TN Budget 2022 LIVE: கல்விக்கும், சுகாதாரத்துக்கும் அதிக அளவு பணம் ஒதுக்கியுள்ளனர்.. பட்ஜெட்டை பாராட்டிய ப.சிதம்பரம்
Tamil Nadu Budget 2022 LIVE Updates: 2022- 2023ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் தாக்கல் குறித்த தகவல்களை உடனுக்குடன் abp நாடு பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம்.
கல்விக்கும், சுகாதாரத்துக்கும் அதிக அளவு பணம் ஒதுக்கியுள்ளனர்.. பட்ஜெட்டை பாராட்டிய ப.சிதம்பரம்
காஞ்சிபுரம், கும்பகோணம், கரூர், கடலூர், சிவகாசி மாநகராட்சிகளில் அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்க , தலா ரூ.10 கோடி ஒதுக்கீடு
எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு செய்யாமல் இங்கு அமர்ந்திருந்தால், ஊழல் தடுப்பு துறை வலுப்படுத்தப்படும் என்ற அறிவிப்பை கேட்டப்பிறகு நிச்சயம் வெளிநடப்பு செய்திருப்பார்கள்
- பேரவையில் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேச்சு
இதுவரை இல்லாத அளவுக்கு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை வலுப்படுத்தப்படும்
நேர்மையான நிர்வாகத்தை மக்களுக்கு வழங்கவேண்டும் என்ற முதல்வரின் உறுதியான நிலைப்பாட்டால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது
ஆங்கில புரிதலுக்காக ஆங்கிலத்தில் பட்ஜெட் உரையை வாசித்தார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
மாநகராட்சி பேருந்துகளில் மகளிர் இலவச பயணம் செய்ய மானியமாக ரூ.1520 கோடி நிதி ஒதுக்கீடு.
உதகை சிறப்பு திட்டங்கள் மேற்கொள்ள ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அறிவிப்பு
பழம்பெரும் கோயில்களை புனரமைக்க ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பட்ஜெட்டில் அறிவிப்பு
வெள்ள காலங்களில் மூழ்கும் தரைபாலங்கள் உள்ள பகுதிகளில் மேம்பாலம் அமைக்க ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு
ஏற்றுமதி நிறுவன கட்டமைப்பை உருவாக்க ரூ.100 நிதி ஒதுக்கீடு செய்து பட்ஜெட்டில் அறிவிப்பு
சட்டமன்ற உறுப்பினர்கள் தொகுதி மேம்பாட்டு நிதியாக ரூ.705 கோடி ஒதுக்கீடு
தமிழ்நாவு மின்பகிர்மான இழப்பீடுகளை ஈடு செய்ய ரூ.13 ஆயிரத்து 108 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு
தமிழ்நாட்டில் மின்சார பேருந்துகள் வாங்கவும், பேருந்துகளை நவீன மயமாக்கவும் ரூ.5375 கோடி நிதி ஒதுக்கீடு
கிழக்கு கடற்கரை சாலையை ரூ.135 கோடியில் 6 வழிச்சாலையாக தரம் உயர்த்த முடிவு
கல்லூரி மாணவர்கள் திறனை மேம்படுத்த பட்ஜெட்டில் ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு
சென்னை அருகே தாவர பூங்கா அமைக்க ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவிப்பு
தீயணைப்புத்துறைக்கு ரூ.496.52 கோடி நிதி ஒதுக்கப்படுவதாக பட்ஜெட்டில் அறிவிப்பு
சதுரங்க விளையாட்டு போட்டி நடத்த நாடுகளுக்கு மத்தியில் போட்டி நிலவும். இதுவரை இந்தியாவுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. முதன்முறையாக இந்தியாவில் தமிழ்நாட்டில் நடைபெற முயற்சி எடுத்துள்ளோம். 150 நாடுகளை சேர்ந்த முன்னணி வீரர்கள் இதில் பங்கேற்பார்கள்.
