2022-23 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று தாக்கல் செய்தார். திமுக தலைமையிலான அரசு தாக்கல் செய்யும் முழுமையான முதல் பட்ஜெட் இதுவாகும்.பட்ஜெட்டை தாக்கல் அமைச்சர் தனது உரையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். இந்த நிதி அறிக்கைக்கு திமுக கூட்டணி கட்சிகள், பாமக உள்ளிட்ட கட்சிகள் வரவேற்பு அளித்துள்ளன. பட்ஜெட்டின் தொடக்கத்திலேயே அதிமுக வெளிநடப்பு செய்தனர்.


இந்த நிலையில், 2022-23 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட்டை விமர்சித்து மாநில பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது பேஸ்புக் பக்கத்தில், இன்று தாக்கல் செய்யப்பட்ட தமிழக பட்ஜெட்டில் மத்திய அரசின் திட்டங்களை பெயர் சூட்டி மாநில அரசு அறிவித்துள்ளது. திமுக அரசு தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை ‘இன்றும்’ நிறைவேற்றவில்லை. தொலை நோக்கு திட்டம் எதுவும் இல்லாத ‘பகல் கனவு பட்ஜெட்டாக’ அமைந்திருக்கிறது. 6 முதல் 12ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்த மாணவிகளுக்கு உயர்கல்வியினை பயிலும் போது ரூ.1000 வழங்கப்படும் என தமிழக பட்ஜெட்டில் அறிவித்துள்ளனர். ஆனால் இது 'பழைய ஆயிரம் ரூபாய் வாக்குறுதி போல் இல்லாமல்’ செயல்படுத்த வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.


 



TN Budget 2022 Highlights: திமுக அரசின் முழுமையான முதல் பட்ஜெட் - சிறப்பம்சங்கள், முக்கிய அம்சங்கள் என்ன..?


மகளிருக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்ற திமுக அரசின் தேர்தல் வாக்குறுதி, பட்ஜெட் அறிவிப்பின்போதும் நிறைவேற்றப்படாததால் பெண்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். 


2022-23ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று தாக்கல் செய்தார். திமுக தலைமையிலான அரசு தாக்கல் செய்யும் முழுமையான முதல் பட்ஜெட் இதுவாகும். இதில் மகளிருக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படும் திட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 


எனினும் பட்ஜெட்டைத் தாக்கல் செய்து, தனது உரையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகை குறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. இது பெண்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 


இந்நிலையில் இந்தத் திட்டம் குறித்துப் பேசிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்,  “மகளிருக்கான உரிமைத் தொகை வழங்கும் வாக்குறுதியை நடைமுறைப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்” என்று கூறினார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண