Maruti Suzuki Victoris: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மாருதி சுசூகி நிறுவனத்தின் விக்டோரிஸ் கார் மாடல் மொத்தம் 21 வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது.
மாருதி சுசூகி விக்டோரிஸ் விலை
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மாருதி சுசூகி நிறுவனத்தின் விக்டோரிஸ் கார் மாடல் சில வாரங்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டது. அதைதொடர்ந்து தற்போது கார் மாடலின் மொத்த விலை வரம்பும் வெளியாகியுள்ளது. அதன்படி, விக்டோரிஸ் கார் மாடலின் தொடக்க விலை 10.50 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் போர்ட்ஃபோலியோவில் பிரேஸ்ஸா மற்றும் கிராண்ட் விட்டாரா கார் மாடல்களுக்கு இடையே விக்டோரிஸ் பொருத்தப்பட்டுள்ளது. மொத்தம் 6 வேரியண்ட்களில் 21 ட்ரிம்களில் 2 வீல் ட்ரைவ் சிஸ்டம் மற்றும் ஆல் வீல் ட்ரைவ் சிஸ்டம் அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.
மாருதி விக்டோரிஸ் - விலை விவரங்கள்
| பவர்ட்ரெயின்/எரிபொருள் | வேரியண்ட்கள் | விலை (எக்ஸ்- ஷோரூம்) |
| மைல்ட் ஹைப்ரிட் | 1.5 MT LXi | ரூ.10.50 லட்சம் |
| 1.5 MT VXi | ரூ.11.80 லட்சம் | |
| 1.5 AT VXi | ரூ.13.36 லட்சம் | |
| 1.5 MT ZXi | ரூ.13.57 லட்சம் | |
| 1.5 AT ZXi | ரூ.15.13 லட்சம் | |
| 1.5 MT ZXi (O) | ரூ.14.80 லட்சம் | |
| 1.5 AT ZXi (O) | ரூ.15.64 லட்சம் | |
| 1.5 MT ZXi + | ரூ.15.24 லட்சம் | |
| 1.5 AT ZXi + | ரூ.17.19 லட்சம் | |
| 1.5 MT ZXi + (O) | ரூ.15.82 லட்சம் | |
| 1.5 AT ZXi + (O) | ரூ.17.77 லட்சம் | |
| ஆல் க்ரிப் / சிஎன்ஜி | 1.5 AT ZXi + ஆல் க்ரிப் | ரூ.18.64 லட்சம் |
| 1.5 AT ZXi + (O) ஆல் க்ரிப் | ரூ.19.22 லட்சம் | |
| 1.5 MT LXi சிஎன்ஜி | ரூ.11.50 லட்சம் | |
| 1.5 MT VXi சிஎன்ஜி | ரூ.12.80 லட்சம் | |
| 1.5 MT ZXi சிஎன்ஜி | ரூ.14.57 லட்சம் | |
| ஸ்ட்ராங் ஹைப்ரிட் | 1.5 e- CVT VXi | ரூ.16.38 லட்சம் |
| 1.5 e- CVT ZXi | ரூ.17.80 லட்சம் | |
| 1.5 e- CVT ZXi (O) | ரூ.18.39 லட்சம் | |
| 1.5 e- CVT ZXi+ | ரூ.19.47 லட்சம் | |
| 1.5 e- CVT ZXi+(O) | ரூ.19.99 லட்சம் |
மாருதி விக்டோரிஸ் - இன்ஜின், ட்ரான்ஸ்மிஷன் விவரங்கள்
விக்டோரிஸ் கார் மாடலானது LXi, VXi, ZXi, ZXi(O), ZXi+ மற்றும் ZXi+ (O) என மொத்தம் 6 வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது. நாட்டின் மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனமான மாருதி, தனது புதிய காரில் 5 ஸ்பீட் மேனுவல், பேடல் ஷிஃப்டிங் ஃபங்சனுடன் கூடிய 6 ஸ்பீட் டார்க் கன்வெர்டர் ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களை கொண்டுள்ளது. அதோடு, வலுவான ஹைப்ரிட் அம்சத்தை கொண்ட ட்ரிம்களில் மட்டும் eCVT அம்சம் வழங்கப்பட்டுள்ளது.
