Safest Cars In India: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் விற்பனை செய்யப்படும் மிகவும் பாதுகாப்பான 5 கார் மாடல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
நாட்டின் பாதுகாப்பான கார்கள்:
மக்கள் கார் வாங்கும்போது அதில் இடம்பெற்றுள்ள பாதுகாப்பு அம்சங்களை செலுத்த தொடங்கிவிட்டனர். சாலை விபத்துகளை தவிர்க்கும் நோக்கில், மத்திய அரசும் பல கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளன. இதன் காரணமாக நாட்டின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்களான, மாருதி, ஹுண்டாய் மற்றும் மஹிந்த்ரா உள்ளிட்ட நிறுவனங்கள், ஏர்பேக்குகள், ஆண்டி ப்ரேக்கிங் சிஸ்டம், எலெக்ட்ரானிக் ப்ரேக்ஃபோர்ஸ் டிஸ்ட்ரிபியூஷன் மற்றும் 3 பாயிண்ட் சீட் பெல்ட் போன்ற அம்சங்களை நிலையானதாக மாற்றியுள்ளன.
சொல்லபோனால் ஒரு சில சின்ன கார்களை தவிர்த்து மற்ற அனைத்து கார்களிலும் 6 ஏர் பேக்குகள் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளன. அதோடு, காரின் செயல்திறன் அடிப்படையில் அதன் பாதுகாப்பிற்கான ரேட்டிங்கை வழங்கும், NCAP எனப்படும் புதிய கார் பரிசோதனை திட்டமும் அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அந்த சோதனையின் அடிப்படையில் நாட்டில் கிடைக்கும் மிகவும் பாதுகாப்பான 5 கார்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
டாப் 5 பாதுகாப்பான கார்கள்:
5. ஃபோக்ஸ்வாகன் விர்டஸ் & ஸ்கோடா ஸ்லாவியா
மேற்குறிப்பிடப்பட்டுள்ள இரண்டு செடான்களுமே உற்பத்தியின் போது பாடி கட்டமைப்பு, பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் மெட்டீரியன்கள் பயன்பாடு ஆகியவற்றை ஒரே மாதிரியாக பகிர்ந்துகொள்கின்றன. பெயரில் மட்டுமே ஃபோக்ஸ்வாகனில் விர்டஸ் மற்றும் ஸ்கோடாவில் ஸ்லாவியா என வித்தியாசமான பேட்ஜ்களை பெற்றுள்ளது. அதன்படி, NCAP பாதுகாப்பு பரிசோதனையின் போது இரண்டு கார்களுமே, பெரியவர்களுக்கான பிரிவில் 34-க்கு 29.71 மற்றும் குழந்தைகளுக்கான பிரிவில் 49-க்கு 42 புள்ளிகளை பெற்றுள்ளன. ஒட்டுமொத்தமாக 83-க்கு 71.71 புள்ளிகளை பெற்று, நாட்டின் பாதுகாப்பான கார்களின் பட்டியலில் 5வது இடத்தை பிடித்துள்ளன.
- ஃபோக்ஸ்வாகன் விர்டஸ் (சென்னை ஆன் - ரோட் விலை) - ரூ.14.36 - ரூ.24.04 லட்சம்
- ஸ்கோடா ஸ்லாவியா (சென்னை ஆன் - ரோட் விலை) - ரூ.12.94 - ரூ.22.77 லட்சம்
4. மாருதி சுசூகி விக்டோரிஸ்
மாருதி சுசூகி நிறுவனம் அண்மையில் சந்தைப்படுத்திய விக்டோரிஸ் கார் மாடல், பாதுகாப்பு பரிசோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்று அசத்தியுள்ளது. NCAP பாதுகாப்பு பரிசோதனையில், பெரியவர்களுக்கான பிரிவில் 34-க்கு 33.72 மற்றும் குழந்தைகளுக்கான பிரிவில் 49-க்கு 41 புள்ளிகளை பெற்றுள்ளன. ஒட்டுமொத்தமாக 74.72 புள்ளிகளை பெற்று, மாருதி சுசூகி நிறுவனத்தின் மிகவும் பாதுகாப்பான கார் என்ற பெருமையை பெற்றுள்ளது. மிட்-சைஸ் எஸ்யுவி பிரிவில் ஆதிக்கம் செலுத்தி வரும் க்ரேட்டாவிற்கு போட்டியாக விக்டோரிஸ் சந்தைப்படுத்தப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக நிறுவனத்தின் டிசையர் கார் மாடலும் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்று இருந்தாலும், அதன் ஒட்டுமொத்த புள்ளிகள் என்பது விக்டோரிஸை காட்டிலும் குறைவாகும்.
- மாருதி விக்டோரிஸ் (சென்னை ஆன் - ரோட் விலை) - ரூ.13.12 - ரூ.24.80 லட்சம்
இதையும் படியுங்கள்: Maruti Suzuki Victoris: ஹைப்ரிட் காரை ரூ.10.50 லட்சத்துக்கு தரும் மாருதி.. 21 வகைகள், 29 கிமீ மைலேஜ், விலை விவரங்கள்
3. டாடா நெக்ஸான்
நாட்டிலேயே அதிக வேரியண்ட்களில் கிடைக்கும் கார் மாடலான நெக்ஸான், NCAP-யின் பாதுகாப்பு பரிசோதனையிலும் வலுவான புள்ளிகளை ஈட்டி கவனத்தை ஈர்க்கிறது. அதன்படி, பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கான சோதனையில் முறையே 32.22 மற்றும் 44.52 புள்ளிகளை பெற்றுள்ளது. ஒட்டுமொத்தமாக 83-க்கு 76.74 புள்ளிகளை பெற்றுள்ளது. இதன் மூலம் நாட்டிலேயே அதிக பாதுகாப்பு அம்சங்களை கொண்ட இரண்டாவது கார் என்ற பெருமையை நெக்ஸான் வசப்படுத்தியுள்ளது.
- டாடா நெக்ஸான் (சென்னை ஆன் - ரோட் விலை) - ரூ.9.50 - ரூ.19.24 லட்சம்
இதையும் படியுங்கள்: Tata Car: 54 வகை, நாட்டிலேயே அதிக வேரியண்ட்களை கொண்ட கார், 4 எரிபொருட்களிலும் ஓடும் - ரூ.8 லட்சம் தான் விலை
1 & 2. டாடா ஹாரியர் & சஃபாரி
டாடா நிறுவனத்தின் முதன்மையான எஸ்யுவி மாடல்களான ஹாரியர் மற்றும் சஃபாரி கார்கள், NCAP பாதுகாப்பு பரிசோதனையில் முதலிடத்தை பெற்று அசத்தியுள்ளன. பெரியவர்களுக்கான பிரிவில் 34-க்கு 33.05 மற்றும் குழந்தைகளுக்கான பிரிவில் 49-க்கு 45 மதிப்பெண்களை பெற்றுள்ளது. அதவாது ஒட்டுமொத்தமாக வேறு எந்த காரும் பெறாத வகையில், 83-க்கு 78.05 புள்ளிகளை பெற்று, நாட்டின் மிகவும் பாதுகாப்பான கார் மாடல்களாக திகழ்கின்றன. இதற்காக ஏராளமான பாதுகாப்பு அம்சங்கள் இந்த கார்களில் இணைக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
- டாடா ஹாரியர் (சென்னை ஆன் - ரோட் விலை) - ரூ.18.85 - ரூ.33.74 லட்சம்
- டாடா சஃபாரி (சென்னை ஆன் - ரோட் விலை) - ரூ.19.46 - ரூ.34.68 லட்சம்
Car loan Information:
Calculate Car Loan EMI