2022-23 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று தாக்கல் செய்தார். திமுக தலைமையிலான அரசு தாக்கல் செய்யும் முழுமையான முதல் பட்ஜெட் இதுவாகும்.


பட்ஜெட்டை தாக்கல் அமைச்சர் தனது உரையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். பல்வேறு துறைகளுக்கு இந்த பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் பட்ஜெட் சிறப்பம்சம் மற்றும் முக்கிய அம்சங்கள்(TN Budget 2022 Highlights) குறித்து தெரிந்து கொள்ளலாம்.


*  “பெரியாரின் எழுத்துகளை எட்டுத்திக்கும் எடுத்து செல்ல பெரியாரின் சிந்தனை அடங்கிய தொகுப்பு 21 இந்திய, உலக மொழிகளில் அச்சு மற்றும் டிஜிட்டல் வழியில் வெளியிட ரூ.5 கோடி ஒதுக்கீடு


* தமிழ் வளர்ச்சித் துறைக்கு தமிழ்நாட்டில் பட்ஜெட்டில் ரூ.82.86 கோடி ஒதுக்கீடு


* பேரிடர் மேலாண்மை துறைக்கு ரூ.7400 கோடி ஒதுக்கீடு


* அணைகள் புனரமைப்பு பணிகளுக்கு ரூ.1,064 கோடி ஒதுக்கீடு


* வானிலை மேம்பாடு பணிகளுக்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு


* சென்னை அருகே தாவரவியல் பூங்காவுக்கு ரூ.300 கோடி ஒதுக்கீடு


* இல்லம் தேடி கல்வித் திட்டத்திற்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு


* முன்மாதிரி பள்ளிகள் தொடங்க ரூ.125 கோடி ஒதுக்கீடு


* புதிய நூலகங்கள் அமைக்க ரூ.125 கோடி ஒதுக்கீடு


* இலக்கிய திருவிழாக்கள் நடத்த ரூ.5.6 கோடி ஒதுக்கீடு


* காவல்துறை சார்ந்த திட்டங்களுக்கு ரூ.10,285 கோடி நிதி ஒதுக்கீடு


* அரசு பள்ளிகளில் 6 - 12 வரை படித்து உயர் கல்வியில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் மாதம் ரூ.1000 வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்


* அரசு பள்ளிகளில் 18,000 வகுப்பறைகள் கட்டப்படும். அரசு பள்ளிகளை மேம்படுத்துவதற்கு பேராசிரியர் க.அன்பழகன் கல்வி மேம்பாடுதிட்டம் உருவாக்கப்படும்.


* மாணவர்களுக்கான இலவா சைக்கிள் திட்டத்திற்கு ரூ.162 கோடி நிதி ஒதுக்கீடு


* ரூ.25 கோடியில் ‘தமிழ்நாடு ஒலிம்பிக் தங்கப் பதக்க தேடல்’ என்ற புதிய திட்டம் தொடங்கப்படும்.


* வடசென்னையில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் நவீன விளையாட்டு வளாகம் உருவாக்கப்படும்.


* ரூ.5.6 கோடி செலவில் அனைத்து மாவட்டங்களிலும் சென்னையை போல புத்தக கண்காட்சி நடத்தப்படும்.


* முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டத்திற்கு ரூ.1,547 கோடி நிதி ஒதுக்கீடு


* சமூக ஊடகங்களில் தவறான பிரச்சாரத்தை தடுக்க ‘ சமூக ஊடக சிறப்பு மையம்’ அமைக்கப்படும் 


* மாநகர் பேருந்துகளில் மகளிர் இலவச பயணம் மேற்கொள்ள மானியமாக ரூ.1,520 கோடி ஒதுக்கீடு


* மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கு ரூ.2,800 கோடி நிதி ஒதுக்கீடு


* கிழக்கு கடற்கரை சாலையில்  6 வழிச்சாலை அமைக்க ரூ.135 கோடி நிதி ஒதுக்கீடு


*  500 புதிய மின்சார பேருந்துகள் வாங்கப்படும்


*  வட்டியில்லா பயிர்க்கடன் திட்டத்திற்கு ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு


* நகைக்கடன் தள்ளுபடிக்காக ரூ.1000 கோடியும், மகளிர் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடிக்காக ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு


* மருத்துவத்துறைக்கு 17,901.23 கோடி நிதி ஒதுக்கீடு


* இந்து சமய அறநிலையத்துறைக்கு ரூ.340.87 கோடி நிதி ஒதுக்கீடு. சிதிலமடைந்த கோயில்களை புனரமைக்க ரூ.100 கோடி ஒதுக்கீடு


* மாற்றுத்திறனாளிகள் பராமரிப்புக்கு ரூ.450 கோடி, மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கு ரூ.838.01 கோடி நிதி ஒதுக்கீடு


* சிங்கார சென்னை 2.0 திட்டத்திற்கு ரூ.500 கோடி, கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்திற்கு ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு


* காயமற்ற, கைவிடப்பட்ட விலங்குகளை பராமரிக்க, மாவட்டந்தோறும் வள்ளலார் காப்பகங்கள் அமைக்க ரூ.20 கோடி ஒதுக்கீடு


குடும்பத் தலைவிகளுக்கு மாதம்  ரூ.1000 வழங்கும் திட்டம் குறித்த அறிவிப்பு பட்ஜெட்டில் இடம்பெற்றவில்லை. இதனால், குடும்பத் தலைவிகள் மிகவும் ஏமாற்றத்தில் இருக்கின்றனர். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண