டி20 உலக்கோப்பை தொடரில் இந்தியா, அரையிறுதிக்குச் செல்ல முடியாமல் வெளியேறியதற்கு பிறகு, முதல் தொடரில் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. மேலும் விராட் கோலி மற்றும் ரவி சாஸ்திரி விலகியுள்ள நிலையில், ரோஹித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் கூட்டணி மீது அதிக எதிர்ப்பு உள்ள நிலையில் இந்த தொடர் நடைபெறுகிறது.
இந்தநிலையில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி, முதல் டி20 போட்டியில் இந்தியாவை ஜெய்ப்பூரில் எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் புவனேஸ்வர் மற்றும் அஸ்வின் தலா 2 விக்கெட்களும், சிராஜ் மற்றும் சாஹர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
பின்னர் ஆடிய இந்திய அணி 20 வது ஓவரில் வெற்றி இலக்கை எட்டி வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் சூர்யகுமார் அரை சதம் அடித்தார், கேப்டன் ரோஹித் சர்மா 48 ரன்னில் ஆட்டம் இழந்தார். இந்த வெற்றியை அடுத்து இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
இந்தநிலையில், நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டி 20 போட்டியில் இந்திய அணிக்கு கடைசி மூன்று பந்துகளில் 3 ரன்கள் தேவையாக இருந்தது. அப்பொழுது, ஆன் ஸ்ட்ரைக்கில் இருந்த ரிஷப் பண்ட் 16 பந்துகளில் 13 ரன்கள் பெற்றிந்தார். கடைசி ஓவர் 4 வது பந்தை வீசிய மிட்சல் பந்தில் ரிஷப் பண்ட் பௌண்டரி அடித்து இந்திய அணியை வெற்றிபெற செய்தார். பண்ட் அடித்த 4 ரன்கள் மூலம் இவர் புது சாதனை ஒன்றை படைத்துள்ளார். அது என்னவென்றால், 17 ம் தேதியான நேற்று ரிஷப் பண்ட் 17 பந்துகளில் 17 அடித்து இந்திய அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்று அசத்தினார். மேலும், ரிஷப் பண்ட் அணிந்திருக்கும் இந்திய அணியின் ஜெர்ச்சி நம்பரும் 17 என்பது குறிப்பிடத்தக்கது. இது எதிர்பாராத ஒன்று என்றாலும் அனைத்துமே 17 என்ற எண்ணில் கூடிவந்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்