December Launch Cars: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் டிசம்பர் மாதத்தில், லாம்போர்கினி தொடங்கி டாடா வரையிலான பல நிறுவனங்கள் தங்களது புதிய மாடல் கார்களை அறிமுகப்படுத்த உள்ளன.


இந்திய ஆட்டோமொபைல் சந்தை:


பல ஆட்டோமொபைல் உற்பத்தி நிறுவனங்கள் தங்கள் புதிய கார்களை சிறந்த பாதுகாப்பு. செயல்திறன் மற்றும் கவர்ச்சிகரமான புதிய வடிவமைப்புகளுடன் நவம்பர் மாதத்தில் அறிமுகப்படுத்தின. இந்த சூழலில் டிசம்பர் மாதத்தில் வெளியாகும் என உறுதி செய்யப்பட்டுள்ள, கார் மாடல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.  ஆண்டு இறுதி மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகை ஆகியவற்றை கருத்தில் கொண்டு தொடக்க நிலை கார்கள் தொடங்கி, பல உயர் ரக சொகுசு கார்களும் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. உள்நாட்டு நிறுவனமான டாடா தொடங்கி லாம்போர்கினி உள்ளிட்ட பல வெளிநாட்டு நிறுவனங்களும் டிசம்பர் மாதத்தில் தங்களது புதிய மாடல் கார்களை அறிமுகப்படுத்த உள்ளன. இதில் சில கார்களின் வெளியீட்டு தேதி இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படாவிட்டாலும், வெளியாகும் தேதி தொடர்பான தகவல்கள் அடிப்படையில் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது.


டிசம்பரில் வெளியாக உள்ள கார்கள்:



  • லம்போர்கினி ரெவல்டோ, டிசம்பர் 6 ஆம் தேதி வெளியிடப்படும் என உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் விலை 10 கோடி ரூபாய் வரை நிர்ணயிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • Lexus LM, டிசம்பர் 2 ஆம் தேதி வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது - இதன் தொடக்க விலை 1.2 கோடி ரூபாய் வரை நிர்ணயிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன

  • டாடா பஞ்ச் டிசம்பரில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

  •  Renault Arkana டிசம்பர் 5ம் தேதி ஆம் தேதி வெளியிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது - இதன் தொடக்க விலை ரூ.20 லட்சமாக இருக்கலாம்.

  •  டொயோட்டா அர்பன் க்ரூஸர் டைசர் மாடல் காரும் டிசம்பரில் வெளியாகலாம்

  • Lexus UX டிசம்பரில் அறிமுகப்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது

  • Mercedes-Benz EQA டிசம்பர் 5ம் தேதி அன்று வெளியிடப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன - இதன் தொடக்க விலை 60 லட்சம் ரூபாய் வரை நிர்ணயிக்கப்படலாம்

  • எம்ஜி 3 மாடல் காரும் டிசம்பரில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

  • ஆடி A3 டிசம்பர் 15 அன்று வெளியிடப்படும் எதிர்பார்க்கப்படுகிறது - இதன் தொடக்க விலை 35 லட்ச ரூபாயாக நிர்ணயிக்கப்படலாம்

  • ஃபோர்ஸ் கூர்கா 5 கதவு டிசம்பரில் வெளியாகும் எதிர்பார்க்கப்படுகிறது

  • BMW M3 மாடல் கார் டிசம்பர் 14ம் தேதி அன்று வெளியிடப்படும் என கூறப்படுகிறது - இதன் தொடக்க விலை 65 லட்சம் ரூபாய் வரை நிர்ணயிக்கப்படலாம்

  • 2023 லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் எவோக் டிசம்பர் 14 அன்று வெளியாகலாம் - இதன் தொடக்க விலை 77 லட்ச ரூபாய் வரை இருக்கலாம்

  • MG Baojun 510 மாடல் டிசம்பர் 15 அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

  • Tata Altroz Racer மாடல் டிசம்பர் 20 அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

  • Toyota Innova Crysta 2.4 G 8 STR டிசம்பர் 15ம் தேதி வெளியாகலாம்

  • BMW X6, டிசம்பர் 25 அன்று வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது - இதன் விலை 90 லட்ச ரூபாய் வரை நிர்ணயிக்கப்படலாம்


Car loan Information:

Calculate Car Loan EMI