தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று தாக்கல் செய்தார். அதில் சில புதிய திட்டங்கள் மற்றும் பழைய திட்டங்கள் ஆகியவற்றிற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் நிதிநிலை அறிக்கையை அதிமுக கடும் விமர்சனம் செய்து வந்தது. எனினும் இந்த பட்ஜெட்டில் பலரும் எதிர்பார்த்த விஷயங்கள் இல்லை என்று சிலர் குற்றச்சாட்டி வந்தனர். இந்நிலையில் திமுகவின் கூட்டணி கட்சிகள் இந்த நிதிநிலை அறிக்கையை வரவேற்று வந்தது.அந்தவகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியிம் எம்.எல்.ஏ சிந்தனை செல்வன், “பொருளாதாரத் திட்டங்களுக்கு மட்டுமன்றி தமிழ் வளர்ச்சி உள்ளிட்ட கருத்தியல் பண்பாடு சார்ந்த கல்வி நலன் சார்ந்த மகளிர் நலன் சார்ந்த பல்வேறு கோணங்களில் இந்த திட்டம் பல முக்கிய அம்சங்களை முன்வைத்துள்ளது.விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நிதி நிலை அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள புதிய திட்டங்களை மனப்பூர்வமாக வரவேற்கிறோம்.


தமிழ்நாட்டில் சென்னையில் நடைபெறும் புத்தகக் கண்காட்சி போல தமிழகத்தில் அனைத்து மாவட்டத்திலும் புத்தகக் கண்காட்சியை விரிவுபடுத்துவதில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. மூவலூர் அம்மையார் திட்டத்தின் கீழ் உயர்கல்வி படிக்கும் அனைத்து மாணவிகளுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் தருகிற திட்டம் அறிமுகப்படுத்தி உள்ளது இதனை விசிக  கட்சி சார்பில் முழு மனதோடு வரவேற்கிறேன்..


ஆதிதிராவிட பழங்குடியின மக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை அரசு கொல்முதலில் 5 சதவீதம்  இறக்குமதி செய்வது வரவேற்கக் கூடியது. ஆதி திராவிட பழங்குடியின மக்கள் நலனுக்காக இன்னும் கூடுதலாக செயல்படுத்த வலியுறுத்திகிறோம். பழங்குடியின மக்களுக்கு ஒதுக்கப்படும் சிறப்பு நிதிகளில் இந்த நிதிநிலை அறிக்கையில் துணைத் திட்ட நிதி குறித்த ஆய்வு வேண்டும் சிறப்பு திட்டங்கள் மூலம் கொண்டு சேர்க்கிற குழு அமைக்க வேண்டும் என முதல்வரை கேட்டுக் கொள்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார். 




மேலும் படிக்க:TN Budget 2022 Highlights: திமுக அரசின் முழுமையான முதல் பட்ஜெட் - சிறப்பம்சங்கள், முக்கிய அம்சங்கள் என்ன..?




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண