வீட்டில் உட்கார்ந்த இடத்தில் இருந்தே  பணம் சம்பாதிக்க வேண்டுமா, அப்படியானால் இந்த செய்தி உங்களுக்குதான். இந்த செய்தி எந்த மெனக்கெடலும் இல்லாமல் சில நிமிடங்களில் எப்படி நீங்கள் லட்சாதிபதியாக ஆவது என்பதை சொல்லிக்கொடுக்கப் போகிறது. எப்படி என்று கேட்கிறீர்களா.. அதற்கு உங்களிடம் 786 எண் கொண்ட 1,5, 10, 20,50, 100, 2000 ரூபாய் நோட்டுகள் இருந்தால் போதும். 


இன்றைக்கும் மக்கள் பழைய ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களை சேகரிப்பதை ஒரு பழக்கமாக கொண்டுள்ளனர். அப்படி நீங்கள் சேகரிக்கும் பழைய ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களை பெரிய அளவிலான தொகைக்கு விற்பனை செய்ய முடியும். அந்த வாய்ப்பை இ பே ( E -Bay) என்ற இணையதளம் உங்களுக்கு வழங்குகிறது. இந்த  இணையதளம் பழங்கால ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களை விற்பனை செய்வதற்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளது. 




 786 ஏன் ஸ்பெஷல்.. 


ஒவ்வொரு மதத்தினரும் தங்களுக்கென்று சில சம்பிராதயங்களை கடைபிடிக்கின்றனர். அந்த வகையில் முஸ்லிம்களுக்கு 786 இந்த சில மத நம்பிக்கைகளை தந்துள்ளது. பிற சமூகத்தினரும் இந்த 786 எண்ணை கொஞ்சம் ஸ்பெஷலாகவே கருதுகின்றனர். இப்படிப்பட்ட நம்பிக்கைகளை கொண்டுள்ள ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களை மக்கள் அதிக விலை கொடுத்து வாங்க தயாராக இருக்கின்றனர். அவர்களிடம் உங்கள் ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களை  இந்த இணையதளங்கள் கொண்டு செல்லும்.


எப்படி விற்பது? 


www.ebay.com என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும். 


Home Page க்குள் சென்று Register செய்து கொள்ள வேண்டும். 


இங்கு உங்களை நீங்கள் விற்பனையாளராக பதிவு செய்து கொள்ளலாம்.


உங்களிடம் இருக்கும் பழைய ரூபாய் நோட்டை புகைப்படம் எடுத்து தளத்தில் பதிவு செய்து கொள்ளவும். 


இதனையடுத்து ebay பழைய ரூபாய் நோட்டுகளை வாங்க விருப்பமுள்ளவர்களுக்கு உங்கள் விளம்பரத்தை காண்பிக்கும். 


யார் உங்கள் ரூபாய் நோட்டை வாங்க  முன்வருகிறார்களோ அவர் உங்களை தொடர்பு கொள்வார். 


நீங்கள் அவரிடம் அந்த ரூபாய் நோட்டுக்கான விலையை பேரம் பேசி,ரூபாய் நோட்டை விற்பனை செய்யலாம்.  


எவ்வளவு பணம் சம்பாதிக்க முடியும்? 


இந்த பழைய நோட்டுகள் அதிகளவு பணத்தை நாம் சம்பாதிக்க உதவும். இந்த இணையதளத்தில் 786 போன்ற நோட்டுகளை விற்பனை செய்ய ஏலமும் நடத்தப்படுகிறது. உங்கள் நோட்டின் அடிப்படை ஏலத்தொகையை சொல்லி, நீங்கள் ஏலத்தை தொடங்கலாம். இதில் யார் வேண்டுமானாலும் பங்கேற்க முடியும். உங்களிடம் 786 கொண்ட பழைய ரூபாய் நோட்டுகள் இருந்தால் இப்போதே அதனை நீங்கள் இ பே தளத்தில் விற்பனை செய்யலாம். இந்த நோட்ட்டின் ஏலம் 3 லட்சம் வரை சென்றிருக்கிறது குறிப்பிடத்தக்கது.