இந்தியாவின் பெட்ரோல், டீசல் பயன்பாட்டை குறைக்கும் நோக்கத்திலும், சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்கும் நோக்கத்திலும் மின்சாரத்தில் இயங்கும் வகையிலான வாகனங்களுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. அந்த வகையில் மின்சார பயன்பாட்டில் பேருந்து NueGo .


ஹெல்ப்லைன்:


நாட்டின் முக்கிய நகரங்களுக்கிடையிலான இந்த பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், மின்சார வாகன பயன்பாட்டில் புதிய அம்சமாக பெண் பயணிகளுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட பிரத்யேக ஹெல்ப்லைன் எண்ணை NueGo அறிமுகப்படுத்தியுள்ளது.


பேருந்து பயணத்தை பாதுகாப்பானதாகவும், பெண் பயணிகளுக்கு வசதியாகவும் மாற்றும் வகையில் இது மேற்கொள்ளப்பட்டுள்ளது. NueGo  அறிமுகப்படுத்தியுள்ள ஹெல்ப்லைன் எண் 1800 267 3366. இந்த ஹெல்ப்லைன், 24/7 செயல்படும், பெண்கள் எவருக்கும் பயணம் தொடர்பான கவலைகளுக்கு உடனடி உதவி கிடைப்பதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.


பெண்கள் பாதுகாப்பு


NueGo பேருந்துகளில் CCTV கண்காணிப்பு, GPS லைவ் டிராக்கிங், டிரைவர் ப்ரீத் அனலைசர் சோதனைகள் மற்றும் பல வசதிகள் உள்ளன. கிரீன்செல் மொபிலிட்டியின் சி.இ.ஓ. தேவேந்திர சாவ்லா, "NueGoவில் பெண் பயணிகள் தங்கள் பயணம் முழுவதும் மதிப்புமிக்கதாகவும், பாதுகாப்பாகவும், வசதியாகவும் இருக்க வேண்டும் என்று நாங்கள் உணர்கிறோம். வணிகத்தின் இயல்பிலேயே இந்த விதிமுறை புனிதமானதாகும். பெண்கள் பயணம் செய்யும் போது வசதியாகவும் பாதுகாப்பாகவும் இருப்பதை உறுதி செய்வதற்காக தொழில்துறை முழுவதும் இது ஒரு நடைமுறையாக மாறும் என்று நாங்கள் நம்புகிறோம். என்றார்.


இந்தியாவின் முதல் முற்றிலும் பெண்களுக்கான பெண்களால் இயக்கப்படும் நகரங்களுக்கு இடையேயான பேருந்தை அறிமுகப்படுத்தியதற்காக NueGo 'ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்' மற்றும் 'இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்' ஆகியவற்றில் இடம்பெற்றுளள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


இதேபோல, பிற பேருந்துகளிலும் பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளும் அம்சங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க: New Bike Launch December: டிசம்பரில் இந்தியாவில் அறிமுகமாக உள்ள மோட்டார் சைக்கிள்கள் - இத்தனையுமா?


மேலும் படிக்க: December Launch Cars: டிசம்பரில் இந்திய சந்தைக்கு வரும் புதிய கார்கள் - மிட் ரேஞ்ச் டூ டாப் எண்ட் வரை


Car loan Information:

Calculate Car Loan EMI