தமிழ்நாடு:



  • தமிழ்நாட்டிற்கான ஜிஎஸ்டி நிலுவை தொகையான 9,602 கோடி ரூபாயை மத்திய அரசு விடுவித்துள்ளது. 

  • தமிழ்நாடு அரசின் திட்டங்கள் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுடன் ஆய்வு செய்கிறார்.

  • மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு பரிசீலனை இன்று நடைபெறுகிறது.

  • தமிழ்நாட்டில் ஒரே நாளில் 5,286 பேர் பணியிலிருந்து ஓய்வு பெற்றுள்ளனர்.

  • முல்லை பெரியார் அணையிலிருந்து இன்று நீர் திறப்பு.

  • திருப்பூர் பகுதிகளில் இன்று முதல் மீண்டும் ஜவுளி உற்பத்தி தொடங்கியுள்ளது.

  • குரங்கம்மை நோய் பாதிக்கப்பட்ட நாடுகளிலிருந்து வரும் நபர்களை கண்காணிக்க தமிழ்நாடு சுகாதாரத்துறை உத்தரவு.


இந்தியா:



  • இந்தியா-சீனா எல்லை பிரச்னை தொடர்பான பேச்சுவார்த்தை இன்று நடைபெறுகிறது.

  • பிரபல திரைப்பட பிண்ணனி பாடகர் கே.கே மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். 

  • டெல்லியில் 30 அடி உயரத்தில் நேதாஜியின் சிலை நிறுவப்படும் என்று பிரதமர் மோடி அறிவிப்பு.

  • சர்வதேச தரத்தில் திருப்பதி ரயில் நிலையத்தை மாற்ற நடவடிக்கை. 

  • தென்மேற்கு பருவமழை காரணமாக கர்நாடகாவில் கனமழை எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

  • பிரதமரின் மக்கள் மருந்தகங்களின் எண்ணிக்கையை உயர்த்த மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது.

  • இந்திய ராணுவம் மற்றும் விமானப்படைகளுக்கு ஏவுகணைகளை வாங்கும் ஒப்பந்தங்களில் பாதுகாப்புத்துறை கையெழுத்திட்டுள்ளது.

  • 500 ரூபாய் நோட்டில் கூடுதல் பாதுகாப்பு வசதிகள் கொண்டுவரப்பட உள்ளதாக தகவல்.


உலகம்:



  • உக்ரைன் உடனான போரை ரஷ்யா கைவிட வேண்டும் என்று போப் ஃபிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

  • பிரேசில் நாட்டில் மழை வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100ஆக உயர்ந்துள்ளது. 

  • ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் நவால்னி மீது 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் வகையில் புதிய வழக்குப்பதிவு

  • கார்கிவ் பகுதியிலிருந்து நூற்று கணக்கான மக்கள் உக்ரைன் கட்டுப்பாட்டு பகுதிக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.


விளையாட்டு:



  • பிரஞ்சு ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் காலிறுதியில் நோவக் ஜோகோவிச்சை வீழ்த்தி ரஃபேல் நடால் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

  • பிரஞ்சு ஓபன் டென்னிஸ் ஆடவர் இரட்டையர் பிரிவு அரையிறுதிக்கு இந்தியாவின் ரோகன் போப்பண்ணா ஜோடி முன்னேறியுள்ளது. 

  • ஆசிய கோப்பை ஹாக்கி தொடரில் இந்தியா-ஜப்பான் அணிகள் 3வது இடத்திற்கான போட்டியில் இன்று மோதுகின்றன.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண