இந்தியாவிலிருந்து சரக்கு மற்றும் சேவைகள் ஏற்றுமதி தொடர்பாக வெளிநாட்டு வர்த்தக கொள்கையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.


வெளிநாட்டு வர்த்தகக் கொள்கை 2023:


மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் வெளிநாட்டு வர்த்தக் கொள்கை 2023-ஐ  வெளியிட்டார். அப்போது பேசிய அவர், மாறிவரும் தேவைகளுக்கேற்ப சிறந்த முறையில் வெளிநாட்டு வர்த்தக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.


சம்பந்தப்பட்ட தரப்பினருடன்நீண்ட காலமாக விரிவாக விவாதிக்கப்பட்டு வெளிநாட்டு வர்த்தக் கொள்கை வகுக்கப்பட்டதாக தெரிவித்தார். நாட்டின் சரக்கு மற்றும் சேவைகள் ஏற்றுமதி ஏற்கனவே 750 பில்லியன் டாலர் என்ற அளவை எட்டியுள்ளதாகவும், இந்த ஆண்டு அது 760 பில்லியன் டாலரை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறினார்.






பிரதமர் நரேந்திர மோடி, 2021 ஆகஸ்ட் 6-ம் தேதி ஏற்றுமதியாளர்களுடன் கலந்துரையாடியதை  சுட்டிக்காட்டினார். அப்போது, ஏற்றுமதியை அதிகரிக்க பிரதமர் ஊக்கமளித்ததாகவும் அமைச்சர் பியூஷ் கோயல் கூறினார்.


இந்த நிகழ்ச்சியில் வர்த்தகத் துறை இணையமைச்சர் அனுப்ரியா படேல், வர்த்தகத் துறை செயலாளர் சுனில் பரத்வால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


4 அம்சங்கள்:


நாட்டின் பொருளாதாரத்தையும், உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளையும் மேம்படுத்த ஏற்றுமதி பல மடங்கு அதிகரிக்க வேண்டும் என்பதே பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு பார்வை என்று குறிப்பிட்டார்.


ஊக்கத்தொகைகள், ஒருங்கிணைந்த முறையில் ஏற்றுமதி மேம்பாடு, வர்த்தகம் புரிதலை எளிதாக்குதல், மின் வணிகத்தை மேம்படுத்துதல் ஆகிய நான்கு முக்கிய அம்சங்களின் அடிப்படையில், வெளிநாட்டு வர்த்தகக் கொள்கை வெளியிடப்பட்டுள்ளது.


Also Read: Small Savings Schemes: ஹேப்பி நியூஸ்.. சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி மத்திய அரசு அறிவிப்பு


Also Read: Cheetah Cubs: நமீபியாவில் இருந்து இந்தியா கொண்டுவரப்பட்ட சிவிங்கி புலி 4 குட்டிகளை ஈன்றது...அதிகரிக்கும் எண்ணிக்கை