இந்த கார் S-கிளாஸ் மாடலின் Flagship வகையை சேர்ந்த ப்ரீமியம் கார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜெர்மானிய நிறுவனமான மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் 1926ம் ஆண்டு தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 95 ஆண்டுகளுக்கும் மேலாக தனது சேவையை அளித்து வரும் மெர்சிடிஸ் நிறுவனம், பல நாடுகளிலும் தனது கிளையை பரப்பியுள்ளது. இந்நிலையில் பிரபல பென்ஸ் நிறுவனம் 1994ம் ஆண்டு இந்திய சந்தையில் கால்பதித்தது என்பது குறிப்பிடத்தக்கது. 


இந்தியாவில் பென்ஸ். 


1994ம் ஆண்டு தனது கார் சேவையில் 68ம் ஆண்டை நிறைவு செய்த மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் அந்த ஆண்டே இந்திய சந்தைக்கு அறிமுகமானது. இந்திய சந்தையில் அறிமுகமான முதல் ஆடம்பர கார் வகை பென்ஸ் தான் என்று கூறப்படுகிறது. அப்போது தனது E கிளாஸ் மாடலான டபிள்யு 124 ஈ கிளாஸ் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்தது பென்ஸ் நிறுவனம். மேலும் புனே நகரில் தங்களுடைய உற்பத்தி மையத்தையும் தொடங்கியது. அன்று தொடங்கி இன்று வரை பல மாடல்களை இந்திய மார்க்கெட்டில் அறிமுகம் செய்து வருகின்றது பென்ஸ் நிறுவனம். இந்நிலையில் இந்த ஆடம்பர கார் நிறுவனம் தங்களுடைய Mercedes Benz S -Class Flagship Sedan காரை தற்போது வெளியிடவுள்ளது. 


Skoda Octavia 2021 Launched | இது கொஞ்சம் புதுசு ; நான்காவது ஜெனரேஷன் காரை அறிமுகம் செய்யும் ஸ்கோடா!


Flagship மாடல் கார்


பென்ஸ் நிறுவனம் தனது S-Class மாடலில் Flagship மாடலை தான் தற்போது வெளியிடுகிறது. இதுவரை வெளியான S டைப் கார்களில் இது ஸ்டைல், கம்போர்ட் மற்றும் செயல்திறனில் பல சிறப்பு அம்சங்களை கொண்டு வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.     
 
Mercedes Benz S Class Flagship Sedan 






ஸ்டாண்டர்ட் 4மேடிக் ஆல் வீல் டிரைவ் என்ற அசத்தல் ஆரம்பத்துடன் சிறப்பான பல வசதிகளோடு உருவாகி உள்ளது இந்த கார். தற்போது இந்திய சந்தையில் ஜூன் 17ம் தேதி முதல் விற்பனைக்கு வரும் நிலையில் இறக்குமதி செய்யப்பட்டே விற்பனைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், சில காலம் கழித்து உள்நாட்டில் அசெம்பிள் செய்து விற்கவும் பென்ஸ் முடிவெடுத்துள்ளது. டீசல் 400D 4மேடிக் மற்றும் பெட்ரோல் 450 4மேடிக் என இரண்டு வகைகளில் இந்தியாவில் விற்கப்படும். இந்தியாவில் மற்ற புதிய மெர்சிடிஸ் பயன்படுத்தப்படும் வழக்கமான OM656 இன்-லைன்-ஆறு வால்வ் டீசல் என்ஜின் தான் இதில் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் கூடுதல் சிறப்பு அம்சமாக மேற்குறிப்பிட்ட இரண்டு மாடல்களிலும் ஆல்-வீல் டிரைவுடன் 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.
 
மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் கிளாஸ் செடான் இந்தியாவில் 1.5 முதல் 2.5 கோடி வரை விற்பனையாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.


Car loan Information:

Calculate Car Loan EMI