Tata Nexon: இந்திய ஆட்டோமோபைல் சந்தையில் டாடாவின் நெக்ஸான் கார் மாடல் 54 வேரியண்ட்களில் கிடைக்கிறது.
டாடா நெக்ஸான் கார் மாடல்:
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் கொள்முதல் விலைக்கு நிகரான மதிப்புமிக்க, காரை வழங்கும் நிறுவனங்களில் டாடாவும் முதன்மையானதாக உள்ளது. அந்த வகையில் தான், நெக்ஸான் கார் உள்நாட்டு சந்தையில் விற்பனையில் அசத்தி வருகிறது. ஒவ்வொரு மாதமும் நிறுவனம் சார்பில் அதிகம் விற்பனை செய்யப்படும் கார் மாடல்களில் ஒன்றாக உள்ளது. இதற்கு காரணம் இந்தியாவிலேயே பயனர்களின் பட்ஜெட்டிற்கு ஏற்ப வசதிகளை வழங்கும் வகையில், அதிகபட்சமாக 54 வேரியண்ட்களில் வழங்கப்படுகிறது. இதுபோக பெட்ரோல், டீசல், மின்சாரம் மற்றும் சிஎன்ஜி என நான்கு வகையான எரிபொருட்களிலும் இயங்கும் வகையில் இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது.
54 வேரியண்ட்கள், ஸ்பெஷல் எடிஷன்கள்:
நெக்ஸானின் வேரியண்ட்கள் இன்ஜின், எரிபொருட்கள், ட்ரான்ஸ்மிஷன் மற்றும் சிறப்பு எடிஷன்கள் ஆகியவற்றின் அடிப்படையில் வேறுபடுகிறது. இன்ஜின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சிஎன்ஜி ஆப்ஷனில் கிடைக்கிறது. அவற்றுடன் இணைக்க மேனுவல், ஆட்டோமேடிக் மற்றும் டூயல் கிளட்ச் ஆகிய ட்ரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. டார்க் மற்றும் காமோ போன்ற ஸ்பெஷல் எடிஷன்களும் நெக்ஸான் பெயரில் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றன. டீசல் இன்ஜினில் 19 வேரியண்ட்களும், சிஎன்ஜியில் 12 வேரியண்ட்களும், பெட்ரோல் இன்ஜினில் அதிகபட்சமாக 23 வேரியண்ட்களும் கிடைக்கின்றன.
டாடா நெக்ஸான் - தொழில்நுட்ப வசதிகள்
டாடா நெக்ஸான் கார் மாடலில் பயணத்தை சொகுசாக மேம்படுத்த சன் ரூஃப், வெண்டிலேடட் ஃப்ரண்ட் சீட்ஸ், 360 டிகிரி கேமரா மற்றும் ஏர் பியூரிஃபயர் ஆகிய அம்சங்கள் உள்ளன. இதுபோக, 10.25 இன்ச் டிஜிட்டல் ட்ரைவர் டிஸ்பிளே, கனெக்டட் கார் டெக், மல்டிபிள் ட்ரைவ் மோட்கள், எல்இடி முகப்பு விளக்குகள் & டிஆர்எல்ஸ், எல்இடி டெயில் லேம்ப், அலாய் வீல்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. ஆண்ட்ராய்ட் ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே உடன் கூடிய இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஹர்மன் சவுண்ட் சிஸ்டம், ரியர் ஏசி வெண்ட்ஸ், உயரத்தை சரி செய்யக்கூடிய ட்ரைவர் இருக்கை மற்றும் கூல்ட் க்ளோவ்பாக்ஸ் ஆகிய தொழில்நுட்ப அம்சங்களும் நெக்ஸானில் பயண அனுபவத்தை மேம்படுத்துகின்றன.
டாடா நெக்ஸான் - பாதுகாப்பு அம்சங்கள்:
சர்வதேச அளவிலும், உள்நாட்டிலும் நடந்த பாதுகாப்பு பரிசோதனைகளில் டாடா நெக்ஸான் கார் மாடல் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்று அசத்தியுள்ளது. அதன்படி, 6 ஏர் பேக்குகள், EBD உடன் கூடிய ABS, குழந்தைகளுக்கான ஐசோஃபிக்ஸ் இருக்கைகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம், ரியர் பார்கிங் கேமரா, ஹொல் ஹோல்ட் கண்ட்ரோல் மற்றும் பிளைண்ட் ஸ்பாட் டிடெக்சன் போன்ற அம்சங்களும் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இடம்பெற்றுள்ளன.
டாடா நெக்ஸான் - இன்ஜின் மைலேஜ்
நெக்ஸான் கார் மாடலில் 1.2 லிட்டர் டர்போ சார்ஜ்ட் பெட்ரோல் இன்ஜின், 1.5 லிட்டர் லிட்டர் டர்போசார்ஜ்ட் டீசல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படுகிறது. சிஎன்ஜி ஆப்ஷனுக்கு 1.2 லிட்டர் இன்ஜின் பயன்படுத்தப்படுகிறது. இரண்டு ஆப்ஷன்களிலும் ஆட்டோமேடிக் மற்றும் மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் ஆப்ஷன் கிடைக்கிறது. 5 பேர் அமரும் வகையிலான இருக்கை வசதி கொண்ட இந்த காரின் ரிபொருள் டேங்க், 44 லிட்டர் கொள்ளளவு கொண்டுள்ளது. பெட்ரோல் இன்ஜின் லிட்டருக்கு 17.44 கிலோ மீட்டர் வரையிலும், டீசல் இன்ஜின் லிட்டருக்கு 24 கிலோ மீட்டர் வரையிலும், சிஎன்ஜி கிலோவிற்கு 17.44 கிலோ மீட்டரும் மைலேஜ் வழங்குவதாக கூறப்படுகிறது. இதன் மின்சார எடிஷன் மூன்று பேட்டரி ஆப்ஷன்களில், அதிகபட்சமாக 489 கிலோ மீட்டர் ரேஞ்ச் அளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டாடா நெக்ஸான் - விலை, போட்டியாளர்கள்
இந்தியாவிலேயே அதிக வேரியண்ட்களை கொண்ட நெக்ஸான் கார் மாடலின் விலையானது, 8 லட்ச ரூபாயில் தொடங்கி 15 லட்சத்து 60 ஆயிரம் (எக்ஸ் - ஷோரூம்) வரை நீள்கிறது. இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஹுண்டாய் வென்யு, கியா சோனெட் மற்றும் மாருதி சுசூகி ஆகிய கார் மாடல்களிடமிருந்து நேரடியாக போட்டியை எதிர்கொள்கிறது.
Car loan Information:
Calculate Car Loan EMI