ஆண்டுதோறும் 4 இலக்கியத் திருவிழா நடத்தப்படும் என்றும் அதற்கு ரூ. 5.6 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என பட்ஜெட்டில் அறிவிப்பு
அனைத்து மாவட்டங்களிலும் புத்தக காட்சிகள் நடத்தப்படும் என பட்ஜெட்டில் அறிவிப்பு
புதிதாக 18 ஆயிரம் வகுப்பறைகள் கட்டப்படும். அதற்காக ரூ.1300 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக பட்ஜெட்டில் அறிவிப்பு
வனப்பகுதியில் வரையாடுகளை பாதுகாக்க ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அறிவிப்பு
இல்லம் தேடி கல்வி திட்டத்திற்கு ரூ.200 கோடி நிதி ஒதுக்கி பட்ஜெட்டில் அறிவிப்பு
டெல்டா மாவட்டங்களில் கடைகோடி வரை தூர்வாரும் பணிக்கு ரூ.80 கோடி நிதி ஒதுக்கீடு
மறைந்த பேராசிரியர் அன்பழகன் பெயரில், ஆதிதிராவிடர் பள்ளிகள், கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் உள்ளிட்ட பள்ளிகளின் தரத்தை உயர்த்த புதிய திட்டம் ரூ. 7 ஆயிரம் கோடி செலவில் மேற்கொள்ளப்படும்.
ரூ.20 கோடி செலவில் வள்ளலார் கால்நடை பாதுகாப்பகங்கள் அமைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிப்பு
பேரிடர் மேலாண்மை துறைக்கு பட்ஜெட்டில் ரூ.7400 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தும் விதமாக சமூக ஊடகங்களில் தவறான பதிவுகளை தவிர்க்க சமூக ஊடக சிறப்பு மையம் அமைக்கப்படும் என பட்ஜெட் அறிவிப்பு
மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு கடன் வழங்க, விவசாயிகளுக்கான பயிர்கடன் வழங்க ரூ.4130 கோடி நிதி ஒதுக்கீடு - பிடிஆர்
தனியார் பள்ளிகளில் தமிழ் வழி கல்வியில் 1 முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு இலவச புத்தகங்கள் வழங்கப்படும். பட்ஜெட்டில் அறிவிப்பு
நிலஅளவையர்களுக்கு ரோவர் இயந்திரம் வழங்கப்படும் -நிதியமைச்சர்
அரசு நிலங்களை பராமரிக்க ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. -நிதியமைச்சர்
விழுப்புரம், ராமநாதபுரத்தில் தொல்பொருள் அருங்காட்சியகம் அமைக்க ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வழக்குகளை விரைந்து முடிக்க தாமதமின்றி தீர்ப்பு வழங்க, நீதித்துறைக்கு அனைத்து ஆதரவும் தந்துள்ளோம், வணிக வழக்குகளை விரைந்து முடிந்த 7 வணிக நீதிமன்றங்கள் அமைக்க நிதி ஒதுக்கீடு
வழக்குகளை விரைந்து முடிக்க தாமதமின்றி தீர்ப்பு வழங்க, நீதித்துறைக்கு அனைத்து ஆதரவும் தந்துள்ளோம், வணிக வழக்குகளை விரைந்து முடிந்த 7 வணிக நீதிமன்றங்கள் அமைக்க நிதி ஒதுக்கீடு
முதியோர் ஓய்வோதிய திட்டம், மாற்றத்திறனாளிகள் ஓய்வதியம் உள்ளிட்ட பல்வேறு ஓய்வூதிய திட்டங்களுக்கு ரூ4816 கோடி ஒதுக்கீடு
சென்னை வெள்ளப்பகுதிகளை தடுக்க அமைக்கப்பட்ட குழவின் பரிந்துரைப்படி ரூ1000 கோடி ஒதுக்கப்படும் என முதல்வர் அறிவித்தார். இந்த ஆண்டு அதற்காக முதற்கட்டமாக ரூ.500 கோடி ஒதுக்கீடு. -பிடிஆர்
பெரியாரின் சிந்தனைகள் 21 மொழிகளில் வெளியிடப்படும் . அதற்கு ரூ.5 கோடி ஒதுக்கீடு என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பு
ஜிஎஸ்டி இழப்பீடு நடைமுறை அமலுக்கு வந்த பின் தமிழ்நாடு 20 ஆயிரம் கோடி வரி இழப்பை சந்திக்கும் - அமைச்சர்
பட்ஜெட் உரையின் போது அமளியில் ஈடுபட்ட அதிமுக எம்எல்ஏ.,க்கள் பேச வாய்ப்பளிக்காததால், வெளிநடப்பு செய்தனர்.
வரும் நிதியாண்டில் மாநில மொத்த உற்பத்தியில் நிதி பற்றாக்குறை 4.61 சதவீதத்தில் இருந்து 3.80 சதவீதமாக குறையும். -நிதி அமைச்சர்
இந்த ஆண்டு வருவாய் பற்றாக்குறை ரூ.7 ஆயிரம் கோடிக்கு மேல் குறைய வாய்ப்புள்ளது- பிடிஆர்
வரும் நிதியாண்டில் பொருளாதாரத்தில் நிச்சயமற்ற நிலை இருக்கும்- பழனிவேல் தியாகராஜன்
தமிழ்நாடு மின்பகிர்மான கழகத்திற்கு கொடுத்த மானியம், அகவிலைப்பிடி உயர்வின் தாக்கம் பட்ஜெட்டில் இருக்கும்.
உக்ரைன் -ரஷ்ய போரால் பொருளாதார மீட்டெடுப்பு பணிகள் பாதிக்கப்படக்கூடும் என்று நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் தாக்கலில் அறிவித்துள்ளார்.
மாநில உரிமைகளுக்கு இந்த அரசு தொடர்ந்து போராடும்- நிதியமைச்சர்
வரும் நிதியாண்டில் மாநில மொத்த உற்பத்தியில் நிதிப்பற்றாக்குறை 4.61 சதவீதத்தில் இருந்து 3.08 சதவீதமாக குறையும் என்று நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு பெருந்தோற்று காரணமாக, நலிந்த பிரிவினர் நலனை கருத்தில் கொண்டு பணியாற்றினோம் - பிடிஆர்
உக்ரைம் போர் காரணமாக, உலக பொருளாதாரம் பாதிக்கப்பட வாய்ப்பு. மாநில பொருளாதாரத்தில் அது தாக்கத்தை ஏற்படுத்தலாம். வட்டி வீதம் அதிகரிக்கும் என பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
பட்ஜெட் உரையின் போது பேசிய நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், ‛நாட்டின் பன்முகத்தன்மையை அழிக்கும் பாசிச சக்திகள்’ என பாஜகவை மறைமுகமாக சாடினார்.
பட்ஜெட் உரையின் மீது எதிர்ப்பு தெரிவித்த அதிமுகவினர், முன்னாள் அமைச்சர் வேலுமணி வீட்டில் ரெய்டு நடத்தியதற்கும், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை கைது செய்ததற்கும் கண்டனம் தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர்.
கடும் அமளியை தொடர்ந்து அதிமுகவினர் அமைதியானதால், மீண்டும் தனது பட்ஜெட் உரையை பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தொடர்ந்துள்ளார்
அமளியில் ஈடுபட்டு அதிமுகவினர் முன் வைத்த கருத்துக்கள், சட்டமன்ற குறிப்பில் இடம் பெறாது என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்
தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள், இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆகியோரிடம், ‛இருவரும் முதல்வராக இருந்தவர்கள்... தயவு செய்து ஒத்துழைப்பு தாருங்கள்...’ என்று சபாநாயகர் கூறினார். அதன் பின் அமைதியாகினர்.
அதிமுகவினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், தனது பட்ஜெட் உரையை பாதியில் நிறுத்தினார் பிடிஆர். சபாநாயகர் அவரை மீண்டும் பேச அழைத்த போது, மீண்டும் அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர்.
நிதியமைச்சரின் பட்ஜெட் உரையை எதிர்த்து, தொடர்ந்து அதிமுகவினர் அமளி. சபாநாயகர் அவர்களை கட்டுப்படுத்த முயற்சி. ஆனால் அதிமுகவின் சபையில் அமளி செய்து வருகின்றனர்.
தமிழ்நாடு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் மீதான உரையை தொடங்கினார். அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சட்டசபை கூட்டத்தொடர் இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ள நிலையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுடன் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட் தாக்கல் செயயப்பட உள்ளதால், சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்பட எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் சட்டப்பேரவைக்கு வந்து கொண்டிருக்கின்றனர்.
2022- 2023ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் தாக்கல் குறித்த தகவல்களை உடனுக்குடன் abp நாடு பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம்.
கடந்தாண்டு மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு முதன்முறையாக வேளாண்துறைக்கு என்று தனியாக நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தது. அதேபோல, இந்தாண்டும் வேளாண்துறைக்கு என்று தனியாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுமா? அவ்வாறு தாக்கல் செய்யப்பட்டால் வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் எப்போது தாக்கல் செய்வார்? என்றும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பட்ஜெட் கூட்டத்தொடரில் நீட் தேர்வு விவகாரம், அ.தி.மு.க.வினர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து அ.தி.மு.க.வினர் பேரவையில் குரல் எழுப்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் தாக்கல் செய்தபிறகு, வருகின்ற 21 ம் தேதி (திங்கட்கிழமை) முதல் பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கி 3 நாள்கள் நடக்கும் என்றும், வருகின்ற 24 ம் தேதி (வியாழக்கிழமை) பட்ஜெட் மீதான விவாதத்துக்கு நிதியமைச்சர் பதில் அளிக்க இருக்கிறார்.
2022- 2023ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டில் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் திட்டம் இடம் பெறும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Background
Tamil Nadu Budget 2022 LIVE Updates | தமிழ்நாடு பட்ஜெட் 2022-23
தமிழக அரசின் 2022-23ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்படுகிறது. இந்த நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்கிறார். சென்னை, புனித ஜார்ஜ் கோட்டையில் இன்று காலை 10 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.
இந்த பட்ஜெட் தாக்கலுக்காக புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள சட்டப்பேரவை அரங்கத்தில் ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. இந்த பட்ஜெட் தாக்கலை ஊடகம் வாயிலாகவும், இணையதளம் வாயிலாகவும் நேரலை செய்வதற்கான ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டு முதல் காகிதமில்லா பட்ஜெட் முறை பின்பற்றப்படுகிறது. அதாவது பட்ஜெட் நகலானது அரசியல் தலைவர்கள் முன் இருக்கும் கணினியில் இடம்பெற்றிருக்கும். அதை தொடுதிரை வசதியோடு தலைவர்கள் படிக்க முடியும்.
வேளாண்பட்ஜெட் தாக்கல்
கிட்டத்தட்ட 1 1/2 மணி நேரத்திற்கு மேலாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்(Palanivel Thiagarajan) தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் மாலை அலுவல் ஆய்வு குழு கூட்டமானது நடைபெறும். இந்தக் கூட்டத்தில்தான் பட்ஜெட் மீதான விவாதங்களை எத்தனை நாட்கள் நடத்துவது உள்ளிட்ட விவகாரங்கள் ஆலோசனை செய்யப்படும் எனத் தெரிகிறது. இந்தக் கூட்டத்தில் நாளை மறுதினம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக முடிவு எடுக்கப்பட்டு அந்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக எடுக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஞாயிற்று கிழமை விடுமுறை என்பதால் 21 முதல் 24 வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடக்கும் என்று நடக்கும் என்று சொல்லப்படுகிறது. 24 ஆம் தேதி முதல்வரின் பதிலுரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -