Best Honda Bikes: பைக் சந்தையில் அசத்தும் ஹோண்டா நிறுவனத்தின், டாப் 5 மாடல்கள் பற்றிய விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.


ஹோண்டா எஸ்பி 125:


ஹோண்டா SP 125 மாடலின் விலையானது 86 ஆயிரத்து 467 (எக்ஸ்-ஷோரூம்) ரூபாயில் இருந்து தொடங்குகிறது. அதற்கு இணையாக இதில் பொருத்தப்பட்டுள்ள 124 cc திறன் கொண்டஇன்ஜின், லிட்டருக்கு 65கிமீ மைலேஜை வழங்குகிறது. இது 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் வருகிறது மற்றும் 116 கிலோகிராம் எடை கொண்டது. எரிபொருள் டேங்க் ஆனது 11.2 லிட்டர் வரையிலான கொள்ளளவை கொண்டுள்ளது. ஹோண்டா SP 125 மாடலின் இருக்கை 790 மிமீ உயரத்தில் அமைந்துள்ளது.


ஹோண்டா ஷைன்:


ஹோண்டா ஷைன் மாடலின் விலை 80 ஆயிரத்து 250 ரூபாயில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்குகிறது. இது 123.94 cc இன்ஜினை கொண்டு லிட்டருக்கு 55 கிமீ மைலேஜை வழங்குகிறது. இந்த பைக்கில் 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் இணைக்கப்பட்டுள்ளது.  113 கிலோகிராம் எடையிலான இந்த வாகனம், 10.5 லிட்டர் கொள்ளளவு கொண்ட எரிபொருள் டேங்க் பெற்றுள்ளது. ஹோண்டா ஷைன் மாடலின் இருக்கை உயரம் 791 மிமீ.


இதையும் படியுங்கள்: கார் பிரியர்களே தயாரா..! தார் ராக்ஸ் டூ டாடா கர்வ் - ஆகஸ்ட் மாதம் வெளியாக உள்ள 8 கார் மாடல்கள்..!


ஹோண்டா SP160:


ஹோண்டா SP 160 மாடல் மோட்டார்சைக்கிளின் விலை , ஒரு லட்சத்து 17 ஆயிரம் ரூபாய் முதல் தொடங்குகிறது. இது 162.71 சிசி இன்ஜினைக் கொண்டுள்ளது மற்றும் லிட்டருக்கு 51 கிமீ மைலேஜை வழங்குகிறது. இந்த பைக் 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனை கொண்டுள்ளது. 139 கிலோ எடையைக் கொண்டுள்ள இந்த வாகனம், 12 லிட்டர் கொள்ளளவு கொண்ட எரிபொருள் டேங்கை பெற்றுள்ளது. ஹோண்டா SP 160 மாடல் மோட்டார்சைக்கிளானது 796 மிமீ உயர இருக்கையை  கொண்டுள்ளது.


இதையும் படியுங்கள்: சந்தைக்கு வந்தது நிசான் எக்ஸ் டிரெயில் கார் மாடல் - லிமிடெட் எடிஷனின் விலை, சிறப்பம்சங்கள் என்ன?


ஹோண்டா ஹார்னெட் 2.0:


ஹோண்டா ஹார்னெட் 2.0 விலை (எக்ஸ்-ஷோரூம்), ஒரு லட்சத்து 39 ஆயிரம் ரூபாயில் இருந்து தொடங்குகிறது. இது 184.4 சிசி இன்ஜினை கொண்டு,  லிட்டருக்கு 42.3 கிமீ மைலேஜை வழங்குவதாக ARAI-மதிப்பீடு வழங்குகிறது. இந்த பைக் 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் வருகிறது. 142 கிலோ எடையும், 12 லிட்டர் கொள்ளளவு கொண்ட எரிபொருள் டேங்கையும் பெற்றுள்ளது. ஹோண்டா ஹார்னெட் 2.0 இருக்கை உயரம் 790 மிமீ ஆகும்.


ஹோண்டா யூனிகார்ன்:


ஹோண்டா யூனிகார்ன் மாடல் மோட்டார்சைக்கிளின் விலை (எக்ஸ்-ஷோரூம்), ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாயில் இருந்து தொடங்குகிறது. இது 162.7 சிசி இன்ஜினைக் கொண்டுள்ளது மற்றும் லிட்டருக்கு 50 கிமீ மைலேஜை வழங்குகிறது. இந்த பைக் 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் வருகிறது. 140 கிலோ கர்ப் எடையுடன்,  13 லிட்டர் கொள்ளளவு கொண்ட எரிபொருள் டேங்கையும் பெற்றுள்ளது. ஹோண்டா யூனிகார்ன் மாடல்  இருக்கை உயரம் 798 மிமீ ஆகும்.


Car loan Information:

Calculate Car Loan EMI