2023-24 நிதியாண்டின் முதல் காலாண்டில் (2023 ஏப்ரல் 1 முதல் ஜூன் 30, 2023 வரை) பல்வேறு சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை திருத்தி அமைத்துள்ளது மத்திய அரசு.


சிறு சேமிப்பு திட்டங்கள் குறித்தான வட்டி விகிதத்தை ஒவ்வொரு காலாண்டுக்கும் மத்திய அரசு அறிவித்து வருகிறது. இந்நிலையில் வரும் காலாண்டுக்கான (2023 -24 நிதி ஆண்டு ) வட்டி விகிதம் குறித்தான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.


 அதன் விவரங்கள்:




வட்டி விகிதம் உயர்வு:



  • சேமிப்புத் திட்டங்களுக்கு 01.01.2023 முதல் 31.03.2023 வரை வழங்கப்பட்டு வந்த  4 சதவீத வட்டி, 01.04.2023 முதல் 30.06.2023 வரையிலான காலகட்டத்திற்கு அதே நிலையில் தொடர்கிறது.

  • ஒரு ஆண்டு கால வைப்புக்கு வட்டி விகிதமானது 6.6 சதவிகிதத்திலிருந்து 6.8 சதவிகிதமாகவும்,  இரண்டு ஆண்டு கால வைப்புக்கு வட்டி விகிதமானது 6.8 சதவிகிதத்திலிருந்து 6.9 சதவிகிதமாகவும், மூன்று ஆண்டு கால வைப்புக்கு வட்டி விகிதமானது 6.9 சதவிகிதத்திலிருந்து 7 சதவிகிதமாகவும், ஐந்து ஆண்டு கால வைப்புக்கு வட்டி விகிதமானது 7 சதவிகிதத்திலிருந்து 7.5 சதவிகிதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

  • மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்துக்கு வட்டி விகிதமானது, 8 சதவிகிதத்திலிருந்து 8.2 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது


  • சேமிப்புத் திட்டங்களில் 5 ஆண்டுகால ரெக்கரிங் வைப்பு நிதிகளுக்கு வழங்கப்பட்டு வந்த 5.8 சதவீத வட்டி, 6.2 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.  இதே போல் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டங்களுக்கு வழங்கப்பட்டு வந்த வட்டி, 8 சதவீதத்திலிருந்து 8.2 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.



  • மாதாந்திர வருமான சேமிப்புத் திட்டத்துக்கு வட்டி விகிதமானது, 7.1 சதவிகிதத்திலிருந்து 7.4 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

  • பொது வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதமானது, 8 சதவிகிதத்திலிருந்து 8.2 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

  • தேசிய சேமிப்பு சான்றிதழ்-க்கு வட்டி விகிதமானது, 7 சதவிகிதத்திலிருந்து 7.7 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

  • சுகன்யா சம்ரிதி கணக்கு திட்டத்துக்கு வட்டி விகிதமானது, 7.6 சதவிகிதத்திலிருந்து 8 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

  • பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்துக்கான வட்டி விகிதமானது, 7.1 சதவிகிதத்திலேயே தொடர்கிறது.






Twitter on organisations: நிறுவனங்களுக்கான வெரிஃபைட் கணக்குகளுக்கு இவ்வளவு கட்டணமா?.. ஷாக் கொடுத்த எலான் மஸ்க்


Twitter Blue Tick: ட்விட்டரில் ப்ளூ டிக் வெச்சிருக்கிங்களா? - கட்டணம் செலுத்த இன்றே கடைசி நாள்..