இதில் 1.5 லிட்டர் கே - சீரிஸ் டூயல் விவிடி 4 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் இடம்பெற்றுள்ளது. இது 103.06PS மற்றும் 139Nm ஆற்றலை உற்பத்தி செய்யும் திறனை கொண்டுள்ளது. அதேநேரம்,3 சிலிண்டர் 1.5 லிட்டர் வலுவான ஹைப்ரிட் இன்ஜின் ஆனது 92.45 PS மற்றும் 122 Nm ஆற்றலை உற்பத்தி செய்கிறது.
மாருதி விக்டோரிஸ் - மைலேஜ் விவரங்கள்
பெட்ரோல் எடிஷனானது லிட்டருக்கு 21 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குவதாக கூறப்படுகிறது. அதேநேரம், ஹைப்ரிட் அம்சமானது அதிகபட்சமாக லிட்டருக்கு 28.65 கிலோ மீட்டர் மைலேஜும், சிஎன்ஜி எடிஷன் 27 கிலோ மீட்டர் மைலேஜும் வழங்குவதாக நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாருதி விக்டோரிஸ் - பாதுகாப்பு அம்சங்கள்
மாருதி விக்டோரிஸ் கார் மாடலானது 4 ஆயிரத்து 360 மில்லி மீட்டர் நீளம், ஆயிரத்து 795 மில்லி மீட்டர் அகலம், ஆயிரத்து 655 மில்லி மீட்டர் உயரம் மற்றும் 2 ஆயிரத்து 600 மில்லி மீட்டர் வீல் பேஸ் வடிவமைப்புகளை கொண்டுள்ளது. 10 விதமான வெளிப்புற வண்ணப்பூச்சுகளை தேர்வு செய்யும் ஆப்ஷன் பயனர்களுக்கு வழங்கப்படுகின்றன. இந்த 5 சீட்டர் மிட்-சைஸ் எஸ்யுவி அண்மையில் பாதுகாப்பு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்று அசத்தியுள்ளது. பாதுகாப்பிற்காக 6 ஏர் பேக்குகள் நிலையானதாக சேர்க்கப்பட்டுள்ளதோடு, 360 டிகிரி கேமரா, எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், ட்ராக்ஷன் கண்ட்ரோல், EPB மற்றும் லெவல் 2 ADAS ஆகிய அம்சங்கள் நிரப்பப்பட்டுள்ளன.
மாருதி விக்டோரிஸ் - தொழில்நுட்ப வசதிகள்
பயணத்தை வசதியாகவும் சொகுசாகவும் மாற்றுவதற்கு ஏதுவாக உட்புறத்தில் டூயல் டோன் தீம் வழங்கப்பட்டுள்ளது. இதுபோக முன் எப்போதும் எந்தவித மாருதி காரிலும் இல்லாத வகையில், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்ட் ஆட்டோ கனெக்டிவிட்டி கொண்ட 10.1 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 10.25 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர், கெஸ்டர் கண்ட்ரோல்ட் பவர்ட் லிஃப்ட்கேட், முன்புறத்தில் வெண்டிலேடட் சீட்ஸ், 8 வழிகளில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஓட்டுனருக்கான பவர்ட் இருக்கை, டூயல் பேன் சன்ரூஃப், டால்பி அட்மாஸ் 5.1 உடன் கூடிய 8 ஸ்பீக்கர் ஆடியோ, ஆட்டோமேடிக் க்ளைமேட் கண்ட்ரோல் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த காருக்கான முன்பதிவினை அரேனா விற்பனை தளங்கள் மட்டும் ஆன்லைனில், ரூ.11 ஆயிரத்தை கட்டணமாக செலுத்தி மேற்கொள்ளலாம்.
Car loan Information:
Calculate Car Loan EMI