மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்து வருகிறார். திருத்தப்பட்ட வருமானவரி செலுத்த 2 ஆண்டுகள் கூடுதலாக அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. கூட்டுறவு சங்ககளின் வரி 18 சதவிகிதத்திலிருந்து 15 ஆக குறைக்கப்பட்டுள்ளது. வரி செலுத்தம் நபர்களுக்கு தன்னுடைய நன்றியை நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 


 


மேலும் தேசிய ஊதிய திட்டத்திற்கு செலுத்தப்படும் தொகையில் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு டிடிஎஸ் வரம்பு 10% சதவிகிதத்தில் இருந்து 14%சதவிகிதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது மாநில அரசு ஊழியர்களின் சமூக பாதுகாப்புத் திட்டத்திற்கு பயன்படும் வகையில் இருக்கும். அத்துடன் மாநில அரசு ஊழியர்களை மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக சலுகைகள் பெற உதவும்  என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 


 






பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வருமான வரி விலக்கு தொடர்பாக எந்தவித அறிவிப்பும் இந்த முறை பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. இதனால் வருமான வரி உச்ச வரம்பில் எந்தவித மாற்றமும் இல்லை. இது பலரையும் பெரும் ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. ஏற்கெனவே உள்ள 2.5 லட்சம் ரூபாய் என்ற உச்சவரம்பு தொடர்ந்து நீடிக்கிறது. அத்துடன் 5 லட்சம் ரூபாய் வருமான வரை உள்ளவர்களுக்கு வருமான வரி செலுத்தவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அந்த நடைமுறையும் தொடர்ந்து தொடர்கிறது.


2022-23 மத்திய பட்ஜெட்டில் தனியார் கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு கூடுதல் கட்டணத்தில் 12 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாகக் குறைப்பதாகவும் அறிவித்தார்.அப்பொழுது, ஜிஎஸ்டி வசூலுக்கான ஆரோக்கியமான குறிகாட்டியாக இதைக் கருதலாம் எனவும், 2022 ஜனவரி மாதத்திற்கான மொத்த ஜிஎஸ்டி வசூல் ரூ.1,40,986 கோடியாக உள்ளது. இது ஜிஎஸ்டி தொடங்கப்பட்ட ஆண்டுகளில் இருந்து அதிகபட்சமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண


மேலும் படிக்க: Union Budget 2022 Highlights: பட்ஜெட் தொடங்கியது முதல் முடிவு வரை... முக்கிய அறிவிப்புகளின் தொகுப்பு இதோ...!