அறிவிக்கப்பட்ட ஒரே நாளில் ஒரு லட்சத்துக்கும் மேலான முன்பதிவுகள் செய்யப்பட்டு சாதனை படைத்திருக்கிறது. இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் இது வரலாற்றுச் சாதனை. இதற்கு முன்பு எந்த ஆட்டோமொபைல் நிறுவனமும் 24 மணிநேரத்தில் இப்படியான வரலாற்றுச் சாதனையை எட்டியதில்லை. 


முன்னதாக மக்கள் மிகவும் எதிர்பார்த்த ஓலா ஸ்கூட்டரை வெறும் ரூ.499 செலுத்தி முன்பதிவு செய்துகொள்ளலாம் எனவும் இவர்களுக்கு விற்பனையின்போது முன்னுரிமை அளிக்கப்படும் என்று   அந்நிறுவனம் தெரிவித்திருந்தது.




இந்தியாவில் நாளுக்கு நாள் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துவரும் நிலையில் சைக்கிள் பயன்பாட்டிற்கு முழுவதுமாக மக்கள் மாறும் நிலை ஏற்பட்டுவிடும் போலும். இதன் காரணமாக எலெக்ட்ரிக் கார் மற்றும் ஸ்கூட்டர்களை வாங்குவதற்கு மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இந்நிலையில் தான், இந்தியாவில் வாடகை கார் சேவை வழங்குவதில் முன்னணி நிறுவனமாக ஓலா விரைவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பில் இறங்கவுள்ளது. குறிப்பாக இந்த ஓலா ஸ்கூட்டர் ஜெர்மன் டிசைன் விருது உள்பட சர்வதேச அளவில் பல விருதுகளை வென்றுள்ளது. எனவே புதிது புதிதாக பல ஸ்கூட்டர்கள் சந்தைக்கு வந்தாலும் ஓலா ஸ்கூட்டர் எப்பொழுது வரும் என மக்கள் அதிகளவில் காத்துள்ளனர். இந்நிலையில்தான் இந்த ஒலா ஸ்கூட்டருக்கான முன்பதிவினை ரூ.499 செலுத்தி மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.


இந்நேரத்தில் இந்த ஸ்கூட்டரில் உள்ள சிறப்பு அம்சங்கள் என்ன என அறிந்து கொள்வோம். 11544Wh பேட்டரியை 50 சதவீதம் சார்ஜ் செய்ய 18 நிமிடங்கள் போதுமானதாக உள்ளது. இதில் 75 கிலோ மீட்டர் வரை பயணிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்கூட்டரை முழுமையாக சார்ஜ் செய்வதற்கு ஒரு மணி நேரம் ஆகும் நிலையில், இதன் மூலம் 100முதல் 150 கிமீ தூரம் வரைப் பயணிக்கலாம் என கூறப்படுகிறது.  


மேலும் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அதிகபட்சம் இரண்டு ஹெல்மெட்களை வைத்துக் கொள்ளும் அளவில் பூட் ஸ்பேஸ் கொண்டிருக்கிறது. இத்துடன் செயலி சார்ந்து இயங்கும் கீ லெஸ் வசதி வழங்கப்படும் என்றும் இதில் ப்ளூடூத் கனெக்டிவிட்டி வழங்கப்படும் வசதிகள் அமையவுள்ளதாகவும் நிறுவனம் தெரிவித்தது. ஆண்டுக்கு 20 லட்சம் ஸ்கூட்டர்களை தயாரிக்கும் முதல் அலகு தயாராகிவிட்டதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது. இதற்காக தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரியில் 500 ஏக்கரில் உலகின் மிகப்பெரிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தொழிற்சாலையை ஓலா நிறுவனம் அமைத்து வருகிறது அடுத்த ஆண்டின் இறுதியில் இருந்து ஆண்டுக்கு ஒரு கோடி எலக்ட்ரிக் ஸ்கூட்டரை தயாரிப்பதுதான் அதன் இலக்காக உள்ளது எனவும் இந்த ஸ்கூட்டரின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் பற்றி இன்னும் முழுமையாக அறிவிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. ஆனால் அதற்குள் தனது இணையதளப் பக்கத்தில் முன்பதிவை தொடங்கிவிட்டது ஓலா. எனவே இன்று முதல் ரூ.499 ரூபாய் கொடுத்து ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை முன்பதிவு செய்துக்கொள்ளலாம் எனவும், விற்பனைக்கு வரும்பொழுது முன்பதிவு செய்தவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிச்சயம் தற்போதுள்ள சூழலுக்கு ஏற்ற வடிவமைப்புடன் வரக்கூடிய இந்த ஓலா ஸ்கூட்டர் மிகப்பெரிய புரட்சியினை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Also Read: ’ஒலிம்பிக் முடிச்சதும் ஐஸ்-க்ரீம் சாப்டலாம்!’ - பி.வி.சிந்துவை உற்சாகப்படுத்திய பிரதமர் மோடி..!


Car loan Information:

Calculate Car Loan EMI