New Bike Launch December 2023: டிசம்பர் மாதத்தில் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ராயல் என்ஃபீல்ட், ஹிமாலயா மற்றும் சுசுகி உள்ளிட்ட பல்வேறு முன்னணி நிறுவனங்களின் புதிய மோட்டார் சைக்கிள் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.


மோட்டார்சைக்கிள் ஆட்டோமொபைல் சந்தை:


நவம்பர் மாதத்தில் பல ஆட்டோமொபைல் உற்பத்தி நிறுவனங்கள் தங்கள் புதிய மோட்டார்சைக்கிள் மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகப்படுதின. பட்ஜெட், ஸ்போர்ட்ஸ், அட்வென்சர் மற்றும் மின்சாரம் என பல்வேறு வகையான வாகனங்களை உற்பத்தி நிறுவனங்கள் சந்தைக்கு கொண்டு வந்தன. ராயல் என்ஃபீல்ட் ஹிமாலயன் 450, ஹோண்டா சிபி350, போன்ற பல மாடல்கள் அறிமுகமாகின. அந்த வகையில் டிசம்பர் மாதமும் பல்வேறு உற்பத்தி நிறுவனங்களின் புதிய மாடல் மோட்டார்சைக்கிள்கள் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் சில மாடல்களின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சில மாடல்களின் வெளியீட்டு தேதி தகவல்களின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது.


டிசம்பரில் வெளியாகும் மோட்டார் சைக்கிள் மாடல்கள்:  



  • யமஹா ஆர்3 மற்றும் யமஹா எம்டி-03 ஆகிய மாடல்கள் டிசம்பர் 15 ஆம் தேதி வெளியிடப்படும் என உறுதி செய்யப்பட்டுள்ளது - இதன் விலை 4 லட்ச ரூபாய் வரை நிர்ணயிக்கப்படலாம்

  • Suzuki SV 650 மாடல் மோட்டார் சைக்கிள் டிசம்பர் மாதத்தில் களமிறக்கப்படலாம்

  • Aprilia 457 மாடல் மோட்டார் சைக்கிளும் டிசம்பர் மாதத்தில் வெளியிடப்படலாம்

  • புதிய Yamaha YZF R3 மாடலும் டிசம்பரில் அறிமுகம் செய்யப்படலாம்

  • Husqvarna Norden 901 மாடல் மோட்டார் சைக்கிளும் டிசம்பர் மாதத்தில் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அறிமுகப்படுத்தப்படலாம்

  • ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 450 மாடல் டிசம்பர் 20 அன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது - இதன் விலை 2.60 லட்சம் வரை நிர்ணயிக்கப்படலாம்

  • Yamaha XSR155 மாடல் டிசம்பர் 22ம் தேதி அறிமுகபடுத்தப்படலாம் - இதன் விலை 1.40 லட்சம் வரை இருக்கலாம்

  • Yezdi Roadking மாடல் டிசம்பர் 4 வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது - இதன் தொடக்க விலை 2 லட்சத்து 60 ஆயிரம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

  • கைனடிக் இ-லூனா மாடலும் டிசம்பரில் வெளியிடப்படலாம் என  கூறப்படுகிறது

  • பெனெல்லி நிறுவனத்தின் புதிய 752S மாடல் டிசம்பரில் அறிமுகப்படுத்தப்படலாம் - இதன் விலை அதிகபட்சமாக 7 லட்ச ரூபாய் வரை நிர்ணயிக்கப்படலாம்

  • ஹோண்டா ரெபெல் 1100, டிசம்பரில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

  • ஹோண்டா பிசிஎக்ஸ் 125 (ஸ்கூட்டர்). டிசம்பரில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

  • ஹோண்டா ஆக்டிவா 7ஜி டிசம்பரில் வெளியாக வாய்ப்புள்ளது

  • கவாஸாகி வெர்சிஸ் எக்ஸ் -300 டிசம்பரில் வெளியிடப்படும் எதிர்பார்க்கப்படுகிறது.


மேற்குறிப்பிடப்பட்ட மாடல்கள் மட்டுமின்றி மேலும் சில நிறுவனங்களின் மோட்டார் சைக்கிள் மாடல்களும், இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் டிசம்பரில் அறிமுகப்படுத்தப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


Car loan Information:

Calculate Car Loan EMI