ஸ்கோடா நிறுவனம் தனது புதிய நான்காவது ஜெனரேஷன் காரை இந்திய சந்தையில் வெளியிட்டுள்ளது. ஸ்கோடா ஆக்டாவியா என்ற அந்த கார் இரண்டு வேரியன்ட்டுகளில் இந்திய சந்தையில் அறிமுகமாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இங்கு புழக்கத்தில் உள்ள ஹூண்டாய் நிறுவனத்தின் எலன்ட்ரா காருக்கு போட்டியாக இந்த புதிய ஸ்கோடா ஆக்டாவியா இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலக அளவில் பிரபலமான வோல்க்ஸ்வேகன் (போக்ஸ்வேகன்) நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் ஸ்கோடா நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது. 1800-களின் இறுதியில் செக் குடியரசில் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் தற்போது உலக அளவில் பிரபலம்.
Mercedes Maybach Launch | இந்திய சந்தையில் அல்ட்ரா ஆடம்பர கார் - அனல்பறக்கும் விற்பனையில் பென்ஸ் மேபாக்
இரண்டு வேரியண்ட்டுகளில் வரும் இந்த காரின் நீளம் 4 ஆயிரத்து 689 மில்லிமீட்டர், அகலம் 1829 மில்லிமீட்டர் உயரம் 1469 மில்லிமீட்டர் மற்றும் வீல்பேஸ் 2680 மில்லி மீட்டர் ஆகும். பிரத்தியேக உட்புற அமைப்பை கொண்ட இந்த ப்ரீமியம் வகை இரண்டு வகைகளில் வெளியாகி உள்ளது. ஸ்கோடா ஆக்டாவியா ஸ்டைல் 25.99 லட்சத்திற்கும் ஸ்கோடா ஆக்டாவியா லாவ்ரின் & கிளெமென்ட் என்ற மாடல் 28.99 லட்சத்திற்கும் விற்பனையாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. லிட்டருக்கு 15 கிலோமீட்டருக்கு அதிகமாக செல்லும் என்று தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. ஸ்கோடா ஆக்டாவியாவிற்கான புக்கிங் நடைபெற்று வருகின்றது.
ஸ்கோடா நிறுவனம் இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதமும் தனது புதிய மாடல் கார் ஒன்றை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. ஸ்கோடா தனது குஷாக் என்ற எஸ்.யூ.வி-யை கடந்த ஏப்ரல் மாதத்தில் அறிமுகம் செய்தது. ஆனால் இந்த கார் சந்தையில் இன்னும் விற்பனைக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்கோடா கொடியாக் கார்களின் இருந்த அதே டேயில் அமைப்போடு 17 இன்ச் அல்லாய் வீல்கள் மற்றும் 188 எம்எம் கிரௌண்ட் க்லியரெண்ஸ்வுடன் இந்த வாகனம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த ஜூன் மாதம் வாக்கில் ஸ்கோடா குஷாக் ஆக்டிவ், ஸ்டைல் மற்றும் ஆம்பிஷன் ஆகிய மூன்று வேரிஎண்ட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்கோடா குஷாக் டாப் மாடல் கார்களில் சன்ரூஃப், காலநிலை கட்டுப்பாடு, வயர்லெஸ் ஸ்மார்ட்லிங்க் (ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் கார்ப்ளே), காற்றோட்டமான தோலினாலான இருக்கைகள், பயணக் கட்டுப்பாடு அமைப்பு, டயர் அழுத்தத்தை கண்காணிக்கும் அமைப்பு, ஆறு ஏர்பேக்குகள் மற்றும் பின்புற ஏசி வென்ட்கள் என்று பல அம்சங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Car loan Information:
Calculate Car Loan EMI