சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.135 குறைந்து ரூ. 2,373 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் வீட்டு உபயோக சிலிண்டரின் விலை மாற்றமின்றி ரூ. 1, 018. 50க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 


வர்த்தக ரீதியிலான எல்பிஜி சிலிண்டர்களின் விலை இன்று முதல் ரூ.135 குறைந்துள்ளது. 19 கிலோ எடை கொண்ட வர்த்தக சிலிண்டர் டெல்லியில் ரூ.2,354 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.2,454 ஆகவும், மும்பையில் ரூ.2,306 ஆகவும், சென்னையில் ரூ.2,507 ஆகவும் இருந்தது. இப்போது விலைகள் முறையே ரூ.2219, ரூ.2,322, ரூ.2,171.50 மற்றும் ரூ.2,373 என மாற்றியமைக்கப்பட்டுள்ளது.






மே 1ம் தேதி வர்த்தக சிலிண்டரின் விலை ரூ.100 உயர்த்தப்பட்டது. மார்ச்சில் தேசிய தலைநகரில் வர்த்தக சிலிண்டரின் விலை ரூ.2,012 மட்டுமே. ஏப்., 1ல், 2,253 ஆகவும், மே, 1ல், 2,355 ஆகவும் உயர்ந்தது. கடந்த வாரம், எல்பிஜி சிலிண்டரின் விலை ரூ.3.50 உயர்த்தப்பட்டது. வர்த்தக சிலிண்டரின் விலை 8 ரூபாய் உயர்த்தப்பட்டது.


கடந்த மே 8ம் தேதி, வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டருக்கு 50 ரூபாய் உயர்த்தப்பட்டது. வர்த்தக ரீதியிலான எல்பிஜி சிலிண்டர்களின் விலை சிலிண்டருக்கு ரூ.10 குறைக்கப்பட்டுள்ளது.


கடந்த மாதம், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்து, இரண்டு அத்தியாவசிய பொருட்களின் உயர்ந்து வரும் விலையை தளர்த்தியது. கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட சில மாநிலங்களும் மதிப்பு கூட்டு வரியை குறைத்துள்ளன.


இதற்கிடையில், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் மற்றும் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் உள்ளிட்ட ஆயில் மார்க்கெட்டிங் நிறுவனங்கள், உஜ்வாலா திவாஸைக் கொண்டாட இன்று நாடு முழுவதும் 5,000 க்கும் மேற்பட்ட கிராமங்களில் திட்டமிட்டுள்ளனர். 


அனுபவப் பகிர்வைத் தவிர, திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயுவின் (LPG) பாதுகாப்பான மற்றும் நீடித்த பயன்பாட்டை இலக்காகக் கொண்டு, எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் வாடிக்கையாளர் சேர்க்கையை அதிகரிக்க முயற்சிகளை மேற்கொள்ளும்.


பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா என்பது சமூக உள்ளடக்கத்திற்கான பிரதமர் நரேந்திர மோடி அரசாங்கத்தின் பிரபலமான முயற்சியாகும். இத்திட்டத்தின் கீழ், ஒவ்வொரு பிபிஎல் குடும்பத்திற்கும் இலவச எல்பிஜி இணைப்பு வழங்கப்படுகிறது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண