நாள்: 1.06.2022


நல்ல நேரம் :


காலை 9.30 மணி முதல் காலை 10.30 மணி வரை


மாலை 4.30 மணி முதல் மதியம் 5.30 மணி வரை


கௌரி நல்ல நேரம் :


காலை 10.30 மணி முதல் காலை 11.30 மணி வரை


மாலை 6.30 மணி முதல் மாலை 7.30 மணி வரை


இராகு :


காலை 12 மணி முதல் நண்பகல் 1.30 மணி வரை


குளிகை :


காலை 10.30 மணி முதல் மதியம் 12 மணி வரை


எமகண்டம் :


காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை


சூலம் –  வடக்கு 


மேஷம் :


மேஷ ராசி நேயர்களே, உங்கள் கடின முயற்சி மூலம் உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். நீங்கள் புத்திசாலித்தனத்துடன் ஆற்றும் பணிக்காக உங்கள் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். உங்கள் கீழ்பணிபுரிவோர்களிடமும் நல்லுறவை பராமரிப்பீர்கள்.பாதுகாப்பற்ற உணர்வை தவிர்ப்பதற்கு முயற்சி செய்யுங்கள்.


ரிஷபம்:


ரிஷப ராசி நேயர்களே, பணிச்சுமை அதிகரித்துக்கொண்டே போவதைக் காண்பீர்கள். பணியில் தவறுகள் நேரலாம். பல தடைகளுக்குப் பின் உங்களுக்கு திருப்தி கிடைக்கும். உங்கள் வார்த்தைகள் உங்கள் துணையின் மனதை காயப்படுத்தும். உங்கள் மனதை ஓய்வாக வைத்துக் கொள்ள வேண்டும்.


மிதுனம் :


மிதுன ராசி நேயர்களே, பணிச்சூழல் கடினமாக இருப்பதாக உணர்வீர்கள்.கடினமான வேலை செய்ய வேண்டியிருப்பதன் காரணமாக மகிழ்ச்சியின்றி காணப்படுவீர்கள். இன்று சீரற்ற பணப்புழக்கம் காணப்படும். உங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும் நிலைமை காணப்படாது.


கடகம் :


கடக ராசி நேயர்களே, பணியில் தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் அதிக கவனம் செலுத்த வேண்டியிருக்கும். உங்கள் துணையிடம் நீங்கள் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும்.இதன் மூலம் நல்ல புரிந்துணர்வு ஏற்படும். உங்கள் நிதநிலைமையை சமாளிப்பதை நீங்கள் கடினமாக உணர்வீர்கள். 


சிம்மம்:


சிம்ம ராசி நேயர்களே, அக்கம் பக்கத்தினரின் ஆதரவு உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும். உங்கள் மேலதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். அவர்கள் உங்கள் பணிகளைப் பாராட்டுவார்கள். உங்கள் திறமைகள் மதிக்கப்படும்.இன்று நல்ல விஷயங்களை செய்வீர்கள்.


கன்னி :


கன்னி ராசி நேயர்களே, உங்கள் சிறந்த பணியாற்றும் முறை காரணமாக நீங்கள் நற்பலன்களைப் பெறுவீர்கள். உங்கள் சகபணியாளர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். உங்கள் துணையிடம் நேர்மையாக நடந்து கொள்வீர்கள். இதனால் நல்ல புரிந்துணர்வு அமையும்.


துலாம் :


துலாம் ராசி நேயர்களே, இன்று பணவரவிற்கு சாதகமான சூழ்நிலை அமையாது. நீங்கள் பணத்தை சேமிக்க வேண்டும். பணத்தை பத்திரமாக பாதுகாப்பாக கையாண்டால் பண இழப்பை தவிர்க்கலாம். உங்களுக்கான சரியான வழியை தேர்ந்தெடுக்க நீங்கள் கற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் திறமையாக திட்டமிட்டு செயலாற்ற வேண்டும்.


விருச்சிகம் :


விருச்சிக ராசி நேயர்களே, நிதிநிலைமையைப் பொறுத்தவரை இன்று அவ்வளவு சிறப்பாக இருக்காது. நீங்கள் சேமிக்க வேண்டியது அவசியம். பணிச்சுமை அதிகரித்து காணப்படும். உங்கள் பணிகளை குறித்த நேரத்திற்குள் முடிக்க நீங்கள் திட்டமிட வேண்டியது அவசியம்.


தனுசு :


தனுசு ராசி நேயர்களே, பணியிடச் சூழல் சாதகமாக இருக்கும். உங்கள் உழைப்பிற்கு பலன் கிடைக்கும்.நீங்கள் பாராட்டைப் பெறுவீர்கள். புதிய தொடர்புகள் இன்று உங்களுக்கு உதவிகரமாக இருக்கும். இன்று பயணங்கள் காணப்படும். உங்களிடம் போதிய அளவு பணம் காணப்படும். உங்கள் குடும்பத்திற்காக பணம் செலவு செய்வீர்கள்.


மகரம் :


மகர ராசி நேயர்களே, நீங்கள் செய்த பணிக்கு பாராட்டு பெறுவீர்கள். பணிகள் ஆற்றுவதில் சில தாமதங்கள் காணப்படும். நீங்கள் இன்று உங்கள் துணையுடன் வெளிப்படையாகப் பேசுவீர்கள். அதனால் நல்ல புரிந்துணர்வு காணப்படும். உங்கள் பிரச்சினைகள் பற்றிக் கவலைப்படாமல் மகிழ்ச்சியுடன் இருங்கள்.


கும்பம்:


கும்ப ராசி நேயர்களே, ஆன்மிக காரியங்களுக்காக பணத்தை செலவு செய்வீர்கள். இது உங்களுக்கு ஆறதலைத் தரும். பயணங்களால் செலவுகள் ஏற்படும். முறையான திட்டமிடல் மூலம் கடினமான விஷயங்களையும் எளிதில் கையாளலாம். 


மீனம்:


மீன ராசி நேயர்களே, உங்கள் பணியில் சில அசௌகரியங்களை எதிர்கொள்வீர்கள்.பணிச்சுமை அதிகரித்துக் கொண்டேயிருக்கும். நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுவீர்கள். பணப்புழக்கம் சிறப்பாக இருக்காது. இன்று அதிகரிக்கும் செலவினங்கள் காணப்படும்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண