இந்தியாவே எதிர்பார்க்கும் மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படவிருக்கும் நிலையில், பட்ஜெட் உரையுடன் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்திக்க கிளம்பினார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்
ஹால்ஃப் ஹொயிட் கலர் புடவை
இன்று அவர் ஹால்ஃப் வொயிட், ஜரிகை பார்டர் வைத்த கிட்டத்தட்ட அசந்தன கலரில் நெய்யப்பட்ட புடவையை அணிந்து கெத்தாக அவர் குடியரசுத் தலைவர் மாளிகை நோக்கி சென்றுள்ளார். குடியரசுத் தலைவரிடம் பட்ஜெட் தாக்கலுக்கான அனுமதியை அவர் பெற்றதும் நாடாளுமன்றத்திற்கு வருவார். பின்னர், பிரதமரை சந்தித்த பிறகு அவைக்கு வந்து தன்னுடைய ஏழாவாது பட்ஜெட்டும் 3வது முறை ஆட்சி அமைத்துள்ள பாஜக அரசின் முதல் பட்ஜெட்டையும் தாக்கல் செய்யவுள்ளார்.
பாரம்பரிய புடவைகளை அணியும் நிர்மலா சீதாரமன்
இதுவரை 6 பட்ஜெட்டுகளை தாக்கல் செய்துள்ள மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், அவர் தாக்கல் செய்த 6 முறையும் 6 விதமான புடவைகளை அணிந்திருந்தார்.
- 2019ல் அவர் தாக்கல் செய்த முதல் பட்ஜெட்டின்போது செழிப்பை குறிக்கும் வகையிலான, தங்க நிற பார்டர்களுடன் கூடிய இளஞ்சிவப்பு பட்டுப்புடவையை அணிந்து வந்தார்
- 2020ஆம் ஆண்டில் மஞ்சள் நிற பட்டுப்புடவையில் மங்களத்தை குறிக்கும் வகையில் வந்து பட்ஜெட்டை தாக்கல் செய்தார்
- 2021ல் சிகப்பு நிற பார்டர்களுடன் கூடிய வெள்ளை நிற போச்சம்பள்ளி பட்டுப் புடவையில் தன்னுடைய பட்ஜெட்டை சமர்பித்தார் நிர்மலா சீதாராமன்
- 2022ல் ஒடிசாவின் பழுப்பு நிற பாரமபரியமான பம்கா சேலையை அணிந்து அவைக்கு வந்தார்
- 2023ல் கர்நாடாகத்தின் பாரம்பரியமான பட்டுப்புடவையை அணிந்தார்
- 2024ஆம் ஆண்டில் மேற்கு வங்கத்தில் பிரபலமான தையல்களுடன் கூடிய நீலம் மற்றும் பச்சை நிற புடைவையை- அணிந்து வந்து பட்ஜெட்டை படித்தார்
ALSO READ | Budget 2024 LIVE: மோடி 3.0வின் முதல் மத்திய பட்ஜெட்