குஜராத்தில் 8 வயது சிறுவனைத் தொடர்ந்து சாப்பிடுவதற்கு அழைத்தும், வர மறுத்தமையால் ஆத்திரத்தில் அவரது தந்தை உருட்டுக்கட்டையில் தாக்கியுள்ளார். சிகிச்சைக்காக மருத்துமனைக்கு அழைத்துச்சென்ற சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.


அம்மாவினை விட இந்த உலகில் குழந்தையினை பெற்ற தந்தைக்கூட பொறுமையாக பார்க்க முடியாது என்பது தான் நிதர்சன உண்மை. சாப்பிட மறுப்பது தொடங்கி எதாவது ஒரு பொருளைக் கேட்டு அடம்பிடிப்பது வரை தந்தையால் குழந்தையினை சமாளிக்க முடியாது. ஆத்திரத்தில் அடிக்கத்தான் செய்வார்கள். அப்படி ஒரு நிகழ்வு தான் குஜராத்தில் அரங்கேறியுள்ளது. ஆனால் தந்தைத்தாக்கியதில் இங்கு சிறுவன் உயிரிழந்தச் சோகம் நிகழ்ந்துள்ளது.  குஜராத் மாநிலம் ராஜ்கோட் பகுதியில் கலாவாட் சாலையில் உள்ள தனியார் குடியிருப்பு பகுதியில் பணிபுரிந்து வருபவர் தான் நேபாளத்தைச்சேர்ந்த சித்ராஜ். பல ஆண்டுகளாக இப்பகுதியில் காவலாளியாக பணிபுரிந்து வருவதாக கூறப்படுகிறது. இவருக்கு 8 வயதில் சவுரப் என்ற மகன் உள்ளார்.





  இச்சிறுவன் எப்பொழுதும் துறுதுறுவென இருப்பான் என கூறப்படும் நிலையில் தான், சம்பவம் நடந்த அன்று ஏதோ ஒரு பொருளை வைத்து விளையாடிக்கொண்டிருந்தாராம். இவரது தந்தை  மாலை நேரத்தில் ஏதாவது சாப்பிடுவதற்காக பல முறை அழைத்துள்ளார். ஆனால் சிறுவன் எனக்கு சாப்பாடு வேண்டாம் என தெரிவித்து வர மறுத்துள்ளார். கொஞ்ச நேரம் பொறுத்திருந்து பார்த்த 8 வயது சிறுவனின் தந்தை, நான் இவ்வளவு நேரம் கூப்பிட்டும் என்னை மதிக்கவும் இல்லை, சாப்பிட வரவும் இல்லை என்று ஆத்திரத்தில் திட்டியுள்ளார். இதோடு மட்டுமில்லாமல் உருட்டுக்கட்டையால் தாக்கியதோடு, தலையினை பிடித்து ஆத்திரம் தீரும் வரை சுவற்றில் வைத்து அடித்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து அழுதுக்கொண்ட இருந்த சிறுவன் அறைக்கு சென்று தூங்கியுள்ளார்.


மறுநாள் காலையில் எழுந்த சிறுவன், தந்தை அடித்த வலி தாங்க முடியாமல் அழுது கொண்டே இருந்துள்ளார். இதனையடுத்து சிறுவனின் பெற்றோர்கள் ராஜ்கோட்டில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளனர். சிறுவனில் உடலில் பல இடங்களில் காயங்கள் இருந்தமையால் என்ன நடந்தது? என மருத்துவர்கள் கேட்டப்பொழுது, சிறுவன் கீழே விழுந்து விட்டதாகத் தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சிறுவனுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளித்தப்பொழுதும், சிகிச்சையில் எந்தவித பலனும் இன்றி உயிரிழந்துவிட்டார். இதனையடுத்து சிறுவனின் உடல் பிரேத பரிசோதனை மேற்கொண்டப்பொழுது சிறுவனின் உடலில் பல இடங்களில் காயங்கள் இருப்பதும், தாக்கியதும் தெரிந்துள்ளது.





இதனையடுத்து சந்தேகம் அடைந்த மருத்துவர்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனையடுத்து உயிரிழந்த சிறுவனின் தந்தையிடம் விசாரணை நடத்தியப்போது, “ நான் தான் மகனைத் தாக்கியதாக ஒப்புக்கொண்டார். பின்னர் மகனைக்கொன்றதாக தந்தையின் மீது போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.