மட்டுமே விற்பனை செய்ய முடியும். இது தொடர்பான அறிவிப்பு கடந்த ஏப்ரல் மாதம் வெளியானது. அந்த உத்தரவு இன்று முதல் அமலுக்கு வர உள்ளது. இதனால் அனைத்து நகை கடைகளில் விற்கப்படும் தங்கத்துடைய கேரட் எவ்வளவாக இருந்தாலும் அவை அனைத்தும் ஹால்மார்க் தரத்தை பெற்று இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண