2022-23 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று தாக்கல் செய்தார். திமுக தலைமையிலான அரசு தாக்கல் செய்யும் முழுமையான முதல் பட்ஜெட் இதுவாகும். பட்ஜெட்டை தாக்கல் அமைச்சர் தனது உரையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். இந்த நிதி அறிக்கைக்கு திமுக கூட்டணி கட்சிகள், பாமக உள்ளிட்ட கட்சிகள் வரவேற்பு அளித்துள்ளன. பட்ஜெட்டின் தொடக்கத்திலேயே அதிமுக வெளிநடப்பு செய்தனர்.
பட்ஜெட்டை தாக்கல் அமைச்சர் தனது உரையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். பல்வேறு துறைகளுக்கு இந்த பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பட்ஜெட் குறித்து பொது மக்களிடம் ஏபிபி நாடு சார்பில் கருத்துகள் கேட்கப்பட்டது.
மகளிருக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்ற திமுக அரசின் தேர்தல் வாக்குறுதி, பட்ஜெட் அறிவிப்பின்போதும் நிறைவேற்றப்படாததால் பெண்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இது குறித்து பேசிய பொது மக்கள் ”இலவச பஸ் பாஸ் மக்கள ஏமாத்துறதுக்கா? 1000 ரூபாய் எங்கே? பொது மக்கள ஏமாத்தீங்க” என கருத்து தெரிவித்திருக்கிறார் ஒரு பெண். ”அவர் வாக்கு கொடுத்துவிட்டார். அந்த 1000 ரூபாயால் பெரும் பயன் உள்ளது. இந்த ஆண்டாவது அதை நிறைவேற்ற வேண்டும்” என தெரிவித்திருக்கிறார் இன்னொருவர். “1000 ரூபாய் பற்றி அறிவிப்பு இருக்கும் என எதிர்ப்பார்த்தோம், ஆனால் ஏமாற்றமே மிஞ்சி இருக்கிறது. பஸ் பாஸ் இலவசமாக கொடுத்து என்ன பயன். அதற்கு பதிலாக இந்த அறிவிப்பை பற்றிய நிலவரம் வேண்டும்” என பெண்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
வீடியோவைக் காண:
2022-23-ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட்டை தாக்கல் செய்தபோது மகளிருக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படும் திட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
எனினும் பட்ஜெட்டைத் தாக்கல் செய்து, தனது உரையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகை குறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. இது பெண்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்