ஆருத்ரா கோல்டு நிறுவனம், ஹிஜாவு மற்றும் ஐ.எஃப்.எஸ் நிறுவனம் மோசடி தொடர்பாக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் புகாரளித்துள்ள நிலையில் பலர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதாக ஐ.ஜி ஆசியம்மாள் தெரிவித்துள்ளார்.


நிதி நிறுவனங்கள் மோசடி:


காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, சென்னை, வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில், ஆருத்ரா என்ற பெயரில் நிதி நிறுவனம் இயங்கி வந்தது. இந்த நிதி நிறுவனத்தில் ஒரு லட்ச ரூபாய் பணம் போட்டால் மாதம் 25 ஆயிரம் ரூபாய் வரும் என கவர்ச்சிகரமான விளம்பரத்தை பயன்படுத்தி பல ஆயிரம் கோடிகளை பொதுமக்களிடமிருந்து பெற்றுக்கொண்டு ஏமாற்றியதாக புகார் எழுந்தது. இதையடுத்து, பலர் மீது வழக்கு தொடரப்பட்டது.


இந்நிலையில் நிதி நிறுவனங்கள் மோசடி குறித்து, பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி ஆசியம்மாள் செய்தியாளர்களை சந்தித்து, எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்கமளித்தார்.


அவர் தெரிவித்ததாவது, 


ஆருத்ரா கோல்டு நிறுவனம் மோசடி தொடர்பாக 10 ஆயிரம் பேர் புகாரளித்துள்ள நிலையில் 120 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன


ஹிஜாவு நிறுவனம் தொடர்பான இடங்களின் நடத்தப்பட்ட சோதனையில் 3 கோடியே 34 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டன. 89 ஆயிரம் பேரிடம் பணம் பெற்று ஹிஜாவு  நிறுவனம் மோசடியில் ஈடுபட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. ஹிஜாவு நிறுவனம் தொடர்பான 162 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.


ஐ.எஃப்.எஸ் நிறுவனம் ரூ.6 ஆயிரம் கோடி மோசடி செய்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.  ஐ.எஃப்.எஸ் வங்கி கணக்குகள் இருந்த 121 கோடி முடக்கப்பட்டுள்ளது. ஐ.எஃப்.எஸ் நிறுவனம் தொடர்பான 791 வங்கி கணக்குகள் முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக  ஐ.ஜி ஆசியம்மாள் தெரிவித்துள்ளார். ஐ.எஃப்.எஸ் நிறுவனம் தொடர்பான இடங்களின் நடத்தப்பட்ட சோதனையில் 1 கோடியே 18 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக  ஐ.ஜி ஆசியம்மாள் தெரிவித்துள்ளார்.


எல்ஃபின் நிறுவனம் ரூ. 800 கோடி மோசடி செய்துள்ளது கண்டரியப்பட்டு 2 முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக ஐ.ஜி ஆசியம்மாள் தெரிவித்துள்ளார்.


Also Read: நாகையில் பிரபல நிதி நிறுவனம் பல கோடி ரூபாய் மோசடி - நிதி நிறுவன அதிபர், 3 மகன்கள் கைது


Also Read: Crime : விமான பணிப்பெண் மரணத்தில் திடீர் திருப்பம்...காதலனே மாடியில் இருந்து தள்ளிக்கொன்றது அம்பலம